வியாழன், 23 பிப்ரவரி, 2017

சைகை சைதன்யம்

சைகை என்ற சொல்லினைப் பார்ப்போம்.
புன்செய் என்பது புஞ்சை என்றும் நன்செய் என்பது நஞ்சை என்றும் வழங்குவதுடன் முன் சிலகாலம் இங்ஙனமே எழுதப்பட்டும் வந்தது.
சொற்கள் திரிதலை வாத்தியார்கள் ( இவர்கள் வாய்மெழிப் பாடங்கள்
சொல்லிக்கொடுப்போராதலின் இப்பெயர் பெற்றனர் : வாய்த்தி > வாத்தி > வாத்தியார், உப+ அத்தியாயி > உபாத்தியாயி, உபாத்தியாயர் என்பது
வேறு சொல்; குழப்புதல் வேண்டா) பெரும்பாலும் விரும்புவதில்லை.
ஆனால் மொழியே ஒரு திரிந்தமைவுதான். குகைமாந்தனின் காலத்தில்
சிறு சொல்தொகுதியாய் இருந்த மொழி, பின் திரிபுகளால் விரிந்தது
என்பதுமுணர்க. பல சொற்களையும் ஆய்ந்தால் இதை நாமுணரலாம்.
எனவே, செய்கை என்பது சைகை என்று திரிந்தது. செய்>சை.
இதன் தொடர்பில் சைதன்யம் என்ற சொல்லைக் கவனிப்போம். இதன்
பொருள்: தானே முயன்று அடைவது என்பதுதான். பிற பொருள் இதில்
ஏற்றிக் கூறுவது மனிதனின் பொருள்விரிப்புத் திறனேயன்றி வேறில்லை. தானே ஒருவன் முயன்று அடைவது எது? பல இருக்கலாம் எனினும் இங்கு காரண இடுகுறியாய், அறிவாற்றலைக்
குறித்தது. செய் + தன் + இயம் = செய்தன்னியம் > சைதன்னியம் > சைதன்யம் என்பது திரிபு. இது தமிழ்மூல அமைப்புச்சொல் எனினும்
வழக்கில் பிறமொழியில் மிகுதியாய் வழங்கியிருப்பதானால் அந்த‌
மொழிக்குத் தானமாய்த் தந்துவிடுவதில் இழப்பு ஒன்றுமில்லை.
அறிவே கடவுள் என்ற கொள்கையினால், சைதன்னியம் அறிவாகிய‌
கடவுளையும் குறித்துப் பின் பொதுப்பொருளிலும் வழங்கினது அறிக.
மனிதன் அறிவுவாழ்நன். (அறிவுஜீவி). எனவே அறிவுவாணனாகிய‌
மனிதனையும் குறித்தது

will  edi later.

புதன், 22 பிப்ரவரி, 2017

நட்சத்திரம்

நட்சத்திரம் என்பது அறிவோம்.

நகுதல் ‍~  ஒளிவிடுதல்.
ஒளிவிடும் திறம் உடையது  நகு+ அம் + திறம்.
அம் என்பதில் மகர ஒற்று மறைந்தது.
திறம் என்பது திரம் என்று திரிந்து ஒரு பின்னொட்டானது.
"ஆ" என்ற ஒலியுடன் திறமாக எழுந்து நடந்துகொள்வது ஆத்திரம்.
அதுபோல.

வேறு விளக்கெண்ணெய்க் கலப்பு ஏதும் நக்கத்திரத்தில் இல்லை.

இவற்றைத் தெரிந்துகொள்க.

பக்கி > பட்சி.
பக்கம் > பட்சம்.
தக்கிணை ( தக்க இணை) > தட்சிணை.
 அதுபோல்  நக்கத்திரம் > நட்சத்திரம்.

கோள் இராசி

நாளும் கோளும் என்பதோர் இணைமொழி. இதில் கோள் என்பதையும்
இராசி என்பதையும் அறிவோம்.

கோள் என்பது பெரும்பாலும் ஒளியைப் பிற கிரகத்தினிடமிருந்து பெறும்
ஒன்று.  கொள்ளுதலாவது ஒளியைக் கொள்வது அல்லது பெறுவது.
கோளம் என்ற சொல்லும் கோள்+ அம் என்று பிரிவதால், அது உருண்டை
வடிவிலானது  என்பதும் பெறப்படும். இப்படி இதன் பொருள் இரட்டுறலாக  (இரு பிறப்பினதாக) இருத்தல் தமிழ் சொல்லமைப்புத்
திறத்தைக் காட்டுவதாகும்.

இராசி என்பது இரு+ ஆசு + இ எனப்பிரியும். இது தலையிழந்து ராசி
என்று வரும். நிரம்ப என்பது ரொம்ப என்றும்  உரட்டி என்பது   ரொட்டி என்றும் திரிந்து ரொட்டி (சற்றுப் பொருளும் திரிந்து)  என்றும்  வருதல் போல. இவை
பல சொற்கள் தலையிழத்தலைக்  காட்டும். எருமையூர் என்பது மையூராகி
அதன்பின் மைசூர் என்றானதை சில ஆண்டுகட்குமுன் விளக்கியிருக்க‌
எதிர்க்க முடியாதவர்கள் கள்ள மென்பொருள்மூலம் எம் இடுகைகளை
அழித்தனர். இதுவும் தலையிழப்பே. அரு என்பது ரேர் என்று ஆங்கிலத்தில் திரிவது வரை செல்லலாம். அது நிற்க:

ஆசு என்பது பற்றி நிற்றல் என்பதாகும். இ விகுதி. ஒரு கோள் அல்லது ஒரு நக்கத்திரம் பற்றி இருக்கும் இடமே ராசி. அருமையான‌
தமிழ்ச்சொல்.

அறிந்து இன்புறுக.

பதிலெழுத முடியாத கோழிமுட்டைகள் அழித்துக்கொண்டுதான்
இருக்கும். பார்க்கலாம்

கோள்  இராசி
Some mischievous edits have been effected by outsiders. Pl read carefully. Pl report
if has been interfered.  What appeared is different from our original kept by us,