சில சொற்கள் எந்த மொழியிலும் நிலைமைக்கு ஏற்ப உயர்ந்த இடத்தைப் பிடித்துப் பயன்பாட்டுத் தகுதியை அடைந்துவிடுகின்றன.
இத்தகைய சொற்களில் தகவல் என்பது ஒன்று என்று கூறினால்
அது மிகையாகாது.
இது தகவல் பரிமாற்றம் ஒரு முன்மையான இடத்தைப் பெறுகின்ற காலமாகும். ஆகவே தகவல் என்ற சொல்லை நாம் அறிந்துகொள்ள
வேண்டியது தேவையாகின்றது.
பிற்காலத் தமிழில் பல பிறமொழிச் சொற்களும் கலந்துவிட்டன என்பதை நாம் அறிவோம். சில உண்மையில் பிறமொழியின ஆகும்,
வேறுசில பிறமொழியினபோலும் ஒரு தோற்றத்த உடையனவாய்
உள்ளன. எடுத்துக்காட்டாக பார்லிமென்ட் என்ற ஆங்கிலச் சொல்
பாராளுமன்றம் என்ற தமிழ்ச் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையதாய் உள்ளது. இது பார் ஆளும் மன்றம் என்று பிரிக்கத்
தக்கது ஆகும். ஆகவே தமிழ்ச்சொல். இது பின் நாடாளுமன்றம்
என்று மாற்றப்பட்டு இப்போது நல்ல பயனழகு உடையாதாய் இலங்குகின்றது
தாங்கி என்ற சொல் இன்னொன்று. இதைத் தமிழர்கள் தண்ணீர்த் தாங்கி என்றனர். தண்ணீர் சேமித்து வைத்து ஓர் உயரமான இடத்தில்
இருத்தப்பெற்று அங்கிருந்து வீடுகட்குப் பகிர்ந்தளிக்கும்
கொள்கலம். பின்னாளில் வெறும் "தாங்கி" என்று மட்டும் சொன்னார்கள். இது வட இந்தியாவிலும் பரவிப் பின்னர் ஆங்கிலத்தில் வழக்குப் பெற்றது.
கப்பல் தமிழே என்று ஆசிரியர் சிலர் எழுதியுள்ளனர்.
இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.
தகவல் என்ற சொல்:
தகுந்த செய்தி என்று பொருள் படுவது. விடையம் > விடயம் என்பது விடுக்கப்படும் செய்தி என்பதுபோல, இத் தகவல் என்னும் சொல் தக்க செய்தி என்பதறிக. தகு> தகவு; தகவு> அல் = தகவல். அவ்வளவுதான் இதன் சொல்லமைப்பு என்றறிந்து இன்புறுவீர்.
இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.
will review and edit.