திங்கள், 19 டிசம்பர், 2016

உள் விகுதி பெற்ற சொற்கள்.



உள் என்பது ஒரு சொல்லில் இறுதிநிலையாக அல்லது விகுதியாய்
வரும். யாவரும் அறிந்த சொல் "கடவுள்" என்பது. கட என்பது பகுதி. அதனோடு உள் சேர்ந்து கடவுள் ஆயிற்று.

ஆற்றிலேதான் தூண்டில் போட்டு
அதிலே ஒரு மீன் பிடித்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காகும் கடவுளே!

என்ற கலைவாணரின் பாட்டில் கடவுள் என்ற  சொல் நன்கு பயன்பட்டுள்ளது.

ஆயுள் என்ற சொல்லிலும் உள் விகுதி உள்ளது.  ஆ= ஆவது.  அதாவது உயிருடன் இருப்பது. ஆவது உண்டாவதும் குறிக்கும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

என்ற பழமொழியில்  ஆவது  உயிருடன் வாழ்தல் குறித்தது. பிறத்தலும் குறிக்கும்.  ஆயுள் பின் ஆயுசு என்று பேச்சில் திரிந்தது.

உள் விகுதி பெற்ற சொறகள் பல. இங்கு பட்டியலிட முற்படவில்லை.
ஒன்றை மட்டும் கவனிப்போம்.

விக்குள் என்பதே அது. இது விக்கல் எனவும் படும்.

விக்குதல் : பட்டுக்கொள்ளுதல், நின்றுபோய் மாட்டிக்கொள்ளுதல்
குறிக்கும்.  இது உள் விகுதி பெற்று,  விக்குள் என்றும் வரும்.

விக்குதல் ‍ தடைப்ப்படுதல். விக்கினம் என்ற சொல், விக்கு+ இனம்=
விக்கினமாயிற்று.  விக்குதல் என்ற சொல்லிலிருந்து இதைத் தொலைவுப்படுத்த அது >"விக்ன" எனச் சுருங்கிற்று.

வை > வய > வயந்தம் > வசந்தம்

பன்றியும் வன்றியும்.

பகரம் வேண்டிய விடத்து, மொழிமரபு கெடாமல்,வகரமாகத் திரிதற்கு
உரியது ஆகும்.  இது பலமொழிகளில் காணப்படுவதொன்றே.

பன்றி என்பது வன்றி என்றும்
பண்டி என்பது வண்டி என்றும்

திரியும்.

வசந்து என்பது பசந்த் எனத் திரிதல் பாலதே, இது பிற மொழிகளில்
வரும்.

வை > வய > வயந்தம் > வசந்தம் எனக்காண்க.

வயந்தமாலை > வசந்தமாலை.

இதை முன் பல முறை விளக்கியிருந்தும் இடுகைகள் இலபோல்
தோன்றுகின்றன.

வை  > வய  : எப்படிப் பொருந்துகிறது?

சிந்தியுங்கள் .  வந்து விளக்குகிறேன். 

காட்டர சென்று

காட்டர சென்று கழறும் குழறுபடி
மீட்டெடுத் தாங்கு மேற்சட்டம் === கூட்டொழுங்கு
நின்று நிலைப்படவே நேரிய செயலமைப்பு
என்றியலும் மன்னோ இனி.

இதை இன்னொரு கவிதையுடன் வாசித்துப் பாருங்கள்.  அது இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_18.html

இவை இரண்டும் சில மாதங்களுக்கு முன் பாடப்பட்டவை .