செவ்வாய், 10 அக்டோபர், 2017

அந்தி

இன்று அந்தி என்ற தமிழ்ச் சொல்லை ஆராய்வோம்.

இது வேறு மொழிகளிலும் சென்று வழங்கிவரும். நம் வீட்டுப் பையன், எதிரிலுள்ள நாலைந்து வீடுகளில் நுழைந்து, அங்குள்ளோரின் தேவைகளையும் கவனித்துவிட்டு இரவில் வீட்டுக்கு வருகிறான் என்றால் அவன் குமுக சேவை செய்கிறான் என்று அர்த்தம்.  வாழ்க தேசிய சேவையும் உலக சேவையும். தற்குறியாக இருப்பதே தவறு. கல்கத்தா அம்மையார் போல உலக சேவை செய்வதோ பாராட்டுக்கு உரியது. சொற்களும் அப்படியே.

அந்தி சாயுற நேரம்
வந்தாரைத் தேடி ஓரம்

என்று ஒரு நகைச்சுவைப் பாட்டை எழுதினார்  கவி கா.மு. ஷ்ரிப் என்ற பாடலாசிரியர். (?) பகலவன் சாய்கிற நேரம்தாம் அந்தி.  சாயுங்காலம் என்றும் சாய்ங்காலம் என்றும் சொன்னாலும்  அதே.

பகலின் முடிவுதான் அந்தி.
இ -  இங்கு.  இன்று.
அ – அங்கு  அன்று.
அன்று =  அன் + து

இன்று வந்துவிட்டால், நேற்றுக்கு முன் உள்ளது அன்று.

அன்று என்பது இன்றும் நேற்றும் முன் உள்ளதும் முடிந்த நிலை.

அன்று > அன்றுதல்.  (முடிதல்).
அன் + து =  1.  அன்று  2. அன்*து (அந்து).
அந்து > அந்தி.  (அந்து+ இ).
~து. ~இ  :  இவை விகுதிகள்.

தி என்பது பல சொற்களில் முடிவாக நிற்பதால் அதை ஒரு தனி விகுதியாகவும் சொல்லி முடிக்கலாம்.  தி என்று முடியும் போதெல்லாம் து+இ என்று சொல்லிக்கொண்டு நீட்டிக்கொண்டிருப்பதும் தேவையில்லை.  நேரம், இடம் , தாள் மிஞ்சும்.

எடுத்துக்காட்டு:
பெய்தல்  மூத்திரம் பெய்தல்; மழைபெய்தல்; நீராகக் கழிதல்.
பெய்+தி = பெய்தி > பேதி.  (கழிச்சல்).
உய்தி;  செய்தி.  கைதி.(கையகப்பட்டவன்).

இவை நிற்க.
அந்தி என்பது நாள் அல்லது பகலின் முடிவு,
அந்தம் – முடிவு.  (பொது).
ஆதி அந்தம்.   ஆதி:  ஆக்கப்பட்ட நாள்;  அந்தம் = முடிவு, 

எழுதிப்பின் புகும்,  புகுத்தப்படும் பிசகுகள் பின் திருத்தப்படும்.

மறுபார்வை செய்த நாள்:   15.6. 19

தெலுங்கும் வடுகும்


தெலுங்கும் வடுகும்
தென் என்பது அடிச்சொல். இது தெல் என்றும் தோன்றுதல் உடையது. 
தென் + கு = தெற்கு.
இங்கு கு என்பது விகுதி.
தெல் + கு =  தெற்கு,
தெல் > தெலுகு. 
இம் மொழிப்பெயரில் கு என்பது விகுதியே.  உகரச்
சாரியை பெற்றது.
தெல் + உ + கு=  தெலுகு.
இச்சொல் ஒரு ஙகர ஒற்று மிக்கும் அமையும்.
தெலுகு > தெலுங்கு.
இதன் பொருள்: தென்மொழி என்பது.
அறிஞர் சிலர் தேன் என்ற சொல்லே குறுகி, தென் என நின்று,  கு விகுதி ஏற்று தெனுகு என்றாகி, தெலுகு, தெலுங்கு என்று திரிந்தது என்பர்.
வடக்கு என்ற சொல்லில்  வட என்பது பகுதி.
வட > வடக்கு.
வட > வாடை.  (வடக்குக் காற்று).
இது நாற்றம் குறிப்பது பிற்கால வழக்கில்.
வடு > வடுகு.  (வடக்கு மொழி).
வடு > வட. 
வட என்பது எச்ச உருவிலிருப்பதால், வடு என்பதே
பகுதியாகும்.
வடு என்ற சொல் எப்படித் தோன்றியது?

நட்டம்......



பல சொற்களை விளக்கவேண்டுமென்று எண்ணினாலும் எண்ணுவதெல்லாம் நடைபெற்றுவிடுவதில்லை. சில இப்போது  அகன்று பின் ஒரு நாள் தோன்றும்.  அப்போது அவற்றைப் பிடித்து இங்கு இடலாம்.
இப்போது நட்டம் என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

இது ஒரு பேச்சுமொழிச் சொல்.   நட்டம் என்று இருந்து பின் நஷ்டம் என்று மெருகு பூசப்பட்ட சொல். சிலர் இதை நஸ்டம் என்று உச்சரிப்பதைக் கேட்டிருக்கிறேன்

எந்த முயற்சியும் நடுவில் நின்று போய்விட்டால் அது நட்டம் ஆகிறது.
நடு > நட்டம்.  (  நடு + அம்).

பத்துகல் தொலைவு செல்லப் புறப்பட்ட ஒருவன், ஐந்து கல் தொலைவிலே அதைத் தொடரமுடியாமல் போனால் , நடந்த ஐந்து கல் நட்டம் அன்றோ? மீண்டும் ஐந்து நடந்து தொடங்கிய இடத்துக்குப் போகவேண்டுமே!

பத்துக் கல்தொலைவு சென்று எதைச் சாதிக்கவேண்டுமென்று நினைத்தானோ  அதையும் கைவிடவேண்டி ஆனதே!

இனி இருபக்கமும் நகரமுடியாமல் போன நிலையாயின் அதுவும் பெரிய நட்டமே!

வாழைப்பழம் ஏற்றிக்கொண்டு இன்னும் ஐந்து கல் சந்தைக்குப் போகாமல், வீடு திரும்ப்பிப் பழங்களும் பயனற்றுப் போம்படியோ அல்லது  ஐந்துகல்லிலே நடுவில் நின்றுவிட்டாலோ.......!

இத்தகு நிலைகளில் உருவானதே     நட்டம் “ என்னும் சொல்.
இக்காலத்து நட்டங்கள் வேறுமாதிரியானவை.  ஆனால் சொல்லோ பழையது.  பழமையை நோக்கியே உணர்க.

நடு >   நட்டம்......