By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 2 ஜூன், 2018
சுகஸ்த சுவச்ச என்னும் சொற்கள்.
உலகில் ஒருபொருட் பலசொற்கள் மிகுதியாய் உள்ள மொழிகளில்
சமஸ்கிருதம் மேல் நிலையில் உள்ளதென்று தெரிகிறது. ஒருபொருள் குறித்த சொற்கள் ஏராளமாக உள்ளன. கவிதையோ கட்டுரையோ எழுதவேண்டுமென்றால் சொற்களை எளிதில் கொள்ளப்பெறலாம்.
இதனை மொழிவளம் என்பர்.
தமிழிலும் இத்தகைய சொற்கள் உள்ளன.
சுஸ்த, சுஸ்தித, ஸ்வச்ச, விரோக என்று பல காணப்படும் சமஸ்கிருதத்தில்
உள்ள சொற்களைப் பார்ப்போம்.
உகத்தல் என்பது தமிழ் வினைச்சொல். இதிலிருந்து உகந்த ( விரும்பத்தக்க) என்ற வினை எச்சம் வந்துள்ளது காணலாம். நோயின்மையே உடலுக்கு உகந்த நிலை. இதிலிருந்து : உகந்த > சுகந்த என்ற சொல் அமைந்தது.
சுகந்த மணம் தரும் ஊதுபத்தி என்று விளம்பரத்தில் எழுதுவர். அகரத்திலிருந்த அதன் வருக்க இறுதிகாறும் உள்ள எழுத்துக்களில் ஒன்றை முதலாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சொல், அதற்கேற்ற சகர வருக்கமாகத் திரியும் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது. உகரத்துக்கு ஏற்றது சுகரம். ஆகவே உகந்த என்பது சுகந்த என்றாயிற்று.
வேறு எடுத்துக்காட்டுகள்:
அடுதல் என்றால் நெருப்பில் வைத்துச் சமைத்தலாகும். இதிலிருந்து அட்டி என்று சொல் அமைந்து திரிந்து சட்டி ஆனது, சட்டுவம் என்பதும் இதிலிருந்து அமைந்ததே. அடு> சடு> சட்டி. அடு> அட்டுவம்> சட்டுவம்,
அமணர் > சமணர்.
இறுதி வடிவங்கள் அமைந்து வழக்கில் வந்தபின் இடைநிலை வடிவங்கள் மறைதல் பெரிதும் உண்மையாகும்.
இனி, உக > சுக > சுகம்.
சுக > சுகத்த > சுகஸ்த > சுஸ்த. ( ககர மறைவு_)
சுக > சுகத்து இது அ > சுகத்தித > சுகஸ்தித > சுஸ்தித.
சுக > சுகத்த > சுவத்த > சுவச்ச.
இவையெல்லாம் காட்டப்பெற்ற மூலங்களினின்று வளப்பிக்கப்பட்டவை.
நலம் அல்லது சுகம் ( < உக : உகத்தல்) குறிக்கும் வேறுசொற்கள்::
அகடம் : கடு (கடுமை); கடு> கடம்; அல் > அ: அல்லாதது. அகடம்:
கடுமையல்லாத நிலை; அகடம் - உடல் நலம்.
அனாமயா: அன் + மாய. அன் < அல் (அல்லாதது). லகரனகரப் பரிமாற்றம்.
மாய்தல்; மாய: இறத்தல், அழிதல். அன்+ஆ+ மய. மாய என்பது மய என்று
குறுகுதல். ஆ= ஆகுதல். மாய்தல் அல்லாததாகுதல். ஆகவே சுகமான நிலை.
கல்ய = நலம். கல்லுதல்: தோண்டி அல்லது முயன்று மேற்கொள்வது.
கல்+ய்+ அம் = கல்ய. அம்= அ ( மகரம் கெடுதல் ).
க்ஷேம்ய : நலம். ஏம் = பாதுகாப்பு. ஏல் > ஏம். (பழந்தமிழ்ச் சொல்). ஏற்ற நிலை. ஏல் >ஏற்ற (ஏல்+து+அ). லகரமகரப் பரிமாற்றம். ஏமம்>சேமம்>
க்ஷேமம்.
இன்னும் பல. பின்னர் இடுவோம்.

வெள்ளி, 1 ஜூன், 2018
சளியும் பிடித்துவிட்டால்.......
சளியும் பிடித்தால் அளியேனோ யானே
தலைகனக்க மூக்கே தடைக்கும் ---- பலதுன்பம்!
கோலெழுதப் பேரசதி கொக்கொக் கிருமலுமாம்
வாலயர்ந்த நாய்போல் வரும்.
அம்மாவும் நோய்மனையில் ; அங்கும்போய்ப் பார்த்திட்டால்
சும்மா இருக்கச் சுருதியும் ------ இம்மியுமே
விம்மாதே; யாண்டும்தான் வீழ்ந்துறங்கி வாண்டைப்போல்
கும்மாளம் இல்லாக் குலை.
இதன் பொருள் :
பாட்டு 1
யானே அளியேனோ சளியும் பிடித்தால் = நீர்க்கோவை ஏற்பட்டு
விட்டால் நான் பரிதாபத்துக்கு உரியவள் ; ஓ அசை .
தலை கனக்க மூக்கே தடைக்கும் - தலை கனமாகும் , மூச்சு
அடைக்கும்;
பல துன்பம் - இவ்வாறு பல துன்பங்கள் .
கோலெழுதப் பேரசதி - எழுது கோலால் எழுதவும் பெரிய
அயர்வு ஆகும்.
கொக்கொக் கிருமாலுமாம் - இவ் வொலிக்குறிப்புடன் இருமலும்
உண்டாகும் .
வாலயர்ந்த நாய் போல் வரும் : வாலை ஆட்ட ஆற்றலற்ற
நாய் போல என்னுடல் ஆகும்.
பாட்டு 2
அம்மாவும் நோய்மனையில் - என் தாயும் மருத்துவ மனையில்
உள்ளார்.
அங்கும் போய்ப் பார்த்திட்டால் - என் நோய் நிலையில் அங்கும்
சென்று பார்க்குங்கால்;
சும்மா இருக்க - அந்நோய் மனையில் ஏதும் செய்யாமல் இருந்தால்;;
சுருதியும் இம்மியுமே விம்மாதே - எனது சுருதி கொஞ்சமும்
எழமாட்டாதே; மனம் முற்படுதலும் செயல்பாடும் கலந்து
மேலுறமாட்டதே என்பது. யாண்டும் - எப்போதும்;
கும்மாளம் இல்லா - ஓடியாடுதல் இல்லாத;
வாண்டைப்போல் வீழ்ந்துறங்கி - ஒரு சிறுபிள்ளைபோல் விழுந்து
தூங்கி;
குலை - குலைந்துபோதல் நடந்தேறும் என்றவாறு.
இவை முன் வரைந்த பொருட்குறிப்புகள்:
அளியேனோ - பரிதாபத்துக்குரியவள் நானோ.
மூக்கு (ஆகுபெயர் ) - மூச்சு
தடைக்கும் - (மூச்சைத் ) தடுக்கும் ( அடைக்கும் )
கோலெழுத - கோலால் எழுத; பேனா எடுத்து எழுத.
(வேற்றுமைத் தொகை ).
பேரசதி : பெரிய உடல் சுணக்கம்.
கொக்கொக்கு - இருமல் ஒலிக்குறிப்பு.
வாலயர்ந்த நாய் - வாலை ஆட்டச் சக்தியில்லா நாய்.
நோய்மனை - மருத்துவமனை-
சுருதியும் விம்மாதே - உடல் எழுச்சி குன்றும், இசையில்
சுருதி இன்மை போல. சும்மா - எதுவும் உதவாமல் .
( நோய்வாய்ப்பட்ட அம்மாவைப் பார்க்கப்போனால்
சும்மா இருக்கமுடியாது. சுருதி இல்லா இசையாய் அங்கு
இருக்கலாகாது.)
இம்மியும் - கொஞ்சமும் . விம்மாதே == எழாதே
வாண்டு - சிறுபிள்ளை.
கும்மாளம் - ஓடியாடித் திரிவது
குலை = குலைதல், நடுக்கம்.
will review.
We have used fonts of only one size. We do not know why smaller and bigger sized fonts
have appeared in the finished output. We are not able to change or ameliorate this situation.
We are sorry.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)