ஆட்சேபம் என்ற சொல் நல்ல தமிழ்ச்சொல் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம் .இராணுவத்துக்கு ஆளெடுப்பதை ஒட்டி எழுந்த சொல்லே "ஆட்சேபம்" ஆகும். ஆட்சேர் + பு+ அம் = ஆட்சே(ர்)பம். படைக்கு ஆள்சேர்க்குங்கால் வேண்டாம் வேண்டாம் மாட்டேன் மாட்டேன் என்று கதறுவார்கள், பண்டைக்காலத்தில். அதுவும் ஒரே மகன் வைத்திருப்பவர்கள் படும்பாடு கேட்கவே வேண்டாம். கால்கை நொண்டியானால் விட்டுவிடுவார்கள். நொண்டி வேண்டாம் என்பதும் ஓர் ஆட்சேபமே ஆகும். சேப்புதல் என்றால் தங்குதல். நொண்டி தங்கிவிடுவான். நொண்டியை எடுப்பதில் மறுப்பினால் ஆட்சேப்பு+ அம் = ஆட்சேப்பம் > ஆட்சேபம் எனக் காண்க. இடைக்குறைச் சொற்கள் இவை எனல் உன்னுக.
பொருள்முரண் இடைக்குறைச் சொற்களிலும் பிறவற்றிலும் ஏற்படும்.
இவற்றையும் வாசித்துக்கொள்ளுங்கள்:
ஆட்சேபம் https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_4.html
ஆட்சேபித்தல் என்னும் வினைச்சொல் ஒரு பின்னமைப்புச் சொல்.
இராணுவம் என்பதோ அரணுவம் என்பதன் திரிபு: அகரமாகிய தலைபோய், பின்னிருந்த தலைநீண்டு, அப்புறம் இலக்கணம் போற்ற, ஓர் இகரம் பெற்று அமைந்த சொல்லாம். அரணன் > ராணா; அரணி > ராணி. இவர்கள் அரண்வாழ் ஆட்சிமேலோர்.
இங்குக் காண்க.
இராணுவம் : https://sivamaalaa.blogspot.com/2020/10/blog-post_19.html
அரசாட்சி முறை தென்பகுதியிலிருந்தே வடக்கில் சென்றது. வடக்கில் இலடாக்கு, திபேத்து முதலிய இடங்களில் அரசுமுறைகள் பண்டைநாட்களில் சரியாக இயங்கவில்லை என்னலாம்.
சேர் சேர்தல் என்பது இராணுவத்தில் சேர்தலையும் குறிக்கும். சேர்வை எனின் சேனை என்றும் பொருள். சேர்> சேர்ந்நை > சேனை ஆகும். அன்றி, 0னை விகுதியும் உள்ளது. பா> பானை ( அகன்றவாயுள்ள பாத்திரம்.) பர > பார்> பா. ஒ.நோ: வரு> வார் > வா. (வருக, வாரீர், வாங்க). பா என்பது அகன்றிருத்தல் குறிக்க, 0னை விகுதி பெற்று பானை ஆதல்போல், சேர் > சே> சேனை ஆகும்.
( ந்நை ) >னை.
சேர் > சேர்நர் > சேர்ந்நை > சேர்னை > சேனை என்று ஒலியமைப்பினைக் கண்டுகொள்க.
ஓட்டு > ஓட்டுநர் போல. ( சேர்நர்).
குறிப்பு:
சேனை https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html - இங்குக் காண்புறாத விரிவரைவு சில இந்த முன்போந்த இடுகைக்கண் தரப்பட்டுள்ளது. சேர் அல்லது அதனுடன் அணுக்க உறவுப் பதம் எதிலிருந்த வந்ததாக இச்சொல்லைக் காட்டினும் அஃது நிலையொக்கும் என்றுணர்க.
விரிவரைவு:
விரி > வி.
வரை - வர்
அம் - அமைவு குறிக்கும் விகுதி.
வி + வர்+ அம் = விவரம்.
இப்படி எழுதினால் அது தமிழென்பது உடன் காண்தரும் அறிக.
அறிக.