கருப்பிணி ~ கர்ப்பிணி.
நல்ல தமிழில் பேச எழுத வேண்டுமானால், கருப்பிணி என்றுதான்
சொல்லவேண்டும்.
பிணித்தல் என்பதன் பொருள் பலவாகும். இங்கு (கருப்பிணி ) அது "கட்டுதல்" என்ற பொருளில் வருகிறது. கருவானது, உள்ளிருந்தும்
வெளியிலிருந்தும் கலந்து பெண்ணைக் "கட்டும்" ஒன்றாகும் . ஆகவே
பெண் கருவால் பிணிக்கப்படுகிறாள் (பற்றிக்கொள்ளப்படுகிறாள் ) என்பது
மிக்கப் பொருத்தமே.
பிணி என்பதற்கு நோய் என்றும் பொருள் ஆனால் இங்கு அப்பொருள்
இல்லை.
மூலச்சொல்: பிண் என்பது. அதைப் பின்னொருகால் கவனிப்போம்.
கருவினால் பிணிக்கப்பட்டவள் கருப்பிணி ஆகிறால். இது திரிந்து
"கர்ப்பிணி" ஆகிறது. இது பேச்சு வழக்குத் திரிபு. இதைப் பிறமொழிகள் மேற்கொண்டன.
பிணி என்பது முதனிலைத் தொழிற்பெயர், ஆகுபெயராய் பிணிக்கப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது. வேறுவழிகளில் விளக்குதலும் கூடும். எங்ஙனமாயினும் இறுதி வேறுபடாது.