உலைபற் றியிலா அரியும் நீரும்
நிலையிற் சமைந்து வருமோ சோறும்?
அலைகள் இலவாய் அடங்கிய தேர்தல்
விலைகொள் வாக்கால் கடந்திடு வாரோ?
இது தமிழ்நாட்டுத் தேர்தல் (2021) பற்றிப் பேசப்பட்ட ஒரு கருத்தை மேற்கொண்ட ஒரு பாடல். பார்க்கப் போனால் அப்படித்தான் தோன்றுகிறது.
உரை பற்றி இலா - உலையில் நெருப்பிடாமல்,
அரியும் நீரும் - கிளைந்து வைத்த அரிசியும் நீரும்,
நிலையில் - அப்படியே விட்டுவிட்டால்,
சமைந்து வருமோ சோறும் - (சாதம்) தானே வெந்து சோறு ஏற்படுமோ?
அலைகள் இலவாய் - அரசியல் அலைகள் ( எதிர்ப்பு, வாதங்கள் முதலியவை)
இல்லாதனவாக,
அடங்கிய தேர்தல் - அமைதியாக (கிளர்ச்சிகள் போல் இல்லாமல் ) நடந்து முடிந்த இந்தத் தேர்தல்,
விலைகொள் வாக்கால் - பணம் புழங்கி இய ந்திரத்தினுள் சென்ற வாக்குகளால்,
கடந்திடுவாரோ - வெல்ல முயல்வோர் வென்றிடுவார்களோ?
உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். நன்றி.