மனிதன் தீ உண்டாக்குவதற்கு அறியுமுன்பே தமிழ்மொழி தோன்றி வளர்ந்துகொண்டிருந்தது. அதற்கான ஆதாரம் தீ என்னும் சொல்லிலேயே
அடங்கி இருக்கிறது.
தீக்கற்கள் உராய்வதனால் தீ உண்டாயிற்று. உராய்தல் என்பது தேய்தல்.
தேய் > தீ ஆனது. இஃது ஒரு பழங்காலத் திரிபு ஆகும். தீயைப் பற்றி
மனித சிந்தனை வளர்ச்சிபெற்று அது வணங்கப்பெறும் நிலைக்கு உயர்ந்த பின்பு வேறு சில சொற்கள் தோன்றின.
தேய் > தேய்வு என்ற சொல் தோன்றி, தேவு என்றானது. யகர ஒற்று
மறைந்து சொல் அமைந்தது. தேவு என்பது கடவுள் என்ற நிலையில் உணரப்பெற்றது. ஆதலின் கடவுள் என்ற பொருளுண்டாயிற்று.
தேவு > தேவன், > தேவி, என்று பின்னர் பான்மை உணரப்பட்டுச்
சொற்கள் அமைந்தன. தேய்வு > தெய்வம் என்று அம் விகுதி பெற்ற
சொல்லும் அமைந்தது
எனவே தேய் என்ற அடிச்சொல்லிலிருந்து இத்தகைய சொற்களைப்
பெற்ற தமிழ் மிக்கப் பழங்கால மொழி என்பது பெறப்படுகிறது. இதனை அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.