வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

What is needed is a good govt in TN

மக்களுக்குத் தொண்டுசெயல் ஒன்றே நோக்கம்;
மண்டைபல துண்டுபடச் சண்டை அன்றே!
தக்கவழி தனைக்கண்டு போட்டி தீர்ந்து
தகைமையொடு நல்லாட்சி தளிர்போல் தோன்றி
எக்கரையின் மாந்தர்களும் போற்று மாறும்
இன் தமிழர் மாநிலத்தில் அரசு தோன்ற
சிக்கலின்றி அமைந்துவிடில் அதுவே நன்று
சீரான ஆட்சியொன்றே குறிக்கோள் செல்வீர்........ 

வியாழன், 9 பிப்ரவரி, 2017

அயர்தல்அசதி அசா அசத்துதல் .

அயர்தல் என்பது நல்ல தமிழ். அயர்ந்து உறங்குகிறாள் என்று சொல்வதுண்டு.  பேச்சில், யகரத்துக்குச் சகரம் வரும். அது வாடிக்கையான திரிபு. பல சொற்களில் வரும் என்று முன்பு எழுதியுள்ளோம். பல அழிந்துவிட்டாலும், மறந்திருக்க மாட்டீர்கள்.

அயர்தல் > அசர்தல்.  அசந்து தூங்குகிறான் என்பர்.  அயர் > அசர்.
அசர்ந்து என்பதில் உள்ள ரகர ஒற்று மறைந்து, அசந்து என்று பேச்சில்
வருகிறது.

ஒரே அசதியாக இருக்கிறது என்பார்கள்.  ஆக, அயர்> அசர் > அச > அச+ தி (விகுதி) > அசதி ஆகிறது.  அயர் என்ற முதற்சொல்லினின்று
திரிந்திருப்பினும், அசர்தி என்று வருவதில்லை. ரகரத்துக்கு
வேலையில்லாமல் போய்விடுகிறது.


திரிபுகளே இல்லையென்றால்,  பல சொற்களும் பல இனமொழிகளும்
தோன்றியிரா என்பதைச்  சிந்தித்து உணர்க.

அச என்பது அத்துடன் நின்றதா?

ஓர் ஆகார விகுதி பெற்று,  அசா என்று ஆனது. அச + ஆ = அசா.
ஆ விகுதி வந்த சொற்கள் பல. ஓர் உதாரணம். கல் (படித்தல் )+ ஆ
கலா. (கல்வி).  பல்+ ஆ = பலா (பல சுளைகள் உடைய பழவகை, அது காய்க்கும் மரம்)  என்பதும் இன்னொரு காட்டு ஆகும்.

அயர் > அயா > அசா என்று காட்டினும் அமையும்.

அயர்  >  அயர்த்து  (பிறவினை ) >  அசத்து .

மிகக் சிறந்த ஒன்றைப் பார்த்து  நம்மால் முடியுமா என்று "அயர்வு "  கொள்ளும்படி  செய்தல் .  அசத்துதல் .

தமிழ் நாட்டின் முதலமைச்சர் யாரோ?

தமிழ் நாட்டின்  முதலமைச்சர்  யாரோ  என்றால்
தமிழ் நாட்டில் தேர்தலின்றே  இல்லா நாளில்
அமைப்புவிதி யாதென்றே  அண்மி  நோக்கி
அதன்படியே ஒருவரையே அமர்ந்து வார்கள் .
எமைஎடுத்துக் போடுமென்றே இருவர் நின்றால்
என்செய்தல் என்பதற்கும் விதிகள் உண்டு.
நமை ஈர்க்கும்  இச்செய்தி நயந்து கேட்போம் 
நமக்கிதிலே செவிக்கொன்றே நாட்ட ம்  ஆமே.