வெள்ளி, 5 மே, 2017

வாழ்க்கைத் துணை மனைவி

வாழ்க்கைத் துணை என்பது மனைவிக்கு மற்றொரு பெயர். மனைவியே பிள்ளைகளை ஈன்று தாயாகி உலகை நிலைபெறச் செய்கிறவள் என்பது யாவருமறிந்ததே. ஆதலின் அது விளக்கம் ஏதுமின்றியே யாருக்கும் புலப்படுவதாம்.

வீட்டினை ஆட்சி புரிகின்றவள் என்ற பொருளில் மனைவி என்ற சொல் புனையப்பட்டது. அந்த ஆட்சி வீட்டுக்கு வெளியில் இல்லை யென்று வழக்காடுபவர்களும் இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியில் உள்ள நிகழ்வுகளுக்கு நிற்பவன் கணவன் என்பர் இவர்.

வீட்டில் தண்ணீர் இல்லையென்றால் அதை வெளியில் சென்று
வீட்டுக்குக் கொண்டு தருபவள் பெரும்பாலும் மனைவியே. உதவாமல் ஓடிவிடுகின்ற கணவரும் உண்டல்லவா?


(உளரல்லரோ என்று எழுதவேண்டும், இப்படி எழுதினால் பலர்
கடினமென்கிறார்கள் அது நிற்க )

வீட்டிற்குரியாள் மனைவி என்பதைக் கூறுவோர், "மனை" என்ற‌
வீடு குறிக்கும் சொல்லிலிருந்து மனைவி என்ற சொல் வந்தது என்று
முடிவுக்கு வருவதால், அவர்கள் வீடு ~ மனைவி என்ற வட்டத்தினுள் சிந்திக்கிறார்கள். அது சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை. அப்படிச் சிந்திக்கிறார்கள் என்கிறோம்.

இப்போது வேறோரு வகையில் சிந்திப்போம். மன் : மன்னுதல் எனின் நிலைபெறுதல் என்று பொருள். மன் = நிலைபெறல்; = தலைவி அல்லது தலைமைப் பண்பு என்று பொருள்கொண்டால் மனைவி
என்பதன் பொருள் தெளிவாகிவிடுகிறது. வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பவள் அல்லள் மனைவி; நிலைபெற்ற வாழ்வினை உடையவள் என்று பொருள் வருகிறது.


மன்+ ஐ என்பதனுடன் வி சேர்ந்துகொள்கிறது. வி என்பதோர்
விகுதி (மிகுதி> விகுதி). துணைவி என்பதில்போல் இங்கும்
இவ்விகுதி சேர்கிறது. அது பொருத்தமே ஆகும்.
மன்+அம் = மனம் என்பதில் 0னகரம் இரட்டிக்க வில்லை; அதுபோல் மனைவி என்பதிலும் இரட்டிக்கவில்லை என்று முடிக்கலாம்.

இனிப் பாரியை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்



வியாழன், 4 மே, 2017

"திட்டம் தீட்டுதல்"

தீட்டுதல் என்ற சொல் வழக்கில் உள்ளதுதான். திட்டம் தீட்டினார்கள்
என்பதை நூல்களிலும் தாளிகைகளிலும் காணலாம். நாம் இங்கு
உரையாட விழைவது திட்டம் என்ற சொல் பற்றியது. "திட்டம் தீட்டுதல்
"என்ற  வழக்கிலிருந்தே திட்டம் என்ற சொல்லுக்கும் தீட்டுதல் என்ற‌
சொல்லுக்கும் உள்ள தொடர்பினை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

சவம் என்ற சொல் நான் அடிக்கடி காட்டுகிற உதாரணம்1 தான். சா + வு + அம் = சவம். இங்கு சா என்ற நெடில் சகரமாகக் குறைந்தது.
இந்த மாதிரி பல சொற்களை நான் முன் இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளேன்.

இதேபோல், நெடில் குறுகி அமைந்த சொல்தான் திட்டம் என்பது.
தீட்டு + அம் = திட்டம். சில தொழிற்பெயர்கள் வினைப்பகுதி குறுகி
விகுதி ஏற்கும். சில நீண்டு விகுதி ஏற்கும்:  எ‍~டு:  சுடு+அன் = சூடன்,  அல்லது அம் சேர்த்துச் சூடம்.  இவற்றை மனத்திலிருத்தி மகிழவும்.




‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================
 ( உது= முன்னிற்பது; ஆர் = நிறைவு.  ஆர்தல்: வினைச்சொல்: நிறைதல் . அணம் : ஒரு வினையாக்க விகுதி.)

ஆகமமும் வேதமும் ~ ஒரு சொல்லியல் ஒப்பீடு.

ஆகமமும் வேதமும் ~ ஒரு சொல்லியல் ஒப்பீடு.

ஆகமம் என்றால் என்ன?  வேதம் என்றால் என்ன? இவற்றுக்கு
சமய நூலார் பல வேறுபாடுகளை எடுத்துரைப்பர். சொல்லியல்
முறையில், சமயக் கோணத்தில் நில்லாமல் இங்கு ஒப்பீடு செய்வோம்.
இது சொல்லாக்கத்தையும் அதன்கண் பிறந்த பொருண்மையையும்
உணர்ந்துகொள்ள உதவும்.

ஆகமம் என்பது தமிழ்ச்சொல். தென்னாட்டில் உள்ள   கோயில்களில்
ஆகமப்படி பூசைகள் நடைபெறுகின்றன. ஆகமத்துக்குத் தலைவன்
தென்னாடுடைய சிவனே ஆம்.

ஆகு+ அம் +அம் = ஆகமம்.

ஆகு : ஆகுதல் என்ற வினைச்சொல்.
அம்  :  அழகு.  அம்மையாகிய உலக நாயகி. அமைத்தல் என்பதன்
அடிச்சொல்.
அம் :  விகுதி.

ஆகும் நெறியில் அமைக்கப் பட்ட கடைப்பிடிகள். ஏற்பாடுகள்>

பற்றுடையாரால் வேயப்பட்டது வேதம். இங்ஙனம் வேய்ந்த பல‌
பாடல்களின் திரட்டு.

இவற்றுக்கு வேறு புனைபொருள் கூறுவோரும் உளர்.