ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

இது பூச்சிகளின் உலகம்.



பூச்சிகள் ஆளிடம்  பூவுலகம் மாந்தற்குப்
பேச்சென்ன பேரரசு யானென்று  ---  கூச்சல்
குறைக்கசின் கோலிகள் கூத்தடிக்கும் கூடி
நிறைப்பன நீணிலம் காண்.


பொருள்
இவ்வுலகம் முழுமையும் பூச்சிகளே ஆட்சி செய்கின்றன.
மனிதன் தானே பேரரசு என்று பேசிக்கொண்டிருக்கிறான்;
பாக்டீரியாக்கள் எங்கும் கூத்தடிக்கின்றன;  இந்த
உலகத்தை நிறைப்பவையும் அவையே.  நீ அறிந்துகொள்,

சின்கோலிகள் =  பாக்டீரியாக்கள்.

பலவிதச் சின்கோலிகளாலும் பாதிக்கப்பட்டு
மருந்து உட்கொண்டிருப்போரும் இங்கு நிறைந்துள்ளனர்.
மனிதன் பெருமைகொள்ள எவையுமில்லை. 

இந்த வெண்பாவைப் பாடி மகிழ்க.


Please note an unknown virus is inserting dots in the text area freely
at will.  We have removed some dots. As they may return, we shall
review this and other posts whenever time permits. There are
also extra charges for us.








கள்ளக் கடிதம் வந்தது.....

2015 தேதி இட்ட கடிதமொன்று இப்போது தான்
மின்னஞ்சலில் வந்து கிடைத்துள்ளது.  எழுதியவர்
சொல்லாய்வு இலக்கியம் முதலியவற்றில்
எம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத்
தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலெதுவும் எழுதவில்லை.இவர்
யாரென்று தெரியவில்லை. 

இவர் வேண்டுமானால் இங்கு ஓர் உறுப்பினர்
ஆகி இடுகைகளுக்குப் பின்னூட்டம் இட்டு
தாம் ஓர் இயந்திர மனிதரல்லர் என்று உறுதி
செய்ததன்பின் ,  மீண்டும் எமக்கு மடல்
வரையும்படி யாமே  அழைப்போம்.

இது கள்ளப் பரவுமென்பொருளால் அனுப்பப்
பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

பந்தியும் சிப்பந்தியும் ( பல்- பன் அடிச்சொல்)

பந்தி என்னும் சொல்
பந்தி என்னும் சொல் எப்படி அமைந்தது? 
 பணம் பந்தியிலோ குலம் குப்பையிலேஎன்பது ஒரு தமிழ்ப் பழமொழி.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஎன்று தொடங்கும்      ஒரு திரைப்பாடலை எழுதிய கவி, அமரர் கா.மு. ஷெரீப் என்று தெரிகிறது. குலத்தினும் பணமே ஆற்றல் மிக்கது என்கிறது பழமொழி. “ இந்தப் பழமொழியை அறியாதவன் மனிதன் இல்லேஎன்`கிறார் கவிஞர்.
ஆனால் பந்தி என்ற சொல்லின் தோற்றம் அறிந்துகொள்ள இந்தப் பழமொழியின் உதவி தேவை இல்லை.   பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் வரிசை அல்லது பல வரிசைகள். அங்கனம் வரிசையாக அமர்ந்துண்ணும் உணவுக் கொடை அல்லது விருந்து. 1[
பல்: அடிச்சொல்.   பொருள்:  பொருந்தி அல்லது கூடி யிருத்தல்.

இதனடிப் பிறந்த சொற்கள் சிலவற்றையாவது  அறிந்துகொள்வோம்.
பல்   -.  மேவாய் கீழ்வாய் எலும்புகளுடன் பொருந்தி நிற்பது.
பல் > பல்+து >  பற்று.    (௳னம் பொருந்தியுள்ள நிலை).
பல் > பல்+ தி > பன்றி.   ( நீண்ட பற்களை யுடைய விலங்கு).
பல் >  பன் > பன்+து > பந்து.
.நோ:  சில் >  சின் > சிந்து .
( சிந்து என்பது சிறியது என்று பொருள்படும் சொல். அளவடிக்குக் குறைந்த நிலையினது யாப்பியலில் சிந்து எனப்படும்.  சிந்து  என்பது சிறு நூலையும் குறிக்கும் என்றார் பி.டி. சீனிவாச ஐயங்கார் எனும் வரலாற்றறிஞர்.  இது சிந்து நதி அளாவிய நிலப்பகுதிகளில் விற்கப்பட்டதனால், நதியும் அப்பெயர் பெற்றது. இச்சொல் பின் ஈரான் சென்று ஆங்கு இந்து ஆனது.  பின் இத்திரிபு மீண்டும் இந்தியாவிற்கு வந்தேறி இறுதியில் ஒரு மதத்திற்கும் பெயரானது என்பதை முன் எடுத்து எழுதியுள்ளோம்.)
எங்கெங்கு உலவினும் சில், சின் என்ற அடிகள் இன்னும் நம்மிடை நின்று நிலவுதல் நம்  பாக்கியமே ஆகும். இது நிற்க:
பந்து என்பது கயிற்றாலோ துணியாலோ சுருட்டிப் பிடிக்கப்பட்ட உருண்டை.  இப்போது செய்பொருள்கள் மாறிவிட்டன.
பல் > பன்  > பந்தி.  (பன்+தி).
.நோ:   முன்+தி > முந்தி.
பலர் பொருந்தி அல்லது சேர்ந்து உண்பதே பந்தியாகும்.  

திரட்சி என்பதன் முதலெழுத்தாகிய தி,  ஈண்டு விகுதியாய் நிற்றலும் பொருத்தமே ஆகும்.
பல் பல:  ஒன்றுக்கு மேற்பட்டவை..   (   இரண்டும் அதற்கு மேற்பட்டவையும் எனினுமது.)
==========================
இனிச் சிப்பந்தி என்ற சொல்லையும் அறிவோம்.  

சில் > சி.  இதன் பொருள் சிறிய என்பது.

பல்> பல்+தி = பந்தி. பற்றிக்கொண்டிருப்போர் என்று இங்கு பொருள்.
பற்றுதல் என்பதும் பல்+து என்றமைவது.

பல்>பன்>பன் தி > பந்தி.   லகரனகரப் பரிமாற்றத் திரிபு.

சிறிய வேலைகளுக்காக ஒரு முதலாளியைப் பற்றிக்கொண்டிருப்போர்,

சில் பந்தி > சிப்பந்தி.
பல் என்ற அடிச்சொல் பொருந்துதல் என்னும் கருத்துடைய
முன்மையான அடிச்சொல் ஆகும்.  சில்பந்தி நன்`கமைந்த தமிழ்ச்சொல்.

அடிக்குறிப்பு:

1  (விருந்து என்னும் சொற்குப் புதுமை என்னும் பொருளும் உண்டு.)
விருந்து + அம் = விருத்தம்: வலித்தல் விகாரம்.  பொருள்: புதுவகைப் பா. 
பின் திருத்தம் செய்யப்படும்.