ஞாயிறு, 21 மே, 2017

எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்தால்....................

முந்தாநாள் காலை நேரம் வீட்டிலிருந்தேன். அப்போது இரண்டு இந்தியர்கள் வீட்டின்முன் வந்தனர். ஒருவர் கத்தி
வைத்திருந்ததுபோல் தெரிகிறது. நான் வெளியில் செல்லாததனால்  தப்பித்தேன். வெளியில்  சென்று என்னவென்று கேட்டால் அணிந்திருந்த சங்கிலி பறிபோவதுடன்  கதவைத் திறந்துகொண்டு வெளியில் செல்லவேண்டுமென்பதால்,  அப்போது அவர்கள் வீட்டுக்குள்
நுழைந்துவிடலாம் அல்லவா?

ஆகவே அவர்களை  உள்ளிருந்தபடியே கவனித்துக்கொண்டு காவல் துறையை அழைத்துவிட்டேன்.  இந்த இருவரும் பார்த்தா ர்கள்.

கதவைத் திறக்கச் செய்யவேண்டுமே!   ஆகவே வீட்டின் முன் வளர்ந்திருந்த    வேப்பமரத்தின் கொம்புகளை வெட்டினார்கள். அப்போதும்
யாரும் வெளியில் செல்லவில்லை. அதற்குள் காவல்துறையினர் வந்துவிட்டதால், அப்புறம் நடந்ததை அவர்கள் விசாரித்தார்கள்.

இதுபோன்று செய்வோர் பலரும் திருடர்கள். எல்லோரும்
வீட்டுக்குள்ளேயே இருந்தால் அவர்களுக்குப் பிழைப்பு ஓடவில்லை.  ஆளிருக்கும்போது உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதென்பதும் அவர்களுக்கு இயலாது. ஆகவேதான் இந்தத் தந்திரம்
கையாளப்படுகிறது.

ஒரு சாவு வீட்டுக்குப் பூமாலை உட்பட  வே ண்டிய பொருட்களுடன் சென்று, பிணத்துக்குக்  கும்பிடு போட்டுவிட்டு,  அங்கிருந்த பெண்மணிகள் ஆடவர்கள்
ஆகியோரின் நகை, பணம் முதலியவற்றைப் பிடுங்கிக்க்ண்டு போன திருடர்களும் இருக்கிறார்கள்.

will edit


சனி, 20 மே, 2017

தீவனம்

காலநடைகள் தின்பதற்குத் தீவனம் தரும் வசதிகள் விவசாயிகளிடையே குறைவாகிவிட்டதென்று தாளிகைச்
செய்திகள் கூறுகின்றன. இந்தத் தீவனமென்னும் சொல்லைத்
தீ+வனம் என்று பிரிப்போமானால் பொருளற்றதாகிவிடுகிறது.

தீவனம் என்பது தீனியைக் குறிக்கிறது. தீனி என்பது தின்+ இ என்று பகுதி விகுதிகள் இணைந்து முதனிலை நீண்டு பெயராகிறது. தீவனம் என்பது தின்பன என்ற சொல்லிற் பிறந்தது ஆகும்..

தின்பன >  தீபன  > தீவனம் .

முதலில்  னகர ஒற்று க் குறைந்து முதல் நீண்டது.
பகர வகரத் திரிபு பெருவழக்கான  திரிபுதான்.

அகர இறுதி தமிழில் பெரும்பாலும் அம் விகுதியுடன் வருவது
பெரிதும் காணப்படுவதே ஆகும்.





ரு 

வெள்ளி, 19 மே, 2017

கூம்பு குவி கும்பம்.

சாவு என்ற வினை பெயராகும்போது, அம் விகுதி இணாந்து  அது சவம்
என்றாகும் என்பதை, ஒன்றன்று ~~  சில இடுகைகளிலாவது தெரிவித்திருந்தேன். அதைப் படித்து மகிழ்வெய்தியிருக்கின்ற நேரத்தில், அவ்வப்போது வேறு சில உதாரணங்களையும் தந்திருந்தேன்.

இப்போது மற்றுமோர் எடுத்துக்காட்டினை வழங்கும் சித்தமுடையேன்.
அது வருமாறு.

கூம்புதல் என்பது வினைச்சொல்.  அது அம் விகுதி ஏற்குங்கால்,
கூ என்ற நெடிலானது குகரமாய்க் குறுகுதல் அறிந்துகொள்க. சாவு
என்பதன் நெடில் சகரமாய்க் குறுகுதல்போலவேயாம்.

கூம்பு >  கூம்பு+அம் > கும்பம்.

படி + அம் = பாடம் என்பது இதற்கு மாறான எடுத்துக்காட்டு ஆகும்.
இங்கு முதனிலை நீண்டு, படி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,
பாடமாயிற்று. ஒரு நூலைப் படிப்பது பாடம். இனி,  இறந்த‌
உடலைப்  "பாடம் பண்ணுவது" என்ற வழக்கும் உள்ளது. அது கெட்டுப் போய்விடாமல் இருக்க, அதன் .    உள்ளும் புறமும் படியுமாறு
பூசப்படும்.   அம்  மருந்தைப்  பூசுதலைப்   பாடம் பண்ணுதல் என்பர். பாடம் பண்ணுதல் என்பது பேச்சுவழக்கில் உள்ளதாகும். ஒன்றை நெட்டுருச் செய்தலை "மனப்பாடம் பண்ணுதல்" என்ற வழக்கும் உண்டு. மனத்திற் படியுமாறு செய்தலிதுவாகும்.

 போயிலை பாடம் பண்ணுதல் என்பதும் வழக்காகும்.

கூ என்பது இவ்வாறு மட்டுமின்றி,  கு என்று குறுகி, வி என்னும்
விகுதி பெற்று, குவி (குவிதல்) என்றுமாகும்.

கூ+பு = கூம்பு (கூம்புதல்).
கூ + வி = குவி > குவிதல்.

இனி மீண்டும் சந்திப்போம்.