இப்போது கோப்பை என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.
இன்று உள்ளவை போல் கோப்பைகள் பளிங்கினாலும் மண்ணினாலும் கனிமங்களாலும் செய்யப்படவில்லை, முன் காலங்களில்.
நாம் குறிக்கும் முன் காலம் அவை இலைகளால் செய்யப்பட்டு, அதில் ஊற்றப்படும் நீர்ப்பொருள் ஒழுகாமல் நல்லபடி திறமையுடன் அமைக்கப்பட்டுப் பயன்படுத்திய காலம். இத்தகைய திறமை இப்போது இல்லையென்றே கருதவேண்டி உள்ளது. இத்தகைய கைவினப் பொருள்கள் செய்பவர்கள் அறிவில்லாதவர்கள் ஏழைகள் என்று இகழப்பட்ட படியால் அத்திறமை அழிந்தது.
இலைகளைக் கோத்து முடைந்து செய்யப்பட்டதே கோப்பை. இதற்குரிய வினைச் சொல் கோத்தல் என்பது. இவ்வினை இன்னும் நம்மிடையே இருப்பதும் நம் நற்பேறே ஆகும். அதிலிருந்து " ஃபைல் " என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேராகக் " கோப்பு " என்ற சொல் வந்ததும் நமக்கு நல்லதே ஆகும். நடப்பவை அனைத்தும் நன்மையே.
கோத்தல் வினைச்சொல்.
கோப்பு > கோப்பு + ஐ = கோப்பை.
கோப்பை என்ற சொல்லில் இரண்டு விகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பு என்பதும் ஐ என்பது. பை என்று வைத்துக்கொள்ளினும் நட்டமில்லை.
அறிந்து மகிழ்வதுடன் கூஜா என்ற முன் இடுகையையும் வாயித்து ( வாசித்து) மகிழவும்.