வியாழன், 12 செப்டம்பர், 2019

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

சகஜம் சகசம் என்பவை.

சகசம் என்ற சொல் உலவழக்கில் பெருவரவிற்று என்பதை அறிவீர்களே.  இயற்கையில் நடப்பவையும் இயற்கையாய் நடப்பவையும் சகசமானவையாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.   நிலநடுக்கமென்பது  இயற்கையாய் இயற்கையில் நடப்பினும்  அது சகசம் அல்லது சகஜம் அன்று.

அடுத்து அடுத்து நடப்பதாயின் சகஜம் அல்லது சகசம் ஆய்விடும்.  ஆகவே எது சகசம் என்பதைத்  தீர்மானிப்பத்ற்குக்  கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வீர்.

இவற்றுள் மூழ்கிவிடாமல் சொல்லைக் கவனிப்போம்.

வீட்டில் அம்மா சமையல் செய்வது சகசம்.


அகம் >  சகம். 

முன் இடுகைகளில்  விளக்கிய விதி இது.

அடு  - இதுவும் அஜு  என மாற்றக் கூடியதே.

இது எப்படி என்றால்  கடை > கட  .> கஜ எனற்பாலதை ஒத்ததே.

சக  +  அஜு  + அம் =  சகஜம்.
.
சக  + அச +   அம். =  சகசம்.
 
அடு -  அசு  -  அம்

>   (சக)  அச  அம்.

அதுவே  அது. வேற்றுமை யாது.?

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சாகசச் சொல் அமைந்த விதம்

சாகசம் என்பது  அருமையாய் அமைந்த சொல்.

உலகில் திறனுடையோர் பலவிதச்  சாகசங்கள் செய்து புகழுறுவது உங்களுக்குத்  தெரியும்.  ஆகவே சாகசம் என்பது யாது என்று விளக்கவேண்டா என்பது சரிதான்.  இருப்பினும்  தெரியாத  ஒரு சிலருக்காக ஓரிரண்டு கூறுவோம்.

காண்போர் இது துணிகரமான செய்கை என்பது;   அல்லது இது வெறும் பாசாங்கு என்பது. இது காண உண்மையே போன்றது ,  கண்டேன் வியந்தேன்  என்று போற்றுவது. இது செய்வோனைச் சாகசன் என்பது.

இத்தகு செயலை  ஸாகஸம் என்றும் எழுதுவர்,  வடமொழி  என்பர்.

சாவதுபோலப் பாசாங்கு பண்ணி  (பசப்பி) காண்போரை அசத்தினால் அதுவே
சாகசம்.   அது சொல்லிலே இருக்கிறது.

சா  ( சாகு)    ஒரு வினைச்சொல்.
அசத்து   (  அச)  இன்னொரு வினைச்சொல்.

சாவது  (  சாகுவது) போல்  நடித்து அசத்திவிடுவது.

சாகு என்பதில்  கு என்பது  சாரியை.
அச என்பது  அசத்து என்பதன்  அடிச்சொல்.

சாகு +  அச +  அம்   =  சாகசம்.

நாளடைவில்  சாகசங்கள்  பெருக  சொற்பொருளும் விரிதல்  இயற்கை.