இன்று “கலா” என்ற சொல்லை அணுகுவோம்.
கலா என்பது தமிழன்று என்று கருதியவர்கள் உண்டு. இதற்குக் காரணம் இந்தச் சொல் “தேசிய சேவை” செய்துகொண்டிருப்பதுதான். இச்சொல்
பலராலும் விரும்பப்படும் சொல்லாய் இருப்பதும் பிற மொழிகளில் காணப்படுவதும் நமக்குப் பெருமைக்குரியதாகும்.
கலா என்பதுபோன்ற (அதாவது
எதுகைச் ) சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக - பலா,
நிலா, உலா, தலா, விலா, துலா என்பவை. இன்னும்
பெயர்ச் சொற்கள் அல்லாதவைகளும் உள: அலா, இலா, செலா
முதலிய காண்க. எனவே ஒலி முறையில் அது
தமிழ் ஒலியுடைய சொல்லே.
கல்+தல் = கற்றல்.
இங்கு கல் என்பதே பகுதி. இனிக் கல்+வி = கல்வி; கல்+ ஐ = கலை;
கல்+பு = கற்பு; கல் +பு + அன் + ஐ
= கற்பனை; இவை போலவே கல் + ஆ = கலா ஆனது. பல் சுளைகள் உள்ள பழம் பல்+ ஆ = பலா ஆனது போலவும் வானில் நிற்பதும் ஒளிவீசுவதாகவும் கருதப்பட்டது
நில்+ஆ= நிலா என்று ஆனது போலவும் ஆகும். 1
கலாதேவி, கலா நிலையம்
முதலியவும் தமிழின்று கிளம்பிப் பரவிய சொற்களே.
தேவி > தீ (தேய் );
நிலையம் > நில். எம் முன் இடுகைகள்
காணவும்.
_____________________________
அடிக்குறிப்பு
1 இது தமிழ்ச் சொல் என்பது பேராசிரியர் அனவ்ரத வினாயகம் பிள்ளை
அவர்களால் சொல்லப்பட்டது. (1935) இவர் கழகத் தமிழ்க் கையகராதித் தொகுப்பாளர் .
_____________________________
அடிக்குறிப்பு
1 இது தமிழ்ச் சொல் என்பது பேராசிரியர் அனவ்ரத வினாயகம் பிள்ளை
அவர்களால் சொல்லப்பட்டது. (1935) இவர் கழகத் தமிழ்க் கையகராதித் தொகுப்பாளர் .