சனி, 18 ஆகஸ்ட், 2018

COMPUTERS AND DATA LOST IN ATTACK.

நேற்று மாலை நம் கணினி மென்பொருள்  கள்ள மென்பொருளால் தாக்குண்டு நிலைகுலைந்து விட்டாலும் இன்று சிங்கையில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஓவிரல் THUMP DRIVES சேமிப்பகத்தில் இருந்த பல கோப்புகளும் அழிந்துவிட்டன என்றாலும் சில காப்பாற்றப்பட்டன.  இன்று கணினி புதுமென்பொருளுடன் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது.

இது புதுமென்பொருளால் எழுதப்படுவது.

உள்புகுந்த கள்ளமென்பொருள் கோப்புகளை அழித்ததுடன் வலைப்பூவுடன் தொடர்பையும் அறுத்துவிட்டது,  இணைப்பை மீட்க முடியாதுபோனதால் புதுமென்பொருள் புகுத்தப்பட்டுக் கணினி புத்துயிர் பெற்றது,



Error  678.
Connection with remote computer could not be reestablished.
Saved data in thump drives 60% wiped out.
Documents mostly wiped out.
Network Adapters were disabled by virus.
AVG Internet Security Lost.
Intel Adapters had their drivers wiped out.
Other damage not known. 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்

அத்தல்  பிகாரிவாஜ் பாய்தலைவர் ;   அந்நாட்டின்
எத்திசையும் போற்றும் இணையற்ற --- உத்தமரே
மெல்லெனும் பேச்சில் மிடுக்கற்ற  மேல்நடப்பில்
சொல்லன்ன செய்துமுடிப்  பார்.

தொண்ணுற்று மூன்றில் தொலைவுலகு சென்றதனை
எண்ணினும் நெஞ்சம் நெகிழுமே --- பெண்ணொன்று
தன்வளர்ப்பு நன்மகளாய்த்   தான்கொண்டார் நாட்டிற்குப்
பொன்வளரப்  பாடுபட்   டார் .     

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

தருதல் : தமிழ் இலத்தீன் வழக்குகளும் மற்ற அமைசொற்களும்

தருதல் என்ற சொல் தமிழை மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் குடியேறி அவற்றையும் வளம் செய்துள்ளது.  தமிழில் உள்ள "தா"  என்ற சொல் இலத்தீனிலும் சென்றேறி ஆங்கிலம் வரை வந்துள்ளது.

டோ என்று ஒலிக்கும் சொல் தா என்பதன் இலத்தீன் திரிபு ஆகும்.  அது ஆங்கிலத்தின் "டோனேஷன்"  ( நன்`கொடை ) என்ற சொல்லிலும் பதியாய் இலங்குகின்றது.   பதி என்றால் தலைமையேற்பு குறிக்க யாம் வழங்கும் சொல்.  அரத்த நன்`கொடையாளர் ( இரத்தம் கொடுப்பவர் அல்லது குருதிக்கொடைஞர்)  "பிளட் டோனர்"  எனப்படுகிறார்.   டோனரிலும் அது உள்ளது.

இவை தமிழிலிருந்து வந்தவை என்று சொல்வதால் எமக்கு எந்த நன்மையும் இல்லை. உண்மை என்பதால் சொல்கிறேம்.  இ வற்றால் தமிழுக்கும் நன்மை ஏதும் இல்லை.  நம் சொல் உலக சேவை ( செய்வை ) 1  செய்கிறது என்று மன நிறைவு கொள்ளலாம். சேவை செய்தாலே நன்மை காணலாம்.  மன நிறைவு மட்டும் சோறாகிவிடாது.

தரு என்பதே  தா என்ற ஏவல் வினையானது.  அது திரிபு.   தரு என்பதற்கு முந்திய அடிச்சொல் தள் என்பது.

தள் > தரு > தா.

இவற்றின் பொருள் ஒன்றுதான்.

தள் >  தள்ளை.  (தாய்).

தள்ளை என்ற சொல் தமிழில் நிகண்டில் மட்டுமிருக்க,  ஏனைத் திராவிட மொழிகளில் "தாய்" என்ற பொருளிலே நன்றாகவே வழங்குகிறது.    கூர்ந்து பிறமொழிகளைக் கேட்க.

பண்டைக் காலத்தில் சொற்களை எளிதாகவே படைத்துள்ளனர்.  நம் படிப்பாளிகட்கு இப்போது இது அவ்வளவாகத் தெரிவதில்லை.

தா  (  இன்னொருவனுக்கு தா என்பது ).
பிள்ளை பெற்றுத் தா என்றும் பொருள்.

தா > தாய்.  ( பிள்ளை9 பெறுபவள் ).

ஆய்> தாய் (= தம்+ஆய்) என்றும் அறிஞர் பிறர் உரைப்பதுண்டு.

தள்ளை என்பது  தல்லை என்றும் தமிழில் ஒருகாலத்தில் வழங்கிற்று என்று தெரிகிறது.  அந்தச் சொல் இல்லை.  ஆனால் அதிலிருந்து திரிந்த " தல்லி" என்ற சொல் இன்னும் ந்ம்மிடை உள்ளது.

தள்ளை >  (     )  > தல்லி.

நாம் வாழும் இந்த நிலமும் தாயைப் போன்றது என்பதை நாம் உணரவேண்டும்.   இன்னும் உணரவில்லை என்றால் இந்தச் சொல்லைப் பார்த்து நல்லபடியாக உணர்ந்துகொள்ளலாம்.

தா >  தாது.   1.  நிலத்தால் தரப்படுவது.  2. இதயத்தால் தரப்படும் துடிப்பு.

து : விகுதி.  ( மிகுதி > விகுதி ).   எ-டு:  விழுது,  பழுது.

தரையே நமக்குப் பலவும் தருகிறது.    தரு> தரு+ ஐ = தரை.

தரு > தரம்.   (  தரப்படும் பொருளில் மதிப்பீடு.   தரும் எண்ணிக்கை ).

தரு >  தார் > தாரை.  ( சிறு நீர்த் தாரை ).

தரு > தருப்பை:  வலிமை தருவதாக நம்பும் ஒரு புல்.  குசைப்புல்.

தருணம்  :  தரப்பட்ட ஏற்ற சமயம்.

தருமம் :  பிறருக்குத் தருவது.

தருக்கு :  மனத்தில் உள்ள உணர்வினால் ஏற்படும் பெருமித நடப்பு.

தருக்கித்தல்  - தருக்கம் செய்தல்.

தராசு :  தரு + ஆசு:     எடை தருவதற்குரிய கருவி.

தரா தரம் :  தரும் தரம்,   தராதலம் எனவும் படும்.

இன்னும் ஏராளம்.  எல்லாம் எழுத முடியாது.  சொன்னவை கொண்டு பிற உணர்க.

தருக்கம் :  வார்த்தை  தருதல்.  வாய்கொடல்.   

அடுத்து நேரம் கிடைப்பின் சில எழுதுவேம்.

பிழைகள் பின் திருத்தம் பெறும்.