வெள்ளி, 3 நவம்பர், 2017

தூதன் என்ற சொல்.

தூதன் என்ற சொல்லைச் சில ஆண்டுகட்கு முன் விளக்கியிருந்தேன். அது இப்போது இணையத்தில் இல்லை. அதை மறுபதிவு செய்வோம்.

தூ என்பது ஓரெழுத்துச் சொல்.

தூ என்றால்:

சீழ்.
பகை
பற்றுக்கோடு. SUPPORT
சிறகு
வெண்மை "தூவெண் மதி சூடி" (சைவத் திருமுறை)
சுத்தம். ( உத்தம் > சுத்தம்: தூய்மை முதன்மை என்று பண்டையர் கருதினர்).
தசை ( தசை> சதை. ச>த)
வலிமை.

இத்தனை பொருள்களும் உள்ள சொல்தான் இந்த ஓரெழுத்துச் சொல்.

தூதனாய் இருப்போன் மன்னன்பால் பற்றன்பு ( விசுவாசம்)


உடையவனாய் இருத்தல் முதன்மையாகும். ஐந்தாம்படை


செயல்பாடுகள் உடையவன் தூதன் ஆதல் இயலாது.


ஆகவே, தூய்மை குறிக்கும் தூ என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து


தூதன் என்ற சொல் பிறந்தது.













மேலும் தூது செல்பவன் அரசுக்கு என்றும்


பற்றுக்கோடு தருவோனாக , உடையவனாக செயல்படவேண்டும்










ஒற்றன் என்பவன் ஒன்றியிருந்து இரகசியங்களை
அறிந்துவருபவன்.

ஒன்று(தல்) > ஒன்று > ஒற்று (வலித்தல்) > ஒற்றன்.

தூதன், தூது : இத்தமிழ்ச்சொல் பலமொழிகளையும்
அளாவி நிற்பது பெருமைக்குரித்தேயாம்.

தூ ( அடிச்சொல்)

தூது ( து விகுதி) 
இவ்விகுதி பெற்ற பிற சொற்கள்
: மாது, கைது. விழுது தோது  வாது  சூது.
என்பன  காண்க)

தூது + அன்.

பெரும்பாலும் ஆடவரே இத்தொழிலில் ஈடுபட்டமையால்
பெண்பாற் சொல் வழக்கில் இல்லை.


தூதுவை, தூதினி எனலாம்!

தூ என்ற சொல்லின் மூலச்சொல் ஊ என்பது.  இது அ, இ. உ என்ற
முச்சுட்டுக்களில் ஒன்றான  உ என்பதன் நெடில் வடிவம்.  உ என்றால் முன்னிருப்பது, முன்செல்வது என்ற இவைபோலும் பல
முன்னிகழ்வுகளைக் குறிக்கும். தூதன் என்பவன் முன் செல்பவன்.
அரசன் ஒரு நாட்டிடம் தொடர்பு கொள்ள நினைக்கையில்
தூதனையே முன்  அனுப்புவான்.  எனவே தூது என்ற சொல்
முறையாக அமைந்துள்ளது.  ஒரு காதலி ஒரு தோழியைத் தூது
அனுப்புகிறாள்.  அதாவது உ > ஊ :  முன் சென்று அறிந்துவர
அனுப்புகிறாள் என்று பொருள்.

ஊ என்ற நெடிற்சுட்டில் தோன்றி முன்செலவைக் குறித்து, தூய்மை பற்றுக்கோடு ஆகிய நற்குண நற்செயல்களையும் குறித்து,
முன்னணியில் கருதற்குரிய இனிய அமைப்பை இது
வெளிப்படுத்துவதை பகுத்தறிந்துகொள்க.



அறிந்து இன்புறுவீர்.












இலடாக்கில் வானூர்தி ஓடுபாதைகள்.

சீன அரசு அதன் -நிலப்பகுதியில் ஒழுங்கான ஓடுபாதைகளை அமைத்துத்
தன் கடமைகளை முறையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்திய அரசு வெகுகாலமாக இதில் ஒழுங்கான கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. பனிபடர் நிலப்பகுதியான இலடாக்கில்
கவனிப்பின்றி வேலைகள் கிடக்கின்றன. படைவீரர்களைப் பனிப்பாறைகள் அடர்பகுதியில் கிடத்திவிட்டுக் குளிரில் வாடச்செய்துள்ளனர்.  மோடியின் அரசு பதவியேற்ற பின்புதான் இப்போது மீண்டும் இப்பகுதி அரசின் கவனித்தில் வரத் தொடங்கியுள்ளது.

படைவீரர்களை அதிகம் தண்டிக்காமல் வசதிகள் செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. அதை மோடியே நன்'கு நிறைவுசெய்கிறார்.

அதைப்பற்றிய ஒரு துணுக்குச் செய்தி இங்கே உள்ளது.  யாம் படித்துச் சுவைத்தோம்.  நீங்களும்:.......

http://indiatoday.intoday.in/story/doklam-indian-air-force-ladakh-airfields/1/1082130.html


மழைத்துளியே கொஞ்சம் படு



மழைத்துளியே  என்மேல் கொஞ்சம் படு;----முற்றும்
மருவாமலே தண்மை உருவாகவே  உன்னை இடு;
உழைத்தனியே இனிதே காண  விடு --- வந்து
உறவாடவே நெஞ்சம் இனிவாடுதல் ஆமோ தடு.

விளைத்தனையே இன்பம் ஈடொன்  றிலை ---- உன்னை
விழையாமலே மண்ணில் உழல்சோர்விலே உயிர்கள் பல .
களைத்தவரே துள்ளி முன்னுற் றெழ  ----  பொழிவாய்
கணமேனுமே துளிகள் படவேணுமே தண்மை பெற.

உழை = பக்கம்.
ஆமோ =  ஆகுமோ