செவ்வாய், 9 மே, 2017

பைக்கட்டும் packet-டும் ( ஒத்தொலிச் சொற்கள் )


ஒத் தொலி ச்  சொற்கள்

பைகளை ஒன்றாகக் கட்டிவைத்தால் அதைப்   "பைக்கட்டு" எனலாம். அல்லது சாமான்கள் பைக்குள்ளிட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் "பைக்கட்டு" என்ற சொல் அதைக் குறிக்கப் பயன்படுவதில் தவறில்லை.

ஆனால் இச்சொல் "பாக்கட்"  packet  என்பதனுடன் ஒலியொருமை கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மற்றும் "பை" என்ற சொல்லுடன் "பாக்" என்ற சொல்லும் தலையொன்றி இருப்பதையும்
நீங்கள் காணலாம்.

மிகப் பழங்காலத்து மனிதர்கள் மரங்களில் பைபோலக் கட்டித் தொங்கவிட்டு இரவில் அதனுள் ஏறி உறங்கினர் என்பர்.  சில‌
காட்டுவாழ்நர் இன்றும் இங்ஙனம் வாழ்தலைச்  சில நாடுகளில்
காணலாம்.  நல்ல வீடு கட்ட அறிந்து தரையில் பாய்போட்டுப்
படுக்கத் தொடங்கியபின் பை என்ற சொல்லிலிருந்து பாய் என்ற‌
சொல் திரிந்ததாகத் தெரிகிறது.

பை > பாய்.

ஆனால் தரையில் பரப்பியதுபோல் இடப்படும் காரணத்தால் "பாய்" என்ற சொல் பிறந்தது என்றும் ஆய்வு செல்கின்றது.

பர > பரப்பு.
பர > பார் (பரந்த உலகம்).
பலகை

பத்திரம் (இலை, ஆவ்ணம்)
பாழ் (பரந்த விளைதல் இல்லா நிலம். பயனற்ற இடம்).
பட்டை
பட்டயம்
பட்டாங்கு
பட்டியல்
பட்டோலை
படு, படுக்கை.

இங்ஙனம் பல சொற்கள்  ஆங்கிலத்தில் "ஃப்ளாட்" என்ற சொல்போல நிலத்தி  ற் படிதல் போன்ற நிலையில் உள்ளவையாய்
காணப்படுதல்,  யாரும் ஆய்தற்குரியனவாகும்.

இவற்றைப் பின்னர் ஆராயலாம்.

சீனமொழியிலும்  "பாவ்" என்றால் கட்டுதல்.. பைப்பொருள் குறிக்கிறது; இதையும் கவனிக்கவேண்டும். ("தா பாவ்")

இவை நிற்க,பைக்கட்டும் பாக்கட்டும் கொண்டுள்ள ஒற்றுமை
மட்டும் குறித்து நிறுத்திக்கொள்வோம்.



திங்கள், 8 மே, 2017

பிற்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள்

சில சொற்கள் எந்த மொழியிலும் நிலைமைக்கு ஏற்ப உயர்ந்த இடத்தைப் பிடித்துப் பயன்பாட்டுத் தகுதியை அடைந்துவிடுகின்றன.
இத்தகைய சொற்களில்  தகவல் என்பது ஒன்று என்று கூறினால்
அது மிகையாகாது.

இது தகவல் பரிமாற்றம் ஒரு முன்மையான இடத்தைப் பெறுகின்ற காலமாகும். ஆகவே தகவல் என்ற சொல்லை நாம் அறிந்துகொள்ள‌
வேண்டியது தேவையாகின்றது.

பிற்காலத் தமிழில் பல பிறமொழிச் சொற்களும் கலந்துவிட்டன என்பதை நாம் அறிவோம். சில  உண்மையில் பிறமொழியின ஆகும்,
வேறுசில பிறமொழியினபோலும் ஒரு தோற்றத்த உடையனவாய்
உள்ளன. எடுத்துக்காட்டாக பார்லிமென்ட் என்ற ஆங்கிலச் சொல்
பாராளுமன்றம் என்ற தமிழ்ச் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையதாய்  உள்ளது. இது பார் ஆளும் மன்றம் என்று பிரிக்கத்
தக்கது ஆகும். ஆகவே தமிழ்ச்சொல். இது பின் நாடாளுமன்றம்
என்று மாற்றப்பட்டு இப்போது நல்ல பயனழகு உடையாதாய் இலங்குகின்றது


தாங்கி என்ற சொல் இன்னொன்று. இதைத் தமிழர்கள் தண்ணீர்த் தாங்கி என்றனர். தண்ணீர் சேமித்து வைத்து ஓர் உயரமான இடத்தில்
இருத்தப்பெற்று அங்கிருந்து வீடுகட்குப் பகிர்ந்தளிக்கும்
கொள்கலம். பின்னாளில் வெறும் "தாங்கி" என்று மட்டும் சொன்னார்கள். இது வட இந்தியாவிலும் பரவிப்  பின்னர் ஆங்கிலத்தில் வழக்குப் பெற்றது.

கப்பல் தமிழே என்று ஆசிரியர் சிலர் எழுதியுள்ளனர்.

இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.

தகவல் என்ற சொல்:

தகுந்த செய்தி என்று பொருள் படுவது.  விடையம் > விடயம் என்பது விடுக்கப்படும் செய்தி என்பதுபோல, இத் தகவல் என்னும் சொல் தக்க செய்தி என்பதறிக.  தகு> தகவு; தகவு> அல் = தகவல். அவ்வளவுதான் இதன் சொல்லமைப்பு என்றறிந்து இன்புறுவீர்.

இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.

will review  and edit.


ஞாயிறு, 7 மே, 2017

இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

அறிவு என்பது வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. தவளை தாவித் தாவிச் செல்வதை மனிதன் காண்கிறான். அதன்பின்னரே அது
தாவித் தாவிச் செல்லும் ஓர் உயிரி என்பதை உணர்ந்து கொள்கிறான். இந்த "அறிவு" வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. அதுவே தொடக்கமாகும். அடுத்து, தவளையைப் பற்றி அறிந்து கொண்ட ஒரு மனிதன் ஆசிரியனாகி ஒரு பிள்ளைக்குத் தெரிவிக்கிறான். பிள்ளையும் அறிவு பெறுகிறது, இது நேரடியாகக் கண்டறிந்த அறிவு அன்று, ஆசிரியன் வாய்க்கேட்டறிந்ததே ஆகும். இது நேரில் தவளையைக் கண்ட மாத்திரத்தில், பிள்ளைக்குள் முழுமை பெறுகிறது. கற்ற அறிவு உறுதிப்படுகிறது, அதுகாறும் அது கேட்டறிந்ததே ஆகும். பின் கண்டும் உறுதி பெறுகிறது.

நாம் அறிந்த பல‌, நாம் நேரிற் கண்டு அறிந்த அறிவு அல்ல, பிறரிடம் இருந்து அறிந்துகொண்டவையே ஆகும். இந்தப் பிறர், இப்போது உயிரோடிருப்பவர், முன் இருந்தவர் என இருவகை. முன் இருந்தவர் எழுதிவைத்ததும் இப்போதிருப்பவர் எழுதிவைத்து நேரில் நம்மிடம் சொல்லித்தர இயலாதிருப்பதும் ஆக இருவகை..


நீண்ட காலமாக நடப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நெறிகளும் முறைகளும் ஒன்று திரட்டப்பட்டு எழுத்து வடிவாக ஆக்கப்பட்டதே
ஆகமங்களும். இறைவனைத் தொழுதற்கும் ஆலயங்கள் அமைப்பதற்கும் இன்னும் ஏனைய இறைப்பற்றுத் தேவைகளுக்குமாக, ஏற்பட்ட செய்ம்முறைகள், எண்ணங்கள், கருத்துகள் முதலியவை இந்த எழுத்துக்களில் இடம்பெற்றனஇவற்றை உருவாக்கியவர்கள், இறைநலம் போற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். இவற்றை எழுதும்போது
எந்த மொழியில் எழுதிவைப்பது என்ற கேள்வி எழும், எழவேண்டும். இவற்றைக் கற்று நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் பெரும்பாலும் பூசாரிகளாக‌ இருந்தமையால், அவர்கள் இறைவழிபாட்டு நடப்புகளில் பயன்படுத்தும் சமஸ்கிருதம் என்னும் சங்கத மொழியில் எழுதப்பட்டன. இப்படி உருவாக்குமுன், வேறுமொழிகளில் அல்லது சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட பல சிறு ஏடுகள் இருந்திருக்கலாம். வற்றிலிருந்தும் நடைமுறைகள் திரட்டப்பட்டிருக்கலாம். அவை திரட்டப்பட்டு சங்கத‌ மொழியில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு மிருக்கலாம். இந்த‌ இறுதிவடிவத்தின்பின், அச்சிறுநூல்கள் தேவை0படாதவை. அவற்றைக் கைவிடுதல் என்பது இயல்பானதே. இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலன்றி, இத்தகைய‌
நூல்வடிவங்கள் இல்லையென்று எண்ணிக்கொள்வது அறியாமையே ஆகும். வரலாற்று அறிவுக்காக பழையனவற்றைச் சேர்த்து வைத்துப் 
பின் ஆராயும் நடைமுறை, குறிப்பாகத் தமிழனிடமும் பொதுவாக‌
இந்தியனிடமும் இருந்ததில்லை.இந்த நிலையில் திடீரென்று எதிர்   தோன்றும் ஒரு ஆகம நூல்,  இறைவனால் அருளப்பட்டது என்று சொல்வது, இயல்பானதே ஆகும்.சிந்திக்கும் மூளை இறைவனால் அருளப்பட்டது என்னில், அதிலிருந்து போந்த ஆகம விடையங்களும் அவனால் அருளப்பட்டவையென்றே முடிபுகொள்ளல், ஏற்புடைத்தே!.


அவனன்றி ஓர் அணுவும் அசைவத்தில்லை. அசைந்த அணுக்களும் எழுதிய எழுத்துக்களும் அவன் அசைவே ஆகும். ஈர்க்கப்பட்ட மனத்தின் அசைவையே ஆசை என்கிறோம்: அசை> ஆசை, இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இறைவனின் ஆசையால் மனிதனின் ஆசை எழுந்து, இவை உருப்பெற்றன.


ஒரு  பற்றன்  ஒரு நடைமுறையை  முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டின்,  அந்நடைமுடைகள் இறைவனால் அருளப்பட்டவை என்று நம்புதல் இன்றியமையாதது ஆகும்.  ஆக்கிய அனைத்தும் இறைவனால் ஆக்கப்பட்டவென்பது உண்மைநெறியும் சமயக் கடைப்பிடியும் ஆகும்.

தலைப்பு :  இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

will review to edit and detect hacker attacks.