சங்க காலத்திலும் அது மருவிய காலத்திலும், தமிழர் கெடுதல் அல்லது தீமை எள்ளளவும் கலவாத வாழ்க்கையை உன்னி வாழ்ந்தனர் என்று நம் இலக்கியங்கள் சாற்றுகின்றன. அவர்கள் ஒரு மேலான இனமாக வாழ முற்பட்டனர். இக்காலத்தில் தமிழரல்லாதார் பண்பாட்டுக் கூறுகள் யாவை என்பதைத் தமிழிலக்கியம் பெரிதும் காட்டவில்லை. பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு ஆதலின் அவர்கள் அத்தகைய செய்திகளைத் தம் இலக்கியத்திற் பெரிதும் பதிவு செய்திட்டிலர் என்பதே சரியாகும். தம் மேலான பண்புகளைக் கூறியவிடத்தும் பிறர்தீமை சொல்லாதமைதலே சான்றாண்மை ஆகும்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 2 ஜனவரி, 2021
கெடுதலிலும் நன்மை காணும் நன்னம்பிக்கை - தமிழர்பண்பாடு
நகர் உலா
தந்தையுடன் நகர் சுற்றிப் பார்த்த ஒரு பிள்ளை சொல்வது
போலும் இக்கவி:
உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து
தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த
சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட
ஒருநகர் முற்றும் வசம்'
தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி
இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்
செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்
கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.
உந்துவண்டி - ( கார்).
சிறுநகை - புன்னகை
சுட்ட - காட்ட (சுட்டிக்காட்ட)
நன்கு நோக்கா - நல்லபடி பார்க்காத
செல்வார் - கடந்து போகிறவர்
வருவார் - (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)
வருபவர்
கையசைக்க - (குழந்தையைக் கண்டு) தம்
கரங்களை ஆட்ட
மெல் - மென்மையான
என் பால் - என் மேல்
வாஞ்சை - அன்பு
வெள்ளி, 1 ஜனவரி, 2021
2021 புத்தாண்டு வாழ்த்து விளக்கம்
வியாழன், 31 டிசம்பர், 2020
வருக புத்தாண்டே 2021
இருபதிரு பத்தொன்றே வருக நீயே
இனியநல்ல ஆண்டாக விரிக நீயே
இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்
இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை
பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;
பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.
அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்
அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.
வியாழன், 31 டிசம்பர், 2020
வருக புத்தாண்டே 2021
இருபதிரு பத்தொன்றே வருக நீயே -
இனியநல்ல ஆண்டாக விரிக நீயே
இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்
இப்போது பக்கத்தில் வந்துவிட்டான்.
இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை
பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;
எல்லா இனிய உயிர்களும் வளர்ச்சி பெற்று
அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்
அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.
இப்பாடலின் பொருள் மேற்கண்டவாறு.