இவ்விரண்டு இன்னிசை வெண்பாக்களும்
கர்நாடகா மாநிலத் தேர்தல்கள் பற்றியவை. மோடியாரின்
வாய்ப்புகள் மாடிபோல் உயர்ந்து நிற்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. அவை மோடி மந்திரம் (மேஜிக்) என்`கின்றன. தேர்தல்
முடிவுகட்கு ஆர்வமுடன் காத்திருப்போம். நல்ல
முடிவாகட்டும் .
இன்னிசை வெண்பாக்கள்.
மோடி அமிட்சா மொழிமந் திரங்களே
கூடி உவப்புடனே கோடியாய் வாக்குகள்
வந்து குவிந்திடுமோ வைகுவம் ஆர்வமுடன்
செந்தண் முடிவாக்கும் சீர். 1
அரசகுல ஆள்வொழிந் தாலும் அகலா
முரசுகளை நன்றாய் முழக்கிவரும் கட்சிகள்
தந்தைதாய் பாட்டன் தருகோலால் ஆங்கமைதல்
நந்தா நடப்பாமோ நாடு. 2
அருஞ்சொற்பொருள்:
பாட்டு 1
மொழி = பேசுகின்ற; பரப்புரை செய்கின்ற.
மந்திரம் - மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒருவித மாயமயக்கு.
கூடி - ஒன்றாகி.
இருதலைவர்களின் இணைதிறனைக் குறிக்கிறது.
உவப்பு - மகிழ்ச்சி.
வைகுவம் - காத்திருப்போம்.
செந்தண் - சிறந்த.
முடிவு ஆக்கும் - முடிவுகளை உண்டாக்கும்.
பாட்டு 2
ஆள்வு - ஆட்சிமுறை
அகலா = அரசர்கள் பதவியேற்கும் முறையினின்று
விலகாத;
தருகோலால் = தருகின்ற ஆட்சி
முறையால்.
ஆங்கு அமைதல் - அவ்வாறு
( ஆட்சி) அமைதல்.
நந்தா - கெட்டுப்போகாத;
நீங்காத.
நடப்பு ஆமோ = நிகழ்வும் ஆகுமோ.
நாடு - சிந்தனை செய்க.