வியாழன், 16 பிப்ரவரி, 2017

நில் > நிரு > நிரூ ரூ, ரூ‍ப்

நிரூபித்தல் என்ற சொல், இந்தோ ஐரோப்பிய மொழியில் இல்லை. ஆகவே அது தமிழே ஆகும். அது ஒரு திரிபுச்சொல். இப்போது எந்த‌
மொழியிலும் இடத்திலும் பெரும்பாலும் வழங்கினும், தமிழே ஆகும்.

இது பற்றிய எமது இடுகை அழிக்கப்பட்டது.  ஆகவே சுருக்கமாக‌
மீள்பதிவேற்றுவோம்.

நில் > நிரு.
லகர  ஒற்றில் முடியும் எச்சொல்லும் இறுதி ருகர‌மாதல் உண்டு.

நில் > நிரு > நிரூ.

வினையாக,  நிரூவித்தல்.  நிரூபித்தல்  ( வ ‍ ப வகைத் திரிபு) என்றாகும்.

அறிஞர் பிறரும் இதை விளக்கியுள்ளனர்.

உரு என்ற தமிழ் ரூ, ரூ‍ப்  என்று திரியும்.  தொடர்புடை சொல்.

note:

புரூவ் என்ற ஐரோப்பியச்சொல் காண்க. அதில் பு எடுபட்டால் மிச்சமுள்ளது ரூவ், அல்லது ரூப்.. இதை ஆய்ந்து ஏன் பு -வில் தொடங்கிற்று என்று காணவும்,

புதன், 15 பிப்ரவரி, 2017

கட்சிக்கும் பணம் வேண்டும் !

ஊழலுக் குளபல காரணங்கள்
உலகினிற் பணமுடைத் தோரணங்கள்
நீழலுக் குளபல கட்டிடங்கள்
நிற்பன அவைபடர் தொற்றிடங்கள்.

ஒழித்திட நினைப்பதும் எளிதெனினும்
பிழைத்திட உழைப்பதன் கடினமதால்
பழித்திடத் துயர்களை விளைப்பதனைப்
பாரினில் மேற்கொளும் நிலைமையினார்.

தட்சிணை என்பதும் தக்க இணை;
தகுதியில் பெறுவதும் தொன்றுதொட்டே;
கட்சியை நடத்துவர் தேர்தலிலே
காண்பெறு நிலைவரப் பணமுதலே.

கட்சிக்கும்  பணம் வேண்டும் !


ஆவினைப்போல் சசிகலை,, predicament of Sasikala.

ஆவினைப்போல் தரித்துத்தம் தலைமேற் போற்றி
ஆடினர்நூற்  றுவர்மிக்கோர் அணியாய் நின்றே!
தேவதையாய்க் கோவிலினுள் அமரும்  முன்பாம்
திசைதிருப்பி இடம்தொலைத்த வழக்குத் தீர்ப்பே .
ஆவதினி யாவதுண்டோ   அழிந்த கோலம்;
அதுதானே சசிகலையின் இழந்த காலம்!
நோவதுயார் தமைஅங்கே நுதலின் கண்ணை
நூறுமுறை திறந்தாலும் மாறா நோவே.

அரும்பொருள் 

ஆவினைப்போல்  -  கோமாதாபோல் 
தரித்து ~  தாங்கி; அணிந்து;
அணியாய்  ~   (சட்டப்பேரவை உறுப்பினர்கள்)  வரிசையாய்;
யாவதுண்டோ ~  எதுவுமுண்டோ;
நுதல் ~ நெற்றி;
நோவு ~  துன்பம்