இன்று சிரோமணி என்ற அழகிய சொல்லின் வேர்களை அறிந்துகொள்வோம்;
இதைச் சுருக்கமாகவே அறிவோம்.
சிற - வினைச்சொல். சிறத்தல். முன்னிருந்ததைவிட இன்னும் நலமுடையதாய் ஆவதே சிறத்தல். சீர் பெறுதல்.
ஓ - ஓங்குதல். மிகுதல்.
மணி - இதுவும் தமிழ்ச்சொல். மண்ணுதல் - தூய்மை அடைதல். ( நீரினால் கழுவப்பட்டிருத்தல்). உயர்ந்த (பொன்னும்) மணி(யும்) அதன் கலப்புகளுடன் தான் மண்ணிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது. அது மனிதனால் தூய்மை பெற்றே உயர்வை அடைகிறது. " மணியாகிறது". மணியை ஒளிபெறச் செய்வது ஒரு தொழிலாளி.
மண்ணுதல்.
மண்ணு + இ > மண்ணி > மணி
ண் தொலைந்தது இடைக்குறை.
மண்ணுமங்கலம் என்ற பழந்தொடர் கருதுக.
சிற + ஓ + மணி
ஓமணி = ஓங்கும் மணி. அப்பொருள் பெற்ற புத்தொளியைக் குறிக்கிறது. இவ்விடத்து இத்தொடர் வினைத்தொகை.
சிற+ ஓ + மணி = சிறோமணி - சிரோமணி. ஓரெழுத்து மாற்றமுற்ற சொல்.
புலவர்மணி, கவிமணி, கலைமணி முதலிய புகழ்த்தொடர்களை உன்னுக.
மூலத் தமிழ்ப்பதங்களை ஈண்டு காட்டினோம்.
அறிக.
மகிழ்க.