சனி, 26 மே, 2018

சேகரித்தல் சேமி இரு; பாயிரம் ஆயிரம் : விளக்கம்

சேகரித்தல் என்பதொ ஒரு பேச்சு வழக்குச் சொல்.  தொல்காப்பிய முனிவர் தம் ஒப்பரிய இலக்கணத்தைத் தமிழ் மொழிக்கு இயற்றிய காலத்திலே  எழுதப்பெற்றிருந்த  ஓலைச்சுவடி நூல்களையும் வழக்கையும் ஆராய்ந்து பின்னர் தொடங்கியதாகவே பாயிரம் கூறுகிறது.

பா என்னும் பாட்டினால் இயற்றப்பட்டது.  நூலின் முனனே முதல் பாடலாக அல்லது தொடக்கப்பாட்டாக வைக்கப்பட்டது. நூலைப்பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூறுவது. இது நாம் சுருக்கமாகக் கூறுவது ஆகும். பாயிரம் - சொல் எப்படி அமைந்தது?   

பா =  -பாட்டு.
இரு =  நூலில் முன்னிருக்க வைக்கப்படுவது.
அம் =  விகுதி.

பா+  இரு + அம் =  பாயிரம்.

இப்படி இரு என்ற பலபொருட் சொல் பல சொற்களில் தோன்றுவதை முன்னர் விளக்கியுள்ளேன்.  எடுத்துக்காட்டாக  ஆயிரம் என்ற சொல்:

ஆ =   மிகுந்த.  கூடுதலான.    ஒன்று ஆகப் பெரியது என்றால் மிகவும் பெரியது என்று சொல்வதான பேச்சுவழக்க்

இரு =  பெரிய.

இருள்சேர் இருவினை என்ற குறள் தொடரில் இரு என்பது பெரிய என்று பொருடரும்.  ஈண்டும் அஃதே பொருளாம்.

அம் = இறுதிநிலை அல்லது விகுதி.

எல்லம் கூட்டினால்:  ஆ+  இரு+ அம் =  ஆயிரம்.  அப்போது அது ஆகப் பெரிய எண்.  இப்போது சிறியதே.  மலேசியாவில் மூன்று டிரில்லியன்  அரசுப் பணம் கொள்ளை போய்விட்டதென் கிறார்கள்.  ஆயிரம் இன்று பெரிதன்று.  சொல்லமைப்பில் அது பெரிது. இன்றைச் சுற்றமைப்பில் குட்டிதான்.

இரு என்பதுபோலும் சொற்கள் சொல்லமைப்பில் பயன்பட்டுள்ளன.

சில சொற்கள் நெல்வயல்களில் உழைத்தோரால் உருவாக்கப்பட்டவை.
அவற்றுள் சேமித்தல் சேகரித்தல் என்பவை கவனிக்கத்தக்க மேன்மை உடையவை.

சேர் + மி =  சேர்மித்தல்.  

இது வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல்  உருவாக்கும் பொதுமக்களின் திறமை. சொல்லிக்கொடுத்ததை மட்டும் படித்த புலவனுக்குப்
புரியாத திறமை.  இது மொழிக்கு உதவியுள்ளது.

தமிழ் என்பது மக்கள் மொழி.

சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று வீழ்ந்து சேமித்தல் என்றானது.  சேர்த்தலும் சேமித்தலும் ஒன்றானாலும் நுண்பொருள் வேறுபாடு உடையவை.  சேமிப்பு வங்கி என்னும்போது இச்சொல் நன் கு பயன்படுகிறது.  சேர்ப்பு வங்கி என்றால் சிறக்கவில்லை.

சேகரித்தல்:   இது சேர் + கு + அரி  + தல்.

இங்கும் ரகர ஒற்று வீழும்.  முதற்சொல் சே என்று ஆகும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல். இங்கு சொல்லிடைநிலையாகப் பயன்பட்டது.

அரித்தலாவது  தன்னருகில் வரும்படியாக இழுத்தல்.  அருகு > அரு> அரி.
இதில் குவிகுதி வினையாக்கச் சொல்லமைப்பு.  இந்தக் கு தேவையில்லை.  ஆகவே  அரு என்பதை மட்டும் கொண்டு, ஓர் இ வினையாக்க விகுதி சேர்த்து
அரி என்ற சொல் படைக்கப்பட்டது.  அரு  இ!   என்றால் பக்கத்தில் வா என்று வாக்கியமாகும் .

சேகரி என்பதில் இந்த   அரி பயன்பட்டது.

இன்னொரு நாள் சந்திப்போம்.


வெள்ளி, 25 மே, 2018

மோசம் - சொல் மோசமன்று.


இந்நாள்  மோசமென்னும் வழக்குச் சொல்லினை அறிந்து இன்புறுவோம். ஒன்றை மோசமெனின் அது ஏற்றுக்கொள்ளத் தக்க நிலையினின்றும் மிகத் தாழ்ந்துவிட்டதென்று பொருள்.  இச்சொல் மதிமோசம், பொருள்மோசம், மோசம் போனான்மோசடி என்ற பல நிலைகளில் வரும்.

உணவுப் பொருளில் ஈ மொய்ப்பதுதான் மோசம்.  இப்படி மொய்க்கப்பட்டது விரைவில் கெட்டுவிடுவதையும் அதை உண்டவன் நோய்வாய்ப்படுவதையும் கண்டனர்.  எனவே மொய்க்கப்பட்டது  ஏற்புடைத்தன்று என்று முடிவுகட்டினர்.

இக்கருத்தினின்று மோசமென்பது சொல்லாகத் தோன்றியது.


மொய்+ அம் =  மோயம்.   இது முதனிலை திரிந்து நீண்ட தொழிற்பெயர்.
தொழிற்பெயர் என்றால் வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்.

யகரம் சகரமாக மாறுமாதலின் இது பின் திரிந்தது:

(மோயம்) > மோசம்.   >ச திரிபு.  தரம் தாழ்ந்தது என்பது பொருள்.

மோயமெனற்பாலது வழக்கொழிந்தது.

மோயன் என்பது சிப்பந்தியைக் குறிக்கும்.( தாழ்நிலையன் .) இவர்கள் கூட்டமாய் நின்று வேலையில் ஈடுபடுவதால் இப்பெயர் பெற்றனர் ..  படித்தரக் காரர் என்றும் பொருளாகும்.  மோயனென்பது ஒரு குடும்பப் பட்டப்பெயர் என்றும் அறியப்படுகிறது.

மூசுதல் -  கெட்டது என்றும் மொய்த்தல் என்றும் இருபொருளுடைய சொல்.

இனிமூசு+ அம் = மோசம் எனினும் அதுவாம்.  மொய்த்தது என்றும் கெட்டது  என்றும் இருபொருளுமுடையதாகும்.

மூசு > மூஞ்சு > மூஞ்சல்:  இதுவும் கெட்டதெனப் பொருள் படும்,

முனிவரும் மோனமும் என்னும் இடுகையில் கூறப்பட்ட திரிபுகளை
நினைவு கூர்க.  உகரம் ஓகாரமாகவும் வருக்கங்கள் ஏற்பவும் திரிதலுடையன.

மறப்பின் சொடுக்கிக் காண்க:

மொய் என்ற சொல்லும் மோ  என்பதனுடன் தொடர்புள்ளதாகும்.  ஈக்கள்
மொய்த்து மோப்பமிட்டு உண்கின்றன. இது கீழ்த்தர நடவடிக்கை என்று அறிக.

http://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html

=========================================================================

அடிக்குறிப்பு.

இந்நாள் என்பது முன்னர் இன்னாள் என்று மேலே கொடுக்கப்பட்டிருந்தது.  இது
தவறு,  இந்த எழுத்துரு மென்பொருள் நகர எழுத்தை வருவிக்க இயலவில்லை.
இப்போது சரிசெய்யப்பட்டிருப்பதால் திருத்தப்பட்டுள்ளது.  இதுபோலும் தவறுகள் 
தோன்றினால் பின்னூட்டம் இடுங்கள்.   கண்டுபிடித்துத் திருத்திவிடுகிறோம்.

இ+ நாள்=  இந்நாள்.     இன்னாள்  அன்று.

சில வேளைகளில் மென்பொருள் ஒத்துழையாமை வருத்தமளிக்கிறது.

கைப்பேசிகளிலும் தொந்தரவு ஏற்படுகிறது.  என்செய்வது.  பொறுமை  
கடைப்பிடித்தால் கணினி நன்மை நல்கும் பின்பு.

பிரிட்டீஷ் இந்தியாவில் அடிமைகள்.



இந்தியா என்பது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு   ஒரு வளமான களமாக இருந்ததென்றே தெரிகிறது.  இங்கு சாதியிற் குறைந்தவர்கள் இருந்தார்கள் என்பது அந்த வளத்திற்கு ஒரு பலம் சேர்த்தது.  பலர் அடிமைகளாக வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.  இஃது ஆராய்ச்சிக்குரிய ஓர் விடயமென்பதில் ஐயமில்லை.   நீங்கள் வரலாற்றாராய்ச்சி செய்பவராக இருந்தால் இதை நன் கு ஆராய்ந்து  முனைவர் பட்டம் பெறலாம்,

 உங்களுக்குச் சில குறிப்புகள்:


Between 1772 and 1833, the British parliament debates, as recorded in Hansard confirm the existence of extensive slavery in India, primarily for Arabian and European colonial markets under the East India Company

Hansard Parliamentary Papers 125 (1828), 128 (1834), 697 (1837), 238 (1841), 525 (1843), 14 (1844), London, House of Commons

---------------------------------

In fact, eighteenth century Europeans, including some Britons, were involved in buying, selling and exporting Indian slaves, transferring them around the subcontinent or to European slave colonies across the globe. Moreover, many eighteenth century European households in India included domestic slaves, with the owners' right of property over them being upheld in law. Thus, although both colonial observers and subsequent historians usually represent South Asian slavery as an indigenous institution, with which the British were only concerned as colonial reforms, until the end of the eighteenth century Europeans were deeply implicated in both slave-holding and slave-trading in the region.

 Slavery, Abolitionism and Empire in India, 1772-1843

சீனாவிலிருந்து தென் கிழக்காசியாவிற்குக் கொண்டுவரப்பட்டோர்  ஈயமண் எடுத்தல் மற்றும் பொருளியலை அமைத்தல் முதலிய செய்ல்களுக்காகக் கொண்டுவரப்பட்டனர்  என்று தெரிகிறது.   ரப்பர்பால்   (தேய்வைப் பால் அல்லது மரச்சாறு  )   எடுப்பதற்கு இந்தியர்கள் கொண்டுவரப்பட்டனர் என்று அறிகிறோம்.


பிரீட்டீஷ் அரசு அடிமைப்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்குச் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டோர் பலரும் இந்தியார்களாலே அடிமைப் படுத்தப்பட்டுக் கிடந்தவர்கள்.  பழைய அடிமைகளை இடம் மாற்றியது அடிமைப் படுத்தியதாகாது என்பதுதான் அந்த வாதம்.   இந்த வாதமும் திறமையான வாதமே ஆகும்.

அனுபவப் பட்ட  (பட்டறிவுடையஅடிமைகளை வாங்கிச் சென்றார்கள்.  அதற்கென்ன  என்பர்.

Slavery was endemic in India when Europeans arrived. They could only be enslaved through warfare according to Muslim rules, but were widespread in Hindu territories.   European Slave Trading in the Indian Ocean, 1500–1850 Table 1 gives the numbers of slaves traded by Europeans in and out of India.

ஒரு பதில் இப்படி இருந்தது.