புதன், 14 டிசம்பர், 2016

அகர - சகர வருக்கத் தொடக்கச் சொற்கள்

அகர வருக்கத் தொடக்கத் தில்  வருஞ் சொற்கள் சகர வருக்கத் தொடக்கமாக மாறுமென்பதைப் பல இடுகைகளில் தெரிவித்திருந்தோம். அவற்றுள் பல பிறர் கள்ள மென்பொருள்களால் அழிந்தன.

அடுதல் = சுடுதல்,தீயிலிடுதல்.  இது  அடு+ இ = அட்டி என்று வரும்.
பின்னர் இது  அட்டி > சட்டி ஆயிற்று. இங்ஙனம்தான் பல சொற்கள்
சகர வருக்க முதலாயின.

அடு > அட்டி > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.


இலிர்த்தல் என்பது சிலிர்த்தல் என்று மாறுதலினி ன்றும் இதை அறியலாம்.

அண்டு > சண்டு  > சண்டை   என்பதும் காண்க .
அடு > அடி என்பதிலிருந்து  அடுத்தலின் விளைவே அடி என்று கண்டுகொள்க. இதுபோலவே  அண்டுதலில் விளைவது  சண்டை .

செவ்வாய், 13 டிசம்பர், 2016

படகு கவிழ்ந்தது;

படகு கவிழ்ந்தது;
பதைத்தெழுந்து மிதந்தோரைப்
பாதுகாக்கவில்லை, நாட்டு அதிபர்.
பாவம் அதிபர்.
பாய்ந்து நீரில் வீழ்ந்து
நீச்சல் அடிக்கத் தெரியவில்லை போலும்.

இனிமேல் நாட்டு அதிபர்களுக்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டும்.
சான்றிதழ் இருந்தாலே
தேர்தலில் நிற்கலாம்,,,

தென்கொரிய அதிபர் நிலை

பேதம் how formed

ஒன்றிலிருந்து பெயர்ந்து இன்னொன்றுக்குப் போகிறோம்.  அப்போதுதான் அதிலிருந்து இது வேறானது என்பது தெளிவாகிறது.
இருந்தபடியே இருந்துவிட்டால் ஏது வேறுபாடு, எப்படிக்காணப்போகிறோம், கூறுங்கள்.

பெயர் : பெயர்தல்.
பெயர் >  பெயர்+ து+ அம் =  பெயர்தம் > பேர்தம் > பேதம்.

பேச்சில் :  நகம் பேந்துவிட்டது என்பர்.   பேர்   >   ‍ பே

பேதம் என்றால் பெயர்ந்து நின்ற நிலையில் உணரப்படுவது.

வேறு >  வேற்றுமை  மற்றும் வேறுபாடு என்பதும் அதுவாம்

இங்கு  பே  என்பது சிலரால்  bE-tham என்று  எடுத்தொலிக்கப்  படுவதால்  இது தமிழ்  அன்று எனத்  தவறாக உணரப்படுகிறது /