தார்மீகம் என்பது வடசொல் என்று சொல்வர்.
இச்சொல்லில் யாம் சுட்டிக்காட்ட விழைவது என்னவெனில், இச்சொல்லின் கையாளப்பட்ட திரிபு, தமிழ்த் திரிபு விதிகளைப் பின்பற்றியதே.
இவற்றைப் பாருங்கள்:
கரு + மழை - > கார்மழை.
கரு + திகை > கார் + திகை > கார்த்திகை
( திகை என்பதே பின் திசை என்று திரிந்தது. இது கிழக்கு, இது மேற்கு என்று திகைக்கப்பட்டதே திசை தீர்மானப்பட்டது திகை> திசை )
கார்த்திகை > கார்த்திக்.
பரு > பார் > பார்வதி. மலைமகள்.
மரு > மார் > மார்பு. ( உடலை மருவி நிற்கும் உறுப்பு).
வரு என்பது வார் என்று திரியும். வாராய் விளி.
தரும இ(க்)கு அம் என்பது இதன்படியே தார்மீகம் என்று திரிந்தது.
இக்கு என்பது ஒரு சாரியை. இகு என்று குறைந்து இடைநிலையாய் நின்றது.
இகு அம் > ஈகம் என்று சாரியையின் முதல் நீண்டது எனினும் ஆம்.
ஈதல் என்ற சொல்லே கு என்ற சாரியையுடன் ஈகம் என்று வந்து பின் தார்ம ஈகு அம் = தார்மீகம் என்றாயது எனினுமாம்.
தருமத்தால் ஈயப்படுவது அல்லது அதிலிருந்து வரப்பெறுவது.
மரை ஈசன் என்ற புணர்ப்பு மாரீசன் என்று முதல்நீண்டதும் காண்க.
தமிழ்த்திரிபு முறையையே இச்சொல் பின்பற்றியது, பிற சொற்களும் இவ்வாறே.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.