By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
திங்கள், 24 செப்டம்பர், 2018
கோலாலம்பூர் ஐயப்பன்.
சவரி மலைசென்று சாத்தாவைக் காண
உவரியாய்ச் சூழ்ந்துள்ள நீரும் --- இவரித்து
நிற்குமோ கண்டபற்றர் நீங்குவரோ வேண்டாமே
அற்கம் செலுத்தலம் பூர்.
இது வெண்பா.
இதற்குப் பொருள்:
உவரியாய்ச் சூழ்ந்துள்ள நீரும் -- கடல்போல் சுற்றியும்
பெருகியுள்ள நீரும்; சவரி மலை சென்று - சபரி மலைக்குப் போய்;
சாத்தாவைக் காண - ஐயப்பனைத் தெரிசனம் செய்ய; இவரித்து
நிற்குமோ -- தடையாக எதிர்வருமோ;
கண்டபற்றர் நீங்குவரோ -- இதைக்கண்ட பக்தர்கள்
ஐயப்பனைத் தொழாமல் விலகிவிடுவரோ ( மாட்டார்கள் ) ;
வேண்டாமே - கவலையே உங்களுக்கு வேண்டாம்;
அற்கம் செலுத்த - காணிக்கை செலுத்த;
லம்பூர் - கோலாலம்பூர் என்னும் நகரத்திலும் ஓர்
ஐயப்பன் கோவில் உண்டு; (ஆங்குப் போகலாம் ) என்றபடி.
அந்தக் கோவில் இங்கு படத்தில் உள்ளது. கண்டு களிக்கவும்,
இந்தப் படத்தில் பாட்டியும் பேரனும் காணிக்கை செலுத்திவிட்டு
வெளியில் வந்து மகிழ்ச்சியுடன் தோன்றுகின்றனர்.
பாட்டி: வனஜா அம்மையார்; பேரன்: ஐயப்ப குருசாமி மோகன்.
HOTMAIL given up. Hackers took over.
Please note that Sivamala has given up the HOTMAIL account which was being used previously. I believe some virus operators have taken over that e-mail account. Do not send any communication to that hotmail.
Hackers are waiting there for incoming mail.
Any communication should be sent to the current email on record: bisivamala@gmail.com.
Thank you.
Hackers are waiting there for incoming mail.
Any communication should be sent to the current email on record: bisivamala@gmail.com.
Thank you.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)