சனி, 15 ஜூலை, 2017

அடு > சடு.

அடு (சடு ‍ சுடு) என்பதன் அடியாகச் சொற்கள்


அடு சடு.
அடு > சட்டு > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.

அடு > சுடு. (அகரம் உகரமாகியும் சகர ஒற்று முன் ஏறியும் நின்றது).

அடு ( அடுத்திருத்தல், இடையீடின்றி நெருக்கமாதல் முதலிய)

அடு > அடுத்தல்.
அடு > அடர். ( அர் வினையாக்க விகுதி).
அடு > அடை.
அடு > அடைதல்,அடைத்தல்.
அடு > சடு > சடம். <,,,,,,,>(ஜடம்)
அடு > சடு > சடலம்.
அடு > (அட்டு ) > அட்டை

அடு (சடு ‍ சுடு) என்பதன் அடியாகச் சொற்கள்


அடு > சடு.
அடு > சட்டு > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.

அடு > சுடு. (அகரம் உகரமாகியும் சகர ஒற்று முன் ஏறியும் நின்றது).

அடு ( அடுத்திருத்தல், இடையீடின்றி நெருக்கமாதல் முதலிய)

அடு > அடுத்தல்.
அடு > அடர். ( அர் வினையாக்க விகுதி).
அடு > அடை.
அடு > அடைதல்,அடைத்தல்.
அடு > சடு > சடம். <,,,,,,,>(ஜடம்)
அடு > சடு > சடலம்.
அடு > (அட்டு ) > அட்டை
அடு  >  ச டு  >  சட் டை 

இன்னும்பல 











நெய், நெயவு, நேயம், ஸ்நேகம்.

நெய், நெயவு, நேயம், ஸ்நேகம்.

நெய் என்பது ஒன்றாக உருகி ஒட்டி நிற்கும் பொருள். நெயவில் அல்லது நெசவில் நூல்கள் பின்னிப்பின்னி இழை அணுக்கமாகத்
தொடுக்கப்பட்டு, துணி ஏற்படுகிறது. நூல்கள் பின்னிப் பிணைகின்றன.
நேயத்தில் இருவர் அன்பினால் உருகி உள்ளங்கள் ஒன்றுபட்டுத் திகழ்கின்றனர். இச்சொற்களில் ஓடும் பரக்கக் காணப்படும் பொருளாவது, அணுக்கமாகச் சேர்ந்திருத்தல் என்ற ஒரு கருத்தே ஆகும் என்பதை அறிந்துகொள்ள இயல்பான அறிவே போதுமானது ஆகும். ஆனால் ஆய்வுத்திறனில்லார் இதை அறிந்துகொள்ளாதது
வருந்தத்தக்கதே.

நெய்.
நெய்தல்.
நெய் > நெயவு > நெசவு.
நெய் > நெய்+ அம் = நேயம். > நேசம்.
நேயம் > நேசம் > நேசன். யகரம் சகரமாதல். வாயில் > வாசல்.
இங்கு யகரம் சகரமாதலோடு, இடையில் இகர உயிரும் அகரமாயிற்று.

யகரம் ககரமாதல் சில சொற்களில் உளது.

நேயம் > நேகம் > ஸ்நேகம்.


நாகம் > நாக் > நேக் > ஸ்னேக்  (ஆங்கிலம்) என்பதும்
ஒப்பு நோக்குக. இடைநின்ற ஐரோப்பியத் திரிபுகள் விடப்பட்டன.



வெள்ளி, 14 ஜூலை, 2017

அதிபர் திரம்பின் ஆதரவை அடைந்த இந்திய........

அதிபர் திரம்பின் ஆதரவை
அடைந்த இந்தியப் பெருநாடு
புதிய திறத்தில் பொலிவோடு
புயத்தை உயர்த்தி நிற்கிறதே!
நிதியில் குறைவே போர்முறைக்கு
நேமித் திருந்த போதினிலும்
பதிய வைத்தது தன்கருத்தை,
பாரோர்  அறிந்து வியந்திடவே!.

அஞ்சிப் பதுங்கி இருப்பதுவோ
அயர்ந்த  தளர்ச்சி அமிழ்த்திவிடும்.
கெஞ்சிக் கிடந்து சுருங்குவதோ
கேட்டை விளைக்கும் இறுதியிலே!
நெஞ்சில் உரமாய் நின்றுவிடில்
நிழலுக் கஞ்சா தவரெனவே
மிஞ்சும் எவரும் உணர்ந்திடவோர்
மேன்மைத் தருணம் உறுத்துவதாம்.

உணர்ந்த பகைமை நாட்டினரும்
ஒன்றித் திருந்தால் உயர்வெனவே
உணர்ந்தும்  அமைதி வேண்டுவராய்
உலகில் உரையாட் டணைந்திடுவார்;
அணைந்த படகின் பயணிகளும்
அச்சம் தவிர்ந்தே இறங்குதல்போல்
இணைந்தே  ஒருமைத்  தரைதனிலே
இனிதே பயணம் பெறமகிழ்வார்.