இவ்வாரத்தில் தாளிகைகளையும் இணயத் தாளிகைகளையும் ஆட்சி செய்த செய்திகள்
பல. இவற்றுள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தினின்றும் வந்த ராகுல் காந்தியின்
தேர்தல் படையணி தோல்வி அடைந்தது வியப்புக்குரிய செய்தியாகப் பலரால் கருதப்படுவதாகும்.
ஒரு கட்சியின் துணைத் தலைவராக மட்டும் உள்ள இராகுலையும் பிரதமர்
மோடியையும் தொலைகாட்சிகள் ஒரே கட்டத்துக்குள்தான் காட்டின. அவர் சொல்வதை முன்னிறுத்தி
விளக்கவுரைகள் பகர்நதன. இவ்வளவு மேன்மை அளிக்கப்பட்டிருப்பினும்
அவர் அணி தோற்றது.
மோடி இதுவரை எடுத்த முடிவுகள் எல்லாம் நல்லவை அல்லது எதிர்காலத்தில்
நன்மை விளைப்பவை என்று மக்கள் கருதியிருப்பதால் இராகுலின் எதிர்ப்பேச்சு எடுபடவில்லை
என்று தெரிகிறது,
தற்போதுள்ள நிலையில் இராகுல் ஓய்வு எடுத்துக்கொள்வதே சரி என்று தோன்றுகிறது.