புதன், 1 பிப்ரவரி, 2017

ஆர் > ரு > ர. suffixes plural and plural of respect. Odisha Telugu

வந்தார்   என்ற வினைமுற்றில் இறுதியில் இருக்கும் விகுதி
ஆர் என்பது.

பிறமொழிப் பேச்சுகளில்,  வந்தார் என்பது வந்தாரு என்றும் வந்தார‌
(இறுதிக் குறில் ரகரம்)  என்றும் திரிதல் காணலாம்.

ஆகவே. ஆர் > ரு > ர.

தமிழ்ச்சொற்கள் தலைபோய் வழங்குதல் இம்மொழிகளின் இயல்பு
ஆதலின், இத்திரிபுகளில் வியக்க எதுவுமில்லை.

தெலுங்கு, ஒடிஷா மொழிகளைக் கூர்ந்து செவிமடுக்க.

அம்மொழிகளில் ர  ரு என்பன விகுதிகள் என்பதில் ஐயமில்லை.

இத்திரிபுகள் சங்கதத்தினுடன் தொடர்பு  அற்றவை .

These have been confirmed by Linguistic studies.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஒலி ஏதும் செய்யாமல்

ஒலி ஏதும் செய்யாமல் உள்ளேவந்து
உகந்தனவாம்  எவையென்று கண்காணித்து
நெளிவொன்றும் இல்லாமல் அழித்துவிட்டு
நேர்பட்ட  கருத்துகளை  வாரிக்கொண்டார்
மலிவாகத் தம்பெயரைத் தூக்கி ஏற்றும்
மதிமிக்க வழியொன்றைக் கண்டுகொண்டார்
இழிவான இச்செயலை நிறுத்திக்கொள்வீர்
இன்றமிழ்க்கு நண்பரென வாழ்தல் செய்வீர்


திங்கள், 30 ஜனவரி, 2017

திருடும் அறிவாளிகள்

ஒருவருக்கு எழுதிப் புகழ்பெற வேண்டும் என்னும் ஆசை உள்ளது. ஆனால் கருத்துகள் ஏதும் மூளையில் தோன்றவில்லை. நூல்நிலையங்களில் போய் நூல்களை  எடுத்துப் படிக்கும் பழக்கமும்
இல்லை. எதையும் தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கமும் இல்லை . ஒரு
வலைத்தளத்தில் தம்  பெயர் இடம்பெற வேண்டும் என்ற ஆசை
மட்டும் கரைபுரண்டு ஓடுகிறது,

என்ன செய்வது?

இங்குள்ள இடுகைகளை பகர்ப்புச் செய்துகொண்டு பின் அவற்றை அழித்துவிட வேண்டும். இதற்குக் கொஞ்சம் திருட்டுவேலைகள்
செய்யவேண்டும். கடவுச்சொல் முதலியவற்றைத் திருடவேண்டும்/
இவற்றை யெல்லாம் செய்து கருத்துகளைத் திருடித் , தாம் சிந்தித்து எழுதியது போல் எழுதித் தம்  பெயரைப் போட்டு வெளியிட‌
வேண்டும். போலிப் பட்டங்களையும் போட்டுக்கொள்ளலாம்.

இப்படிச் சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்தால் நமக்கு இரங்குகிறது மனம்.

ஆனால் ஒருவகையில் இவர்களிடமும் தமிழ் பரவிக்கொண்டுதான்
இருக்கிறது. திருடும்போது அதைப் படித்துவிட்டுத் திருடுகிறார்கள்
அல்லவா?

சொந்தச் சிந்தனை இல்லையென்றால், திருடிக்கொண்டே மற்றும்
திருடியதைப் படித்துக்கொண்டே தம்   பெயரை விளம்பரப் படுத்திக்
கொண்டே இருக்கலாம்.

நல்ல பெயர் ஏற்பட்டு,விழாக்களில் பரிசுகள் பெற்றாலும் பெறலாம்.

நடக்கட்டும்.

யாமெழுதிய பலவற்றுக்கும் பதிவுகள் உள்ளன. ஆனால் அவற்றை
மறு வெளியீடு செய்வதற்குப் பழைய கணினிக் கருவிகளைச் சரிசெய்து ஓட்டவேண்டியுள்ளது. இதற்கும் பணம் மற்றும் நேரம்
தேவைப்  படுகிறது. முடியாதவை அல்ல.ஏறத்  தாழ 500 பழைய இடுகைகள்
இங்கு அழிக்கப்பட்டுள்ளன..  தெரியாமலில்லை .

திருடும் அறிவாளிகள்

தேம்பாவணி ,  இரட்சணிய யாத்திரீகம் சீறாப்புராணம் பற்றிய எம் இடுகைகள்
அழிக்கப் பட்டுள்ளன.  சீறாப் புராணத்திலிருந்து ஒரு பாடலைத் தான் எடுத்துக் காட்டியிருந்தேன்.  அதையே "காப்பி"  அடிப்பதில் என்ன இருக்கிறது?   அடுத்த
பாடலைப் படித்து  நீர்  எழுதி இருக்கலாமே!  அப்படிப் படித்தால்தானே  தமிழ்
வளரும் !  அடுத்த பாட்டுப் புரியவில்லை போலும் !