கீழறுப்பு - சதிநாசம்.
இந்த இரண்டும் கூட்டுச்
சொற்கள். ஒவ்வொன்றிலும் இருசொற்கள் உள்ளன. கீழ் என்பது ஒரு சொல். அறுப்பு என்பது ஒரு சொல். இவை இரண்டும் தனித்தனியாக வரும்போது அவற்றின் பொருள்
வேறுவேறு. ஒன்றாக இணைகையில் அவை குறிப்பன
வேறு பொருள். உரையாசிரியர்கள் நச்சினார்க்கினியர்
முதலானோர் இரு சொற்களும் ஒரு சொன்னீர்மைப்பட்டு நின்றன என்பர். இங்கு நீர்மை என்ற சொல், தன்மை என்பதினும் பொருள்
மிகப் பொதிந்தது ஆகும். நீர் கலந்துவிட்டால்,
எது எந்தக் கோப்பையிலிருந்து ஊற்றியது என்று தெரியாத வண்ணம் கலந்துவிடுகின்றது. இரண்டு
“தான்”கள் ஒன்றாகும்போது அவை இரண்டறக் கலந்துவிடுவதில்லை. எனவே தானிலிருந்து
வந்த “தன்” > தன்மை என்ற சொல்லினும் நீர்மை என்ற சொல்லில் பொருள் தெளிகிறது. நன்கு தெரிகிறது.
கரையான்கள் கீழிருந்து அறுப்பவை. அவை மரக்கட்டையை இரவில் அறுக்கும்போது (அரித்து உண்கையில் ) அதன் ஒலியைக் கேட்கமுடிகிறது. கட்டையின் மேற்பக்கம் பார்த்தால் தெரிவதில்லை.
கட்டை அழகாகவே இருக்கிறது. அதிகம் அறுத்து
உண்டபின் தெரிந்து என் செய்வது. கட்டையை மாற்றவேண்டி
வந்துவிடும். ஆகவே கீழறுப்பு என்ற சொல் நல்ல
பொருண்மையைக் காட்டுகிறது. கீழறுப்பு நடவடிக்கை
என்பது கரையானின் செயலை ஒத்தது. இது மொழிபெயர்ப்புச்
சொல்லா என்று தெரியவில்லை.
It may have been translated from the word "subversion".
It may have been translated from the word "subversion".
சதிநாசம் என்பதும் ஏறத்தாழ
இதே போன்ற நடவடிக்கையைக் காட்டுகின்றது. சதி என்பது
அழிவு, வஞ்சனை மற்றும் துரோகம் என்பன - இப்போது வழங்கிவரும் ஒருபொருட் சொற்கள். இப்போது சதி என்ற சொல்லை ஆய்வு செய்யலாம்.
எடுத்துக்காட்டாக முதலில் சவம் என்னும் சொல் மற்றும் தொடர்புடைய பிற காணலாம்.
சாவு + அம் = சவம்.
சா என்பதே வினையாதலின் இதைச் சா + அம் = சவம் என்று காட்டவேண்டும். விளக்கத்தின்பொருட்டு வு விகுதி கூட்டப்பெற்றே முன்
இடுகைகளில் காட்டப்பெற்றுள்ளது.
இதில் கவனிக்கவேண்டுவது, சா என்ற நெடில் ச என்று குறிலாகிச் சொல் அமைகிறது. சில சொற்கள் இப்படி அமையும்.
இன்னொருவனை சாகும்படி
வெறுப்புரைத்தல், சா > சாபித்தல் > சபித்தல் 1 என்று குறுகும். சாதல் மட்டுமின்றி ஏனைத் துயர்களையும் அடைக என்று ஏசுதலும் பின்னர் இச்சொல்லில்
உட்பட்டுப் பொருள் விரிவுற்றது.
இதுபோன்று அமைந்ததே
சதி என்பதும்.
வினைச்சொல் : சாய் என்பது.
சாய் > சாய்தி > சதி என்று அமைந்தது. முதல் (எழுத்து ) குறுகி
யகர ஒற்றும் மறைந்தது. சாய்தி >
சய்தி > சதி என்றும் காட்டலாம்.
செய்தி என்பது சேதி என்று வந்தது. யகர
ஒற்று மறைந்தது. முதல் நீண்டது.
கெடுத்துச் சாய்ப்பது
என்பது சொல்லமைப்புப் பொருள்..
-----------------------------
சாவித்தல் என்பர் ஆசிரியர் சிலர். சாவித்தல் > சவித்தல் > சபித்தல். வ- ப திரிபும் இதில் வருகிறது.
This post was lost and recovered. Hence it will be published first to remote - save and edited later.
Pl note that either hackers or the autocorrect feature has supplied too many dots in places where they were originally not there. We have corrected them If it recurs we shall check but feel free to inform us through the comments column. We shall be grateful.
This also applies to other posts. tq.
This post was lost and recovered. Hence it will be published first to remote - save and edited later.
Pl note that either hackers or the autocorrect feature has supplied too many dots in places where they were originally not there. We have corrected them If it recurs we shall check but feel free to inform us through the comments column. We shall be grateful.
This also applies to other posts. tq.