அகர வருக்க்ச் சொறகள் சகர வருக்கமாகத் திரியும் எனற்பாலது போதுமான
அளவில் முன்னர் நம் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. இப்பழைய இடுகைகளை மீண்டும் கவனித்துக்கொள்ளுங்கள்.
இன்று நாம் அணுகவிருக்கும் சொல், முன்னர் ஈண்டும் பிற தளங்களிலும் யாம் வெளியிட்டதே ஆகும்.
ஒரு நோட்டுப் புத்தகத்தில் 1 இவற்றைப்
பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும் சொற்கள் அறியப்படும்போது பட்டியலை வளர்த்துக்
கொள்ளுங்க்கள்.
அகர வருக்கம் சகர வருக்கமாகத் திரிவுறுகையைக் காட்டுவதற்குப் பெரும்பாலும்
அமண் > சமண் என்பது காட்டுவோம். அதாவது
எடுத்துக்காட்டாக.
ஆடி > சாடி. ( நீர் ஆடும் கலம்
).
அடு > அட்டி > சட்டி ( அடுதல் = சுடுதல் ).
அடை > சடை. (>ஜடை).
அடர்ந்த மயிர் திரிக்கப்பட்டுத் தொங்குவது ).
“தாழிருஞ்சடைகள் தாங்கித்
தாங்கருந்தவமேற் கொண்டு” (கம்)
அட்டை > சட்டை. ( இது உடலை அடுத்து நிற்பது என்னும் பொருளில். அடு > சடு.. அட்டை > சட்டை. இது முன்னர் பாம்புச் சட்டையைக் குறித்த்து).
இங்ஙனமே அரண் என்பதும்
சரண் என்று திரிந்த்து.
சரண் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். அரண் புகுந்தேன் = பாதுகாப்பு வளையத்துள் புகுந்தேன்.
சரண் புகுந்தேன் எனினுமது.
உன் அரண் அடைந்தேன் ; பின் அது உன்னிடம்
சரண் அடைந்தேன் என்று வழக்கு அல்லது சொல்லும் விதம் மாறிற்று. எனினும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. அடிப்படை இன்னும்
தெளிவாகவே உள்ளது.
அரண் என்பதன் உண்மைச் (ஆதிச் ) சொல்லமைப்புப் பொருள் இன்னும் புரிந்துகொள்ளத்தக்கதே.
அரு = அரிய.
அண் = அண்முதல், அடைதல்.
அரு+ அண் = அரண்.
காவலுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அரியவை. எங்கும் கிட்டாதவை. எனவேதான் “ அரு” என்ற என்ற சொல்லில் தொடங்கியது.
அரு என்ற சொல்லும் மேலை மொழிகளில் சென்றுள்ளது. இறுதியில் “ரேர்” rare என்று ஆங்கிலம் அதை வாங்கிக்கொண்ட்து.
ஒரு பழைய மொழியிலிருந்து சொற்களை எடுத்துப்பயன்படுத்துவது இயல்பே. அதைச் சுட்டிக்காட்டும்போது பெருமைபேசி ஏற்காமையே
அறியாமை ஆகும்.
அடிக்குறிப்புகள்:
1. (நோடு = காண்(தல்) . நோடு> நோட்டு; பாடு > பாட்டு போல ). நோட்டா என்ற இலத்தீனிலிருந்து
நோட் என்ற ஆங்கிலம் வந்த்தெனில், நோட்டா தமிழ்த்
திரிபு என்று உணர்க.