வெள்ளி, 15 டிசம்பர், 2017

நிவாரணம் எங்கே? இதோ....





நிவாரணம் என்ற சொல்லை ஆய்வுசெய்க.
ஒரு துன்பமோ அல்லது துயரோ:
நி   =  நீங்கி;
வார் =  வருகின்ற;

அணம் :  இது ஒரு விகுதி.  பெரும்பாலும் அண்மைப் பொருள் தருவது.     அண் > அண்முதல்;  அண் - அண்மை.  இப்பொருளை இழந்து  வெறும் சொல்லிறுதியாகவும் வரும்.  பட்டு என்பது ஒரு சிற்றூரையும் குறிக்கும்.  அதற்கு அண்மிப் பெரிதாய் இலங்குவது பட்டணம்.  பல பட்டுக்கள் அண்மி நிற்கும் ஒரு சிறுநகரம் பட்டணம்.

கட்டணம்:  ஒருவன் சென்று அல்லது அண்மிக் கட்டும் தொகை.  அணிமைப்பொருள் தேய்ந்துவிட்டதெனினும் ஒப்புக.
வார் என்பது வரு என்பதன் திரிபு.  வரு> வாராய்! வரு > வாரார் ( எதிர்மறை).  வரு> வாரும், வாருங்கள்.

இந்த வார் என்ற சொல் நிவாரணம் என்பதில் பயன் கண்டுள்ளது.
நிவாரணம்: ஒரு துயர் அல்லது இடர், நீங்குவதற்கான; அல்லது கோணல் நிமிர்வதற்கான நிலை.

ஒரு கம்பியை நிமிர்த்தினால் நீங்குவதும் நிமிர்வதும் ஒன்றென்பது விளங்கும்.  பின்  வளைந்த நிலையிலிருந்து  நீங்கி முன் இருந்த நிலைக்குச் செல்கிறது கம்பி.  ஆக அது நிமிர்ந்துவிட்ட்து.

நி. நீ எல்லாம் ஒன்றுதான்.

சொற்களின் அடிப்படைகளைக் கண்டுகொண்டால்
தமிழ் எளிது; இனிது.





அன்னியன்

அந்நியன்
 


அன்னியன் அல்லது அந்நியன் என்பதும் மிக்கத் திறமையுடன் அமைக்கப்பட்ட ஒரு சொல் என்பது நன்கு தெரிகிறது.

இலக்கணத்தைப் படித்து, எல்லாவற்றையும் இலக்கணப்
படியேஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்வாருளர்.

எல்லாம் அப்படியே அமைக்கப்பட்டிருந்தால் அல்லவோ
அவ்வழி மாறாமல் சென்று கண்டுபிடிக்க முடியும்? சொல்
அமைத்தவர்களும் பல குறுக்குவழிகளைக்
கையாண்டிருக்கிறார்கள்.


அல்+ நீ +அன் = அன்னியன். (நானும் நீயும் அல்லாத
 பிறன்,) நீ என்பது நி என்று குறுக்கப்பட்டது.


இதில் அல் என்பது, அயல் என்பதன் குறுக்கமாகவும்

அல் என்ற அன்மைப் பொருள்தரு சொல்லாகவும் இரண்டு
நன்மைகளைச் செய்கிறது.

இங்கு பழம்+ நீ என்பது பழனி என்று மாறியதாகப்
பற்றாளர் அல்லது பத்திசெய்வோர்
கூறுவதில்,  நீ என்பது நி என்றே குறுகியது.


அன்னியன்> அன்ய.

Posted on February 23, 2007 retrieved
























அழிந்த சிவஞானபோத உரைகள் பாடல் 1.2 மற்றும் 10.2

சிவஞான போதத்திற்கு யாமெழுதிய உரையில் 1,  2 -ம் பாடல்களுக்கானவை அழிந்தன. இறுதிப்பாடலுக்கான இரண்டாம்பகுதியும் அழிந்தது. இவை கள்ள மென்பொருள்களால் அழிவுண்டன. வெளியாரால் மறைவாக அனுப்பப்பட்டவை இவை.

2008 முதல் 2014 வரை எழுதிய வேறு கவிதைகள் இடுகைகளும் அழிந்தன.

இவை  ஆயிரத்துக்கு மேற்பட்டவை. 

இவற்றுள் எவையேனும் உங்களிடம்இருந்தால் அனுப்பி உதவுவீர்களானால் நன்றியுடையேன்.

இவை சேமித்து வைக்கப்பட்டிருந்த கணினிகளும் செயலிழந்துவிட்டன.

2015, அதன் பின் உள்ளவை பாதிக்கப்படவில்லை.