திங்கள், 30 டிசம்பர், 2019

புத்தாண்டே வருக test repeat

ஆண்டுகளில் இந்த. இருப திருபதோ

அருமை பொருந்தியே மலர்ந்திடுக!

தாண்டிப்   பிறந்திடத் துன்பங்களை---ஒரு

தண்மை சுரந்திட  வேண்டிடுவோம்.

ஒன்றுபட்  டுயர்வதே    அறிவுடைமை  ----  அதற்கு
அடிப்படை ஆவதே  அன்புடைமை;
 சென்றபன்னாட்களைப்  பின்பற்றிப் பிரியாமல்
சேர்ந்திருப் போம் அன்பாய் வாழ்ந்திருப்போம்.

அமைதி  நாடுவோம்  போர்வெறி   சாடு வோ ம்
அகிலத்தின் ஒற்றுமை தேடிடுவோம்
நமது வாழ்வுக்கு நன்மை நாம்கண்டு
நாடொறும் பீடுறக் கூடிடுவோம்.

அன்பர்கள் யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஆட்படும் அனைத்திலும் வெற்றியே உங்கட்கு
தண்மடி  நிறைவுறப் பொன்முடி கைவர
 வண்விடி வெள்ளியு திக்கட்டுமே.

புத்தாண்டில் எமக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக
கள்ளமென்பொருளை அனுப்பிச் சில [பிழைகளைப் 
புகுத்திய கெட்டிக்காரர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.  
திருத்தினாலும் பிழை  மீண்டும் தன்னை நிலைநாட்டிக்
கொள்வதுதான் இதில் சிறப்பு ஆகும்.
போர்வெறி சாடுவோம் என்பதைப்  போர்வெறி நாடுவோம்
என்று மாற்றியது என்னே திறமை  அடடா.......

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

வெளியிடாத சிறு கவிதை

முன் எழுதி வெளியிடாத ஒரு கவிதையை இப்போது பதிவு செய்கிறேன்.  படிதது  மகிழுங்கள்.


கலகம் செய்யும் மனப்பாங்கு
கல்லெடுத் தெறியும் குள்ளமனம்
உலகம் வியந்த சுதந்திரத்தை
ஒதுக்கி வீசுதற்  கொப்பாகும்.

நிலவும் வேற்றுமை  எதுவேனும்
 கலந்து நின்று   முடிவெடுத்தே
அல்லன மாற்றி நல்லனவே
ஆக்கும் நெறியே அடைந்திடுவீர்





சனி, 28 டிசம்பர், 2019

விபுலாந்த அடிகள். பேராசிரியர்.

விபுலானந்த அடிகள் சிறந்த தமிழறிஞர்.
(1892 - 1947)
அவர் மேற்கொண்ட இது துறவுப் பெயர்.  இதுவும் சிறந்த பெயரே.இங்குக் கூறிய சொல்லாய்வு இடுகைகளைப் படித்துவரும் நேயர்களுக்கு இப்பெயர் எப்படி அமைந்தது என்று தெரிந்திருக்க வேண்டுமே!

இப்போது அதைக் கூறுவோம்.


விழுமிய புலம்  =  சிறந்த நாடு.  விழுமிய புலம் என்பது செந்தமிழ், தனித்தமிழுமாம்.

இதைச் சுருக்கி  விழுபுலம் எனல்.

அப்போதும் இது ஒருசொன்னீர்மைப் பட்டுவிடவில்லை.

விழு , புலம் என்றிரு சொற்கள் உள்ளன.  இன்னும் இது ு  சொற்றொடர்தான்.

விழுபுலம் >  விபுலம்.  இப்போது ஒரு சொல்லாய் விட்டது.  இங்கு ழுகரம் தொக்கு நின்று இடைக் குறை ஆனது.

ஆனந்தம் என்ற சொல்லை ஆய்ந்தால் அது:

ஆ+ நன்று + அம்  என்பவற்றை உள்ளடக்கியது என்று அறியலாம்.

நன்று என்பது நல்+ து >  நன்+து  என்பதுதான்.

நல்+து என்பது நன்று என்றுமட்டும்தான் தமிழில் வருமோ? இல்லையே.  நல்+து = நற்று  என்றுகூட வருவதற்குச் சந்தி இலக்கணம் இடம்தரும். நாம் இன்று  நற்று என்ற சொல்லை மறந்தோம். அவ்வளவுதான்.

நன் து என்பது  நந்து அல்லது நன்-து என்றும் வரலாம்.  முந்து பிந்து என்ற சொற்கள் அப்படி அமைந்தன.  சிந்து என்பதும் அதுபோல.   சின்= சிறிய.  து விகுதி.  சில் > சின் ( ந்  ).  சந்தித் திரிபிலும் அல்லாத திரிபிலும்  ல் -ந் ஆகும்.

நன்று -  நற்று போல சிற்று  என்றும் ஒரு சொல் உள்ளது.  சில்+ து = சிற்று.

எனவே  ஆனந்தம் என்பது  ஆ + நல்(நன்) + து +அம்  அன்றி வேறில்லை.
ஆக அல்லது இறுதியான அல்லது மிக்க நன்றான மகிழ்வுநிலை. நன்மை அல்லது நன்றில் உண்டாவது மகிழ்வு.  உறுபொருள்: நன்மை. அதிற் பெறுபொருளே மகிழ்வு.

விபுலானந்தர் என்பவர் விழுமிய மண்ணில் ஆனந்தமாக இருப்பவர்
என்பது  பொருள்.

நாமும்  ஆ+நன்+து+அம் காண்கிறோம்.

குறிப்பு

உறுபொருள் -  original or etymological meaning
பெறுபொருள்-  derived  meaning



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதும்போதே இடுகைகள் மறைந்து மீளாமற் போவதால் தட்டச்சுப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை, வெளியிட்ட பின் திருத்தலாம் என்றே வெளியிடவேண்டியுள்ளது. பிழைபொறுத்து நலம் நண்ணுவீராக.  எமக்குக் கரைச்சலுக்குக் குறைச்சல் இல்லை என்றாலும் தளர்ச்சி ஒன்றுமில்லை.

திருத்தம் வேண்டின் பின்.