வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாணன், பறையன் குடி

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்றுஇந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.              335 

இப்பாடல் வரிகள் புற நானூற்றில் வருவன . இங்குக்   குடி என்ற
சொல் பயன்பாடு கண்டுள்ளது. குடி என்பது குடும்பத்தையும்
குறிக்குமேனும். அது ஒன்றுக்கு மேற்பட்ட இணைந்த - ஒன்றாய் வாழ்கின்ற மக்களைக் குறிப்பதாகும். வம்மிசம் என்ற சொல் ஓரளவு இதே கருத்தை விளக்கும் சொல் ஆகும்
மிசை மிசை வருவது வருமிசம் > வம்மிசம் ஆகும். வம்மிசம்
முன் இங்கு   விளக்கப்பட்ட சொல் ஆகும்.

இச் சொல்லை அறிய  கீழே தரப்பட்டுள்ள  தொடர்பினைச் சொடுக்கவும் 
இந்த நான்கு அல்லது வேறு குடிகள் இல்லை என்று புறம்
கூறுவதால், இவர்கள் அகமணம் புரிந்து வாழ்ந்தனர் என்று
கருதவேண்டும்.
இந்த வரிகள் எழுந்த காலத்தில், ஏனையோர் இன்னும் குடிகள் ஆகிவிடவில்லை. அதாவது வண்ணானோ குயவனோ தொழிலர்களாய் இருந்தனரே அன்றி, அகமணம் புரியும் வழக்கத்தினராய் வம்மிசங்களாக ஆகிவிடவில்லை.
அது பின்னர் நிகழ்ந்திருக்கும்.
1900 ஆண்டுகட்கு முன்பு வரை கலப்பு மணங்கள் நிகழ்ந்து
வந்தன எனக் குருதி ஆய்வுகள் புலப்படுத்துவதால், இப்பாடல் பகுதியும் 1900 ஆண்டுகட்கு முற்பட்டதாகல் வேண்டுமென்பது தெளிவு

காண்க 
வம்மிசம்
.https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post.html



But it wasn't until about 100 B.C. that a holy text called the Manusmruti explicitly forbade intermarriage across castes.
The study doesn't suggest that either the ancestral North or South Indian group formed the bulk of the upper or lower castes, Witzel said.
http://www.livescience.com/38751-genetic-study-reveals-caste-system-origins.html

வியாழன், 2 பிப்ரவரி, 2017

பேதி not Bethi. Just pEthi.

இது எந்த மொழிச்சொல்?

கழிச்சலுக்கு ஒரு சொல் படைத்துக்கொண்டிருந்தபோது, கழி என்பதிலிருந்து ஒரு சொல் படைக்கலாம் என்று நினைத்திருப்பார்கள்.
அப்படி அமைந்திருந்தால் கழி+தி = கழித்தி > கஷ்தி என்று ஒன்றை
அமைத்திருக்கலாம்.

கழுத்தூறி என்பதிலிருந்து கஸ்தூரி என்று புனைந்ததுபோல்.

பெய்தல் என்பது அதற்கு ஈடான சொல்தான்.  மழை பெய்தல். மூத்திரம்
பெய்தல் என்றெல்லாம் வழக்குகள் உள.

மேலும் மலையாள நாட்டில் தூறுதல் (மழை தூறுதல்) என்பது
தூறுதல் (மலம் கழித்தல்) என்றும் வழங்குகிறதே!

ஆகவே பெய்தல் என்பதிலிருந்தே கழிச்சலுக்குச் சொல் அமைப்பதென்று தீர்மானம் ஆனது.

பெய் > பெய்தி > பேதி.

செய் > செய்தி > சேதி போலும் அமைந்தது.

தமிழ்தான். வேறு விளக்கெண்ணெய் இருப்பதாக உம் பேராசிரியன்
புருட்டா விட்டால் ................

அற்புதம்....how derived.

அற்புதம்  என்ற சொல் எப்படி அமைந்தது ?

இங்குக் கண்டு இன்புறுக .

https://sivamaalaa.blogspot.sg/2012/07/blog-post_18.html


இன்னும் அழிபடாமல் இருக்கிறது.