ரோமம் என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.
பண்டைத் தமிழர் மயிர் என்று சொல்லப்படும் முடிக்கு உற்றறியும் திறம் இருப்பதாக நம்பினர்.
அதனால் ரோமம் ( றோமம் ) என்ற சொல்லை உண்டாக்கினர். உற்றறியும் உணர்வுக்கு உரிய " உறு" என்பதையும் அதைக் காப்பது என்னும் பொருளில் "ஓம்" (ஓம்புதல் ) என்பதையும் இணைத்து அம் விகுதி கொடுத்தனர்.
உறு + ஓம் + அம் -= உறோமம் என்ற சொல் அமைவுற்றது.
ஆற்றிடையில் அமைந்த நிலத்துண்டும் அரங்கு என்ற பெயரைப் பெற்றதும் ஆங்கு அமர்ந்த தேவன் அரங்கனாகிப் பின் அகரம் தொலைந்து ரங்கன் ஆனதும் போல் பல சொற்கள் தலையெழுத்திழந்து உலவின.
சொற்றிரிபு காத்தலும் அரிதே.
உறோமம் என்பதும் தவறாக றோமம் ஆகி, முன் வடிவு உணராமையின் ரோமம் என்று தவறாகத் திருத்தப்பெற்றது.
இவ்வலைப்பூவில் காணக்கிட்டாதெனினும் இது யாம் முன் கூறியிருந்ததே ஆகும்.
உரோமம் என்ற திரிசொல்லும் அழகுடன் அமைவுற்றதே என்றறிக.
ரோம் என்பது பகுதியாகக் கொண்டு அமைப்பை அறிய முற்படின் அஃது இருளிற் பொருளைத் தேடியதுபோலவே இறும்.
அறிவீர் மகிழ்வீர்.
தட்டச்சுப் பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும்
வே
வே