செவ்வாய், 18 செப்டம்பர், 2018

effective, x.e~. = கேட்கும் xகேட்காது. ( colloq.)


ஒரு மருந்து நோயைக் கட்டுப்படுத்தவல்லது,  சரிப்படுத்திவிடும் என்றெல்லாம் எழுத்தில் குறிப்பிடுவார்கள். இந்தக் கடினப் பதங்களையெல்லாம் மக்கள் இயல்பான பேச்சில் கையாளுவதில்லை.

உனக்குச் சோகை பிடித்திருந்தால் இந்த மருந்து கேட்கும் என்று பேச்சில் சொல்வர்.  அகராதிகளைப் பொருத்தவரை,  காதால் கேட்கப்படுவதைத் தான் கேட்கும் என்போம்.

ஆனால் மருந்து நோயைக் கேட்கிறது என்பதை நீங்கள் அறிந்ததுண்டோ?

சோகை நோயில் இரத்த ( அரத்த )  சோகை என்பது கடின வகை என்று கூறுவதுண்டு.  சோகை பிடித்தவன் எப்போதும் உடல் வலிமை குன்றிக் காணப்படுவான். இப்படிப் பேசிக்கொள்வார்கள். நோயைப் பற்றி அறிய வேண்டின் மருத்துவரை நாடவும்.  இப்போது சோகை என்ற சொல்லைக் காண்போம்.

சோர்வு என்பதே நமக்குச் சொல்லப்படும் அறிகுறி.

சோர்தல் >  சோர்கை >  சோகை.  இதில் ஒரு ரகர ஒற்று மறைந்தது.

சோகை என்பது ஒரு நோயின் பெயராய் ஆகிவிட்டது. இதற்கு ஆங்கிலத்தில் எனிமியா என்பர்.  இது நோயோ அல்லது நோயின் அறிகுறியோ என்பதை மருத்துவர்பால் உசாவி அறிக.

ரகர ஒற்று மறைந்த சொற்களை முன் இடுகைகளில் கண்டி மகிழவும்,



B12. Mecobalamin. Neromethyn.  Peripheral Neuropathies.

திருத்தம் பின்.

திங்கள், 17 செப்டம்பர், 2018

மோடிக்கு வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும்  மோடியார்க்  கோர்நற்
சிறந்த பரிசுசீர் ஞாலத்தில்  செப்பின்
வருந்தேர்தல் வெற்றி வழங்குவ தன்றி
அருந்தொண்டிற் கானது சொல்.

எல்லாம் நலமேதான் சூழ்கென்று தொண்டாற்றும்
வல்லார் திருமோடி வாழ்கவாழ் கெந்நாளும்
மக்கள் நலத்திட்டம் மாணுக மாறாமல்
தக்கதே தாவிக் கணம்.

வழங்கவ தன்றி = வழங்க + அதன்றி = வழங்க அது
அன்றி; 
வழங்குவதன்றி எனினும் இதற்கு இணையான 
பொருள் தரும்.

மாணுக :  சிறக்க.

தா இக்கணம் :  தாவிக்கணம்  -  தாவிக்  கணம்..

கணம் என்பது  திரட்சியுமாம்.   தாவி = இடம் மாறி  
மக்கள் திரட்சி -   கணம்   -   ஆகும் என்பதுமாம் . 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

போற்றியும் பூசாரியும்.

தமிழில் வழங்கும் பூசாரி அல்லது "குருக்கள்" என்ற சொல்லுக்கு நேரான பதமாகப் போற்றி என்ற சொல் மலையாள மொழியில் சிற்றூர்களில் வழக்கில் உள்ளதென்பதை அறிந்தபின்னர், அதை ஓர் இடுகையில் தெரிவித்திருந்தேம்.

பல இடுகைகள் அழிக்கப்பட்டன போலவே கள்ளக் கடவுச்சொற்களுடன் இவ் வலைப்பூவின் உள்ளே புகுந்தோர் ஏனோ அதை அழித்துவிட்டனர்.

ஆனால் இச்சொல் வழங்கும் இடங்கட்குச் சென்று அம்மக்கள் இச்சொல்லைப் பயன்படுத்தாமல்  யாரும் தடுத்துவிட இயலாது ஆகையால் இதனால் இவர்கள் கொள்கைக்குக் கிட்டிய ஏற்றம் என்னவென்பது எமக்குப் புரியவில்லை.

"பழைய போற்றி போய்; புதிய போற்றி வந்நு "  என்று போசுகிறவர்கள் பேசிக்கொண்டுதான் உள்ளனர்.

பூசாரி என்ற சொல்லில்:

பூசை.   ஆர் என்ற பணிவுப்பன்மை விகுதி.   இ என்ற இறுதி விகுதி.  இவைகளில் கூட்டுத்தான் பூசாரி என்ற சொல். பூசை என்பது பூசெய் என்பதன் திரிபு என்று தமிழ்ப்புலவர்கள் கூறியுள்ளனர்.

செய் என்ற சொல் சை என்று திரியும்.

கைச்செய்கை >  கைச்சைகை.   இதில் செய் என்பது சை ஆனது.

நன்செய் புன்செய் என்ற சொல்லின் இறுதியும் நஞ்சை புஞ்சை என்று திரியும்.
இவை ஏற்கத்தக்கவை என்று பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் கூறியுள்ளார்.

சாப்பாட்டைக் குறிக்கும் செய்வம் என்ற சொல்லும் சைவம் என்று திரியும்.
சிவம் என்பதும் சைவம் என்று திரியும் .  இருவேறு சொற்கள் ஒரு முடிபு கொள்ளுதல் இதுவாகும்.   செய் என்பது பயிர்செய்யப்பட்ட உணவுப்பொருளைக் குறிப்பது ஆகும்.  செய்வம் என்பது சைவம் என்று திரிந்தபின் முன்னது வழக்கிழந்தது.

பூசெய் > பூசை.

போற்றி என்பது பூசாரியைக் குறிக்கும் மலையாளச் சொல்.

பூசை+ ஆர் + இ =  பூசார்+ இ =  பூசாரி.

பூஜாரி என்பது அயலாக்கம்.

போற்றி என்று பூசைசெய்வோரைக் குறிக்கும் வழக்கு தமிழரிடை இல்லை.

திருத்தம் பின்