புதுசு, பழசு என்பன பேச்சு வழக்குச் சொற்கள். இந்தச் சொற்களில்
சு என்ற இறுதிநிலை வருவது காணலாம். மனம் என்ற சொல் அம் விகுதியில் முடிந்தாலும் பேச்சு வழக்கில் சு விகுதியும் வழங்கும். ஆகவே மனசு என்று வருமேனும் இது பேச்சு வழக்கிற்கே உரித்தானதாக வலம் வருகிறது. இலக்கணியர், மொழிநூல் மேடையினின்று நீங்கினவர்களாய், அதை விரும்பாவிடினும் எழுத்திலும் ஆங்காங்கு வரவே செய்வதுடன், பொண்ணு மனசு தங்கம் போன்ற தொடர்களில் மற்றும் திரைப்பாடல்களிலும் வரவே செய்கிறது. மொழி பலருக்கும் சொந்தமானது ஆதலாலும் இலக்கணியர் வாத்தியார்கள் ஆகியோரின் ஆதிக்கம் குறைந்த விரிந்த இடங்களில் அவ் வடிவம் நல்லபடியாய் வரும்.
என்றாலும் பரிசு முதலிய சொற்களில் சு விகுதி வருவதுடன் பரிசம் என வரும் சொல்லில் அம் விகுதி ஏற்கிறது.
இதுவே போல கணித்தல் என்ற வினையிலும் சு விகுதி வரும். சிலர் படித்தும்
வேலை இல்லாமல் இருப்பதுபோல் கணிசு என்ற சொல் வேலையில்லாமல் இருக்க அம் விகுதி பெற்ற கணிசம் என்பதில் அது சொல்லாக்க உதவியாக
உருத்து நிற்கிறது/.
கணிசமான உதவித் தொகை என்கையில் அது திகழ்கிறது .
நெரிசல் என்பதில் வரவில்லை?
இவளுக்கு ஒரே புடைசல் என்னும்போது சு விகுதி இல்லை ?
கரி + சு + அன் + அம் = கரிசனம்
பற்பல இடங்களிலும் தோன்றும் அழகான விகுதியன்றோ இது ..........