புதன், 8 ஏப்ரல், 2020

அபத்தம்

இனி அபத்தம் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

இதிலிருப்பவை இரண்டு உள்ளீட்டுச் சொற்கள்.

அவி + அற்று என்னும் இரண்டையும் மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.

இந்த அபத்தமென்னும் திரிசொல் அதன் முந்துவடிவத்தில் அவத்தம் என்று இருந்தது.  வகர பகரப் போலியைப் பின்பற்றி  இது பிற்காலத்தில் அபத்தம் என்று திரிந்துவிட்டது.  வகரம் பகரமாவதை  > 1. வகு > பகு 2. வசந்த > பசந்த் முதலிய வற்றால் அறியலாம். பகர வகரப் போலிகள் இந்திய மொழிகள் மட்டுமின்றிப் பிறமொழிகட்கிடையும் காணக்கூடியவை.   ( Not language-specific).  இத்திரிபு பல இடுகைகளிற் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது.

அவியாகி அற்றுப்போவது அவத்தம்.  அற்று என்ற செந்தமிழ் வடிவம் பேச்சுமொழியில் அத்து என்று வரும்.

அன்றியும் சொல்லமைப்பில் இது காணக்கிட்டுவதே ஆகும்.   பல்+ து > பற்று > பத்து என்ற எண்ணுப்பெயர் காண்க.   ஒன்பதின்பின் எண்ணிக்கை பலவாகிவிட்டதென்று நினைத்த தமிழன்,  பல் (பல) + து ( ஆனது)( ஆயின)
என்ற சொல்லை உண்டாக்கிக்கொண்டான்.  ஆயிரம் என்ற சொல்லின் அமைப்பையும் கண்டுணர்க.  பல்+ து = பற்று > பத்து .  ஒருபஃது, இருபஃது என்ற சங்ககாலச் சொல்வடிவங்களையும் நினைத்துக்கொள்க.  இன்னும் தொற்று > தொத்து, சிற்றம்பலம் > சித்தம்பலம் முதலியவும் அறிக.  உறவு அத்துப்போய்விட்டது என்ற சிற்றூர்ப் பேச்சும் உணர்க.

அவத்தம் > அபத்தம்.

இதன் பொருள் பயனற்றுவிட்டது என்பதே.  இதன் ஏனைப்  பொருள்விரிகள் யாவும் இம்மூலக் கருத்தினின்று பெறப்பட்டன.  ஏற்புடையவாறு பொருளுரைத்துக்கொள்க.

SATYAM SHIVAM SUNDARAM - Saritha Rahman Singing Lata Mangeshkar song

ஐக்கியம் சொல் காட்டும் தமிழர் பண்பாடு

இன்று ஐக்கியம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லுக்குரிய விளக்கத்தினை அறிந்துகொண்டபின்பு இந்தச் சொல்லைப் படைத்தளித்தவன் ஒரு சுட்டடிச் சொற்புனைவு நிபுணனாக
இருந்திருக்கவேண்டும்  என்பதை நீங்கள் உணரத் தலைப்படுவீர்கள் என்பது எமது துணிபாகும் என்பதை ஈண்டு எடுத்துக்கூறுவோம்.

ஐக்கியம் என்பதில் இருப்பவை.

அ  -    அங்கு,

இ -     இங்கு

கு  -     சேர்விடம் குறிக்கும் பழஞ்சொல்.  அவனுக்கு, இவனுக்கு, மதுரைக்கு,
             தில்லிக்கு,   மலைக்கு என்ற எல்லாச் சொற்களிலும் கு என்பது சென்று                சேருமிடம் குறித்து நிற்கிறது.

இ -       இங்கு

அம் =   அமைவு குறிக்கும் விகுதி.

இவற்றை ஒன்றாக இணைக்க,


அயிக்கியம் என்பது கிடைக்கிறது.

அயிக்கியம் என்பதை ஐக்கியம் என்றெழுத ஓர் எழுத்துக் குறைந்து சொல்லின்
நீட்டம் குறைகிறது.


அதாவது அங்கு  பிரிந்து நின்றவர்களும்  இங்கு பிரிந்து நின்றவர்களும்
இங்கு அமைந்து விட்டால் அதுதானே ஐக்கியம். பிரிவினர் இங்கு ( அதாவது
உங்கள் முன்பே)  அமைந்துவிட்டால்  அதுவே ஐக்கியமன்றி வேறென்ன...?
இங்கிருப்போர் யாவரும் அவ் வொன்றுபடுதலைக் கண்ணால் கண்டு இறும்பூது எய்திடுவீர்கள் அல்லீரோ?  கண்கூடாக அது இங்கேயே நடக்கிறது என்றே இச்சொல்  உங்கட்குத் தெரிவிக்கிறது.

ஐக்கியம் என்பது சுட்டடியில் வளர்ந்த சொல்.   அ  இ உ என்பன முதன்மைச் சுட்டுகள்.

இது பெரும்பாலும் இந்த வீட்டு ஆண்பிள்ளை அந்த வீட்டுப் பெண்ணிடம் தஞ்சம் புகுந்து அம்மாவை மறந்து அங்கேயே கிடந்தால், சிற்றூரார்  "  அவன்
அங்கேபோய் ஐக்கியமாகிவிட்டான்" என்று ஏளனமாகச் சொல்வதற்குப் பயன்படுத்திய பதமாகும்.  ஐக்கியம் இங்கும் நடந்து முற்றுப்பெறலாம்; அங்கும் முற்றுப்பெறலாம், வீரமாகச் சண்டை  போட்டுக்கொண்டு இருந்த ஊரின் இரு சாரார்,  " இங்கு" வந்து ஐக்கியமாவதும் சிலரால் ஏளனத்துக்கு உள்ளாக்கப்படுவதே.  சண்டைக்காரன் காலில் விழுதல் என்பார்கள். சாதிக்காரன் காலில் விழாமல் சண்டைக்காரன் காலில் விழு என்பதையும் காண்க.  பெரிய பேச்சுப் பேசினானே, என்ன கிழித்தான் என்றும் ஏளனம் செய்வது வழக்கம்.  யாம் புள்ளிவிவரம் எடுக்கவில்லை என்றாலும் அதிகமாகச் சண்டையிட்டுக் கட்சி கட்டும் இயல்பு தமிழனிடமே அதிகம் என்று துணிவோம். இன்றும் போராட்டம் தமிழ்நாட்டில்தான் அதிகம், இது புள்ளிவிவரப்படி.  ஐக்கியம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தமிழிலிருந்து தான் உலகு பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதனாலன்றோ வெள்ளைக்காரனின் சட்டதிட்டங்கள் போல் தமிழனால் அமைக்கமுடியாமல் போயிற்று!  இன்னும் சொல்வது தேவையில்லை.

தட்டச்சுத் திருத்தங்கள் பின்.
Please read with caution. There are hacking software which can
misrepresent or create errors in the final product which reaches you
after we have posted.