பாவம் துருவம் ஒருவிப் பிறந்த
காவல் மிகுந்த துருவக் கரடி.
செய்பனிச் சூழலில் செம்மை செழிக்க
உய்வுற வளர்ந்த ஒண்மை வளர்ப்பு!
இருபத் தேழு எழில்நல் ஆண்டுகள்
அரும்பதிச் சிங்கை விலங்கியல் தோட்டத்துச்
செல்லக் கரடியாய்ச் சீர்பெறு வாழ்நாள்
உள்ளுதொ றினிக்கத் துள்ளும் துடிப்புடன்
தந்து நிறைத்தது தாழ்விலா வாழ்வதே.
உந்திப் பலருளம் உவகையில் மேற்செல
மங்கையர் சிறுமகார் மாணுடை ஆடவர்
சிங்கையர் யார்க்கும் சேர்த்தது மாற்றம்.
நன்மருத் துவர்கள் நாடி அரில்தபப்
பொன்மனங் கொண்டு பொருத்திய முடிவால்
தானியற் கைதனை வீண்வலி அகற்ற
மேனிலைப் படவே எய்தி மறைந்தது.
இருக்கலாம் இனியே பெருக்குறு நோயுடன்
உறுத்தும் மாத்துயர் மலையுயர் வருத்தம்.
என்றினிக் காண்போம் இனுக்காக் கரடியே?
மென்றுணை புரந்தாய் நீயே
நன்றினி நினைத்துப் புலம்புவ தன்றியே.
அரும்பொருள்:
துருவக் கரடி : polar bear
ஒருவி : விலகி, நீங்கி.
This bear was Singapore born.
செய்பனி : செயற்கைப் பனிச் சுற்றுச்சார்பு.
உய்வுற : மேலோங்கும்படி
ஒண்மை : ஒளி பொருந்திய தன்மை
அரும்பதி : அழகிய நகரம்
உள்ளுதொறு இனிக்க: நினைத்தாலே இனிமை
சேர்க்கும்படி
மாற்றம் : வாழ்க்கையில் மாற்றம்.
அரில் தப - ஒரு குற்றமும் இன்றி;
பெருக்குறு நோயுடன்: நோய் மிகும் நிலையில்
மாத்துயர்: பெரும் துன்பம்.
இனுக்கா : கரடிக்கு வைத்த பெயர்.
மென்றுணை: மெல்லிய துணை.
https://www.straitstimes.com/singapore/singapore-zoos-inuka-the-polar-bear-put-down-at-27-on-humane-and-welfare-grounds
காவல் மிகுந்த துருவக் கரடி.
செய்பனிச் சூழலில் செம்மை செழிக்க
உய்வுற வளர்ந்த ஒண்மை வளர்ப்பு!
இருபத் தேழு எழில்நல் ஆண்டுகள்
அரும்பதிச் சிங்கை விலங்கியல் தோட்டத்துச்
செல்லக் கரடியாய்ச் சீர்பெறு வாழ்நாள்
உள்ளுதொ றினிக்கத் துள்ளும் துடிப்புடன்
தந்து நிறைத்தது தாழ்விலா வாழ்வதே.
உந்திப் பலருளம் உவகையில் மேற்செல
மங்கையர் சிறுமகார் மாணுடை ஆடவர்
சிங்கையர் யார்க்கும் சேர்த்தது மாற்றம்.
நன்மருத் துவர்கள் நாடி அரில்தபப்
பொன்மனங் கொண்டு பொருத்திய முடிவால்
தானியற் கைதனை வீண்வலி அகற்ற
மேனிலைப் படவே எய்தி மறைந்தது.
இருக்கலாம் இனியே பெருக்குறு நோயுடன்
உறுத்தும் மாத்துயர் மலையுயர் வருத்தம்.
என்றினிக் காண்போம் இனுக்காக் கரடியே?
மென்றுணை புரந்தாய் நீயே
நன்றினி நினைத்துப் புலம்புவ தன்றியே.
அரும்பொருள்:
துருவக் கரடி : polar bear
ஒருவி : விலகி, நீங்கி.
This bear was Singapore born.
செய்பனி : செயற்கைப் பனிச் சுற்றுச்சார்பு.
உய்வுற : மேலோங்கும்படி
ஒண்மை : ஒளி பொருந்திய தன்மை
அரும்பதி : அழகிய நகரம்
உள்ளுதொறு இனிக்க: நினைத்தாலே இனிமை
சேர்க்கும்படி
மாற்றம் : வாழ்க்கையில் மாற்றம்.
அரில் தப - ஒரு குற்றமும் இன்றி;
பெருக்குறு நோயுடன்: நோய் மிகும் நிலையில்
மாத்துயர்: பெரும் துன்பம்.
இனுக்கா : கரடிக்கு வைத்த பெயர்.
மென்றுணை: மெல்லிய துணை.
https://www.straitstimes.com/singapore/singapore-zoos-inuka-the-polar-bear-put-down-at-27-on-humane-and-welfare-grounds