நகரமயம் ஆகிவிட்ட ஜூரோங் வட்டம்
நலிவில்லாச் சிங்கையிலே நாலு பேர்கள்
புகழ்மலியப் பேசிடுமோர் புதுமை ஆக்கம்;
பொலிவான அடுக்குமனை, தொழில்கள் மேவும்.
துகள்கூளம் இல்லாத தூய்மை போற்றும்
சுடர்பகுதி இங்குபல கொசுக்கள் என்றால்
தகவுரிய தகவலிது என்ப தாமோ?
தணியாத கொசுப்படைக்கு வெற்றி யாமோ!
குறிப்புகள்:
நகரமயம்: இங்கு ஜுரோங்க் என்னும் புதுநகர்
உள்ளது. எல்லா வசதிகளும் உள்ளன.
ஜுரோங்க்: இது ஒரு மலாய்ச் சொல். இடப்பெயர்.
இதை மொழிபெயர்க்க முடியவில்லை. இச்சொல்லுக்கு
என்ன பொருள் என்பதிலும் மூலச் சொற்கள் எவை
என்பதிலும் மாறுபாடுகள் உள்ளன.
நலிவில்லா - கெடுதல் இல்லாத.
நாலு பேர்கள்: மக்கள்.
பொலிவு: அழகு.
அடுக்குமனை: அடுக்குமாடி வீடுகள்.
சுடர் பகுதி : விளங்கும் இடம்.
தகவுரிய : உண்மையான.
கொசுக்களைக் கொல்லப் பல முயற்சிகள்
நடந்துகொண்டுதான் உள்ளன; ஆனால்
மழை பெயத பின் எப்படியோ வந்துவிடுகின்றன.
ஆகவே " தணியாத".
உலகம் உள்ளளவும் அவையும் இருக்கும் என்று
தெரிகிறது. என் செய்வோம்?
நலிவில்லாச் சிங்கையிலே நாலு பேர்கள்
புகழ்மலியப் பேசிடுமோர் புதுமை ஆக்கம்;
பொலிவான அடுக்குமனை, தொழில்கள் மேவும்.
துகள்கூளம் இல்லாத தூய்மை போற்றும்
சுடர்பகுதி இங்குபல கொசுக்கள் என்றால்
தகவுரிய தகவலிது என்ப தாமோ?
தணியாத கொசுப்படைக்கு வெற்றி யாமோ!
குறிப்புகள்:
நகரமயம்: இங்கு ஜுரோங்க் என்னும் புதுநகர்
உள்ளது. எல்லா வசதிகளும் உள்ளன.
ஜுரோங்க்: இது ஒரு மலாய்ச் சொல். இடப்பெயர்.
இதை மொழிபெயர்க்க முடியவில்லை. இச்சொல்லுக்கு
என்ன பொருள் என்பதிலும் மூலச் சொற்கள் எவை
என்பதிலும் மாறுபாடுகள் உள்ளன.
நலிவில்லா - கெடுதல் இல்லாத.
நாலு பேர்கள்: மக்கள்.
பொலிவு: அழகு.
அடுக்குமனை: அடுக்குமாடி வீடுகள்.
சுடர் பகுதி : விளங்கும் இடம்.
தகவுரிய : உண்மையான.
கொசுக்களைக் கொல்லப் பல முயற்சிகள்
நடந்துகொண்டுதான் உள்ளன; ஆனால்
மழை பெயத பின் எப்படியோ வந்துவிடுகின்றன.
ஆகவே " தணியாத".
உலகம் உள்ளளவும் அவையும் இருக்கும் என்று
தெரிகிறது. என் செய்வோம்?