தோட்டம் என்பது என்னவென்று ஏறத்தாழ எல்லாத்
தமிழருக்கும் தெரியும். காடு என்ற சொல்லும்
அப்படியே.
ரப்பர் எஸ்டேட் என்ற ஆங்கிலத் தொடரை, இங்குள்ள தமிழ்ப்
பத்திரிகைக்காரர்கள் ரப்பர்த் தோட்டம் என்று மொழிபெயர்ப்பார்கள்.
ரப்பர் என்ற பொருளை விளைவித்துக் கொடுத்ததில் உலகில்
பெரும்பங்கு இந்தியர், அதிலும் தென்னிந்தியருக்குச் சாரும்
என்பது சொல்லித் தெரிய வேண்டாதது ஆகும்,
ரப்பர் என்பதை இரப்பர் என்று எழுதலாகாது என்று பேராசிரியர்
சிலர் கருதுவர். இரப்பர் எனில் பிச்சை எடுப்பர் என்று
பொருளாகிவிடும் என்ற அச்சம் காரணமானது.
அறிஞர் பாவாணர், இதற்குத் தேய்வை (rubber ) என்ற ஒரு
சொல்லை உருவாக்கினார்.
பேச்சுத் தமிழில் ரப்பர் எஸ்டேட் என்பதற்குத் தோட்டக் காடு
என்று சொல்வர். தோட்டம் வேறு, காடு வேறு எனினும்
தோட்டக்காடு என்று சொல்வோர் இன்னுமுளர்.
ஒரு மலேசியப் பத்திரிகையை வாங்கிக்கொண்டிருந்ததைப்
பார்த்த ஒரு தமிழர் அதில் எல்லாம் "தோட்டத்துச் செய்தி"
என்றார்.
இங்ஙனம் பேச்சுத்தமிழ் சொந்தச் சொல்தொகுதியை
உடையதாய் உள்ளது. ஆனால் பெரிதும் ஆங்கில மொழியின்
தாக்கத்தால் இப்படிச் சொற்களையும் சொற்றொடர்களையும்
படைக்கும் ஆற்றல் மக்களிடையே குறைந்துவருகிறது. கங்காணி மறைந்துவிட்டார்; அவருடைய இடத்துக்கு "சூப்பர்வைசர்" வந்திருக்கிறார்.
Here we have illustrated how in Spoken Tamil people fix somewhat conflicting
terms together to name a new development. An estate which looked more like a
jungle with regard to the growing vegetation therein but belonged to an entity
which wanted the place developed in that manner instead of as a beautiful garden...
People had to work in order to maintain that place in that way.
What a fitting description!
Some errors keep on resurfacing in this post. Reasons not known. Will review.
We have corrected a few times.