ஓர் ஐம்பது மாடிக் கட்டிடத்தின் பலகணி1யிலிருந்து வெளியில் எட்டிப்பார்த்தால் சிலர் மயக்கம் அடைந்துவிடுதல் அறிந்துள்ளோம். வான்படைஞர்க்கு இத்தகு காட்சிகள் இயல்பினும் இயல்பாகும். இவர்கள் பறந்துகொண்டே விளையாடும் திறம் பெற்றவர்கள் ஆவர். முதல்முறை போயிலை2 போட்டால் மயக்கம் வருகிறது.பழகிப் போய்விட்டால் அதிகப் போயிலை கேட்கும். பண்டு சிங்கப்பூரில் போயிலை வணிகம் செய்தவர்கள் தேவர் அண்ட் கம்பெனி ( தேவர்கள் குழும)க்காரர்கள். போயிலை கொண்டுபோய்ப் பகிர்மானம் செய்தவர்க்குப் "போயிலைக்காரர்" என்று அவருடைய வாடிக்கையாளர்கள் பெயர் கொடுத்திருந்தனராம். அக்காலங்களில் மயக்கப் பொருட்களைப் புழங்குவதில் தமிழர் பெயர்பெற்றோர் ஆவர். இது 1940 - 50 வாக்கில் என்பர். அப்போது கள்ளுக் கடைகளும் சிங்கப்பூரில் இயங்கிவந்தன. சிங்கப்பூரில் இக்கடைகளை ஒழித்த பெருமை கலைச்சார்புத்துறை அமைச்சர் மறைந்த உயர்திரு இராச ரத்தினத்தி னுடையது ஆகும்.
மயக்கப் பொருள்களைப் பற்றி முன்னர் எழுதியுள்ளோம்.இங்கு ஓர் இடுகை உள்ளது. சொடுக்கி வாசிக்கவும்.3
மயக்குவது > மது ( இடைக்குறை).https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html [ சுருக்கச்சொல்]
இச்சொல்லை அடிச்சொல்லிலிருந்து அணுகி ஆய்வு செய்யலாம்.
சுருக்கமாக:
அடிச்சொல்: மர்.
மர் > மய் > மய > மயங்கு (மய்+ அம்+ கு) > மயங்குவது, இடைக்குறைந்து: மது.
மர் > மய் >மயக்கை > மசக்கை.
மர் > மரல் }
மர் > மருள்} - மயங்கி அல்லது சிந்தனையற்று மனிதன் இயங்கும் நிலை.
மர்> மரம்: மண்ணில் முளைத்து வளரும் உணர்ச்சியற்ற அறிவுக் குறை உயிர்.
மர் > மரி> மரித்தல். உணர்ச்சியற்ற, உயிர்விட்ட நிலை அடைதல்.
மர் > மரவை: மரத்தாலான கோப்பை வைக்கும் தட்டு. வை என்ற விகுதி பொருத்தமானது.
ஒப்பீட்டுக்குப் பல உள. ஒன்று இங்கு:
விர்> விய் > வியன்( விரிவு). "வியனுலகு"
விர்> விரி> விசி: விசிப்பலகை.
விர் >விரு > விசு > விசும்பு: வான்.
விர் >விய் >விய் +ஆல் + அம் > வியாலம்> விசாலம். ( ய - ச திரிபு)
விர்>விய்> வியா > வியா+பர+ அம் = வியாபாரம்: விலைப்பொருட்டுப் பொருள்களை விரிந்து பரவச் செய்தல்.
விர்> விரு > விருத்தம் : விரிவுடைய பாவகை.
விர்> விரு> விருத்தி.( சரிசெய்து விரிவாக்குவது) .
இது மது என்ற சொல்லுக்கு விரிவான ஆய்வுக்கு வழிகோலும்.
மர் > ம > மது. (கடைக்குறை,பின் து விகுதி பெற்ற சொல்) என்பது மிக்கச் சுருக்கமான விளக்கம்.
மருதம் அடிச்சொல்: மர்
மக்கள் மயங்கும் ( தங்கிக் கலக்கும்) நிலம்
எத்தொழிலோரும் நிலையான வாழ்க்கையை மேற்கொள்ள முனையுங்கால் வந்து கலந்தமரும் நிலப்பகுதி. ஆடு மாடு வளர்த்தாலும் உணவு தடையின்றி வேண்டுமாயின் விவசாயத்தில் ஈடுபடுதல் செய்வர். மீன்பிடித் தொழிலரும் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயத்தில் புகுந்தால் உணவுக்குக் குறையிருக்காது. இவ்வாறு ஒவ்வொரு நில வாழ்நரையும் பொருத்தி அறிந்துகொள்க.
விவசாயம் : இங்கு விளக்கப்பட்டுள்ளது.
https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html
வேற்று நிலத்தொழிலரை ஈர்க்கக் காரணம் தொழிலின் உள்ளமை சிறப்பே.
யாரும் மருவும் தொழில். யாரும் வந்து மயங்குறு தொழில்.மயங்குதல் - கலத்தல். தலைசுற்றுதல் என்று பொருட்சாயல்கள் பல.
ஆடு மாடு நாய் பூனை என யாவற்றுக்கும் உணவு துவன்று உயிர்களைப் பேணும் தொழிலும் விவசாயம் என்னும் உழவுதான். சொல்லுக்கும் அதன் அமைப்புக்கும் காரணம் அறிகிறோமேஅன்றி, இது விளம்பரமன்று.
இது சொல்லமை காலத்துச் சிறப்புக் கூறியது.
உழவை வள்ளுவன் புகழ்ந்ததும் உணவு விளச்சலுக்கு அது ஆதியானதால்தான். ஆதி - ஆக்க மூலம். கள் முதலியவை உண்டாக்குதல் துணைத் தொழில்கள்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
தொடர்பு காட்டும் மற்ற இடுகைகள்:
1. ராஜஸ்தான் விவசாயிகள் : https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_15.html
2. விவசாயம் https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html
தொல்காப்பியத்தில் : " வேளாண் மாந்தர்க்குப் பிறவகை நிகழ்ச்சி இல்" என்பது: படைக்கு இவர்களை எடுப்பதில்லை. படைக்கு வேண்டிய உணவும் இவர்களிட மிருந்தே வருவதால். இவர்களும் சண்டைக்குப்போனால் படையினர் எதைச் சாப்பிடுவது?. அதுதான் காரணம். An army moves on its stomach, said Napoleon.
படைக்கு ஆக்கிச் சோறுபோட்டவர்கள் படையாக்கிகள்.
அடிக்குறிப்புகள்:
1 பண்டைக்காலத்தில் காற்றதர்கள் ( சன்னல்கள்) பல துளைகளை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு துளையும் ஒரு கண். பலகண் உடைமையால் பலகணி என்றுபெயர்.
2 போயிலை - புகையிலை. போயிலை என்பது பேச்சுவழக்குச் சொல்.
3 வாய் > வாயித்தல் > வாசித்தல். ( ய - ச திரிபு).