திங்கள், 18 நவம்பர், 2019

எழுத்துக்களும் சங்கதமும்


குறிப்பு:  சமஸ்கிருதத்துக்கு எழுத்துமைப்பு இருத்தலாகாது என்று பண்டை அறிஞர் தீர்மானித்தனர்.  மந்திரக் குரல் ஏற்ற இறக்கங்களையும் அளவுகளையும் அழுத்தம் மென்மை முதலியவற்றையும் வெளிக்கொணர எழுத்துக்கள் இயலாதவை என்பது அன்னோரின் கருத்துப்பிடியாய் இருந்தது என்று அறிக.  எழுத்தின்மையால் பல மறந்தும் இறந்தும் தொலைந்த பின்னேதானே எழுத்தினாலும் நன்மை உண்டு என்ற இணக்க அறிவும் ஏற்பட்டது.   வேதவியாசனின் தொண்டு உள்ளவையும் அழிந்துவிடாமலும் திரிந்துவிடாமலும் இருக்க ஒரு மருந்தானது.  சமஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஒலிவடிவ நூல்கள் அழிந்தன. எழுத்தில்லாத பொலினீசிய மொழிகளிலும் சொற்கள் பல தொலைந்தன அறிக.  சீனாவின் கிளைமொழிகள் ஒலித்திரிபுகளால் விளைந்தவை. காரணங்கள் உள   . மண்டரின் எழுத்து மொழி இது விரியாமல் நிலைப்படுத்தியது    (18.11.2019)..

ஞாயிறு, 17 நவம்பர், 2019

சிறுமமே சிரமம்.

நம் முன்னோர் பல துன்பங்களைப் பெரியனவாய் மதிக்கவில்லை. சிலவற்றுக்கு ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் அவற்றைத் துருவி
ஆய்ந்தனர். சில உலகிற்குப் பெருமை தருவன என்றும் நினைத்தனர்.

அவர்களிடையே துன்பங்ககளின் சிறுமை பெருமை பல்வேறு கருத்துக்களையும் ஆன சொற்களையும் தோற்றுவித்தன. ஒரு சொல்லை  ஆய முற்படும் இதனில் சுருங்கக் கூறியுள்ளேம்.

இன்பங்களையும் இவ்வாறே  பெரிய சிறிய என்றனர்.

சிறிய துன்பங்கள் ஒன்றன் இடை இடைத் தோன்றி நீங்கின.  இடையிடை வருவன இடைஞ்சல்,  இடையூறு  என்றனர். முதல் இடை கடை என்று வேறுபாடின்றிச் சில துன்பங்கள்  " சிறுகு" எனப்பட்டன.  இவைகள் சிறு தொல்லைகள். ஒரு செயல்பாட்டு முன்னும் வரும், பின்னும் வரும் இடையும் வந்து குடையும் கொஞ்சம்.

சிரமம் என்பது சிறு துன்பமே.  இச்சொல் தன் பண்டை வடிவத்தில் "சிறுமம்" என்றிருந்ததற்கான சுவடுகள் அச்சொல்லிங்கண்ணே உள.  சிறுமம்  பின் சிறமம் ஆகிப் பிறழ்திருத்தமாகச் சிரமம் ஆயிற்று.  சிறுகு என்பதன் ஒப்புமையாக்கமாகவே சிறுமம் ஆகிய சிரமம் வந்துற்றது.  றகர ரகர வேறுபாடிழந்த சொற்களின் பட்டியலில் சிறுமம் > சிறமம் > சிரமமும் இடமறிந்து  புகுந்து நிற்றற்பாலது.

துன்பமோ சிரமமோ வருங்கால் நகுக.

அறிந்தீர் மகிழ்ந்தீர்.   

தட்டச்சுப் பிழைக்கு மறுபார்வை பின். 

வெள்ளி, 15 நவம்பர், 2019

Rigor mortis or மரித்திறுக்கம்.

ஆங்கில வைத்தியத்தில் ஒரு கலைச்சொற்றொடராகப் பயன்படுவதுதான் "ரிகோர் மோர்ட்டிஸ்"  (அல்லது ரிகார் மார்ட்டீஸ் }  என்ற இலத்தீன் மொழித் தொடராகும்.

ரிகோர் ----   இறுகு ஊர்தல்.
சதை இறுகும்படியான நிலை ஊர்ந்துவரல்.
 இரிகோர்  -- இறுகூர்.

மார்ட்டீஸ் ---  மரித்தல்.   மரி > மார்.  மாரகம் என்ற சோதிடச் சொல் மரணம் என்று பொருள்படும்.


செத்துச் சில மணி நேரத்தில் உடல் விறைப்பு.

பழைய இடுகைகள் காண்க.

அதிகம் சொன்னால் "காப்பி அடிக்கும்" கூட்டம் பெருகும். வரலாற்றையும் உடன் சொல்லற்க.

அறிந்தின்புறுக.



அடிக்குறிப்புகள்

ஒரு பெரிய நோய்வந்துவிட்டால்  ஒரு வைத்தியனை வைத்து நோயைப் பார்க்கவேண்டும் என்பது தமிழ் நாட்டில் பேச்சு வழக்காகும். வைத்தியனை வைத்து என்றால் அவனை டப்பாவிற்குள் அடைத்து வைத்து என்று பொருளன்று. "அப்போய்ன்ட் ஏ டாக்டர்"  என்றுதான் அதற்குப் பொருள். கடினமான ஆங்கிலத்தையும் வெகு எளிதாக மொழிபெயர்த்தறிய வல்லது தமிழ்ப் பேச்சுமொழி என்று உணரவேண்டும்.  சீனக் கிளைமொழியான ஹோக்கியனில் உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி அல்லது கார் என்பதை "பா ஹோங்  சியா" என்பார்கள்.  அப்படியென்றால்  "வண்டி அடி(த்தல்)" என்றுதான் சொற்களுக்கு அர்த்தம் என்றாலும் அச்சொற்கள் வழக்கில் தரும்பொருள்  உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி (பயன்பாடு)  என்பதே ஆகும்.  In Chinese intonation is important  and changes must be adverted to.  தமிழைப் போலவே சொல்லையும் பொருளையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறம்படைத்தவை சீனக்கிளைமொழிகள்.  வைத்துப்பார்க்கப்படுவோனே  பின் "வைத்தியன்" என்ற புனைச்சொல்லால் குறிக்கப்படுவோன் ஆயினன்.

வை+  து  + இ + அன்  >  வைத்தியன்.

இட்டு அப்பி வைக்கும் சிற்றேனமே  டப்பி அல்லது டப்பா.
இடு அப்பி   ( அப்பி இடு அல்லது இட்டுவை )  -  இடப்பி >  டப்பி > டப்பா.

எழுத்துப்பிழைகள் பின்பு பார்க்கப்படும்.