சனி, 24 டிசம்பர், 2016

தாக்கிக் கொலை விட ஊசியாற் சாவென

உயர்நிலை நல்லம்மை யார்மறை வெய்திய நேர்வதனால்
நயமன்றி வேறு கருதுவர்  அல்ல‌ராம் தொண்டர்சிலர்
கயமையர் தாக்கிக் கொலைவிட ஊசியாற் சாவெனவே
அயிருறு சொல்லுரை மேவினர் உண்மைக் கயல்படுமே.


மருத்துவர் சொல்லுக்கு மாற்ற முரைத்தல்
பொருத்தமில் ஏலா துலகு.

பொறுத்திருந்து பார்த்திடில் புன்மையர் உண்டேல்
உறுத்திமனம் உண்மை வரும்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

தங்கத்துக்குப் பெயர் வந்தது............

தங்கத்துக்குப் பெயர் வந்தது அது தகதக என்றிருப்பதனால் என்று
கூறுவர்.

தக ‍தக ‍>  தங்கம்.

இதிலொரு ஙகர ஒற்றும் மகர ஒற்றும் தோன்றியுள்ளது.

தக+ அம் = தங்கம்.

ஒப்புமை: பகு+ அம் =  பங்கம்.(  பொருள் :   பகுதி கெட்டது.)
பக்கம் என்பது மற்றொரு முடிபு.  பொருள் வேறுபடுவது.

செலவாகாமல் தங்கும் தகுதி உடையது தங்கம் எனப்பட்டது என்றும்
கூறலாம். பொன்னாகவும் தங்கமாகவும் சேர்த்துவைப்பதற்கு இதுவே
காரணம்.

வியாழன், 22 டிசம்பர், 2016

கைப்பணம் கள்ளமோ

கைப்பணம் நல்லதோ
கள்ளமோ  எப்போதும்
எண்ணார்பேர்  இந்தியர்  என் !

சட்டியோ ஓட்டை
எனின்என்ன  நன்குகொழுக்
கட்டைவெந்   தாலே சரி

கள்ளமே  ஆயினும்
காய்கறி கிட்டினால்
உள்ளமே பூரிப்  பவர் ..


என் = என்று சொல்க .