சிலர் ஒரு மாதிரியாக நடந்துகொள்வார்கள். எந்த அதிகாரத்திலும் இல்லை.
வெத்துவேட்டு. ஒரு படைத் தலைவர் ( தளபதி ) போல பிறருக்கு ஆணை இட்டுக்கொண்டும், உத்தரவுகள் கொடுத்துக்கொண்டும் உரத்த குரலில் பேசிக்கொண்டும் பிறரை அதட்டிக்கொண்டும் இருப்பார்கள். எப்போதும் அமைதியாகப் பேசிப்பழகும் நீங்கள் இவர்கள் போலும் ஒருவரிடம் மாட்டிக்கொண்டால் திகைத்துப்போவீர்கள். சிலவேளைகளில்
சொன்னபடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவீர்கள்.
இது ஒரு மன நோய் என்று வல்லுநர் கூறுவர். அதிகாரம் ஒன்றும் இல்லை ஆனால் ஏதோ இருப்பதாக ஓர் ஆணித்தரமான மனவுணர்ச்சி.
அது தவறு பொருத்தமற்றது என்று புரிந்துகொள்ளும் திறம் இல்லை. ஆனால் ஆளைப்பார்த்தால் தெரியாது. இயல்பான நிலையில் உள்ள ஒரு
மனிதன் போலவே தோன்றும். ஒரு மன நோய் வல்லுநரே இவரை
ஆய்ந்து நோயறிய இயலும்.
மன நோய் வல்லுநர்கள் நடத்திய ஒரு தொடர் சொற்பொழிவில் கலந்துகொண்டு அதன்மூலம் அறிந்தேன். பின் இதன் தொடர்பான சில
நூல்களிலும் படித்து இந்த அறிவைத் திறப்படுத்திக்கொண்டேன். மிகவும் சுவை தரும் நேரங்களாக இவற்றை அறிவது அமைந்தது.
சோதிடர்கள் அல்லது கணியர் சிலர் இதனை முன்னமே அறிந்திருந்தனர். அவர்கள் இதைச் சட்டலாட்டம் என்று கூறினர். எனவே மனிதரிடையே இத்தகைய நடத்தையும் ஒருவேளை அதற்கான காரணங்களும் சோதிடமணிகளாலும் உணரப்பட்டிருந்தன. சோதிடத்தின் மூலம் ஒருவர்
சட்டலாட்டம் உடையவரா என்று அறிந்துவிடலாம். அந்தமாதிரியான நடத்தை உடையவரின் ஒரு வாழ்கணிப்பினை (ஜாதகத்தை ) ப் படிக்கவும் அந்த நபரை அறியவும் நேர்ந்தது. ஆகவே இது மேனாட்டு மருத்துவர்கள் மட்டுமே அறிந்த ஒரு மன நோய் அன்று என்பதை உணர்ந்தேன்.
இப்போது சொல்லைப் பார்ப்போம்.
அடு > சடு > சட்டம்
இது சடு+ அம் = சட்டம். இங்கு டகரம் இரட்டித்தது. அம் விகுதி
பெற்றது.
அடு > சடு > சட்டல்.
இது சடு+ அல் = சட்டல். இங்கும் டகரம் இரட்டித்தது. ஆனால் அல்
விகுதி பெற்றது.
ஆட்டம் என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பொருட் சாயல்களைக் கொண்டுதரும் ஒரு சொல். " கோயிலுக்கு வந்த பொம்பளை என்ன இந்த ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறாள்" என்று பேசும்போது. ஆட்டம் என்பதற்குக் கலைமுறைப் பட்ட ஆட்டம் என்ற
பொருள் கொள்ளப்படாது. திரைவானில் மின்னும் நடனமணியின்
கவின்படு ஆட்டம் வேறு, இது வேறு. இதுவே ஒரு சட்டலாட்டமாகவும் இருக்கலாம்.
கோயிலில் இவள் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனால் ஆட்டம்
இருக்கிறது.
இவள் தன் வாழ்கணிப்பினை வரைந்து ஆய்ந்து பார்த்தாலோ ஒரு மன நோய் மருத்துவரின் ஆய்வுக்கு அவளை உட்படுத்தினாலோ உண்மை அறியலாம்.
கணியர் பெருமக்கள் கண்ட இந்தச் சட்டலாட்டம் என்ற பதம் அக்கரவரிசைகளில் காணமுடியவில்லை. எல்லா அகர வரிசைகளிலும் தேடி முடித்திட இயலவில்லை. நீங்களும் தேடிப்பாருங்கள். கிடைத்தால் எழுதி உதவுங்கள்.
There is a system problem in editing this post. The cursor starts jumping about. Will look into this later. For the moment read cautiously and read correction as necessary.
சட்ட லாட்டம்