சந்திரனில்
தண்திரளின் தென் துரு வத்தில்
சடுதியிலே
பதிவுகொளும் நெடுநோக் கத்தில்
உந்துபடை
சீறியெழச் சென்று சேர்ந்தும்
ஓரிருகல்
தொலைவுக்குள் ஒலிய லைகள்
முந்திவிலக்
குண்டதனால் குந்த கம்தான்
மூண்டதெனி னும்வெற்றி நீக்க முண்டோ
வந்துநகை
செய்திடுமே விரைவில் வண்ண
வாகைதனை
மோடிசிவன் சூடு வாரே.
அரும்பொருள்
தண்திரள் : குளிர்ந்த மங்கிய ஒளியை வீசுகிற
(நிலவு.)
தென் துருவம்: இது நிலவின் தென் துருவம்
சடுதி : விரைவு.
பதிவு : இறங்கி உலகிடை வெற்றி பெறுதல்.
நெடு நோக்கம் - தொலைவில் உள்ள இலக்க
ைக் குறிவைத்தல்.
உந்து படை - எறிபடை வான் கலம் முதலியவை
கல் - மைல் தொலைவு.
ஒலி அலைகள் : ரேடியோ அலைகள்.
முந்தி விலக்குண்ட - முங்கூட்டியே அறுந்த
அல்லது துண்டிக்கப்பட்டுப் போன.
குந்தகம் = கெடுதல்.
வெற்றி நீக்கம் - தோல்வி.
நகை - சிரிப்பு.
வாகை = வெற்றி மாலை
மோடி: இந்தியப் பிரதமர்.
சிவன் : இந்திய விண்வெளிக் கழகத் தலைவர்,
அரும்பொருள்
தண்திரள் : குளிர்ந்த மங்கிய ஒளியை வீசுகிற
(நிலவு.)
தென் துருவம்: இது நிலவின் தென் துருவம்
சடுதி : விரைவு.
பதிவு : இறங்கி உலகிடை வெற்றி பெறுதல்.
நெடு நோக்கம் - தொலைவில் உள்ள இலக்க
ைக் குறிவைத்தல்.
உந்து படை - எறிபடை வான் கலம் முதலியவை
கல் - மைல் தொலைவு.
ஒலி அலைகள் : ரேடியோ அலைகள்.
முந்தி விலக்குண்ட - முங்கூட்டியே அறுந்த
அல்லது துண்டிக்கப்பட்டுப் போன.
குந்தகம் = கெடுதல்.
வெற்றி நீக்கம் - தோல்வி.
நகை - சிரிப்பு.
வாகை = வெற்றி மாலை
மோடி: இந்தியப் பிரதமர்.
சிவன் : இந்திய விண்வெளிக் கழகத் தலைவர்,