சனி, 17 செப்டம்பர், 2016

அருந்ததியர் என்பது.........

அருந்ததியர் என்போர்  அதியமானுடன் தொடர்பு கொண்டோர்
என்று சிலர் கூறுவர்.

சில மன்னர்கள் ஒழுக்கத்து மேன்மை கொண்டோராய் விளங்கியிருந்தனர் என்று தெரிகிறது   மன்னருள் பலர்
பல மனைவியரையும்  மாற்றுத் தொடர்பு மகளிரையும் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது.  500 - 600 என்று
விரிந்த குழாம் உடைய மன்னர்களும்  வரலாற்றில் பலராவர்.

அத்துடன் கோயில்கள் பலவும் அவர்களால் நிறுவாகம் செய்யப் பட்டன. அவர்களுக்குத் தடைகள் யாதும் இல்லை.

அருந்ததியர் என்பது அருந்து+ அதியர் என்றும் பிரியும்.

சாப்பாடு அதிகம் உண்டோர் என்று இது பொருள்தரும்.

என்னவென்று தெரியவில்லை. மன்னர் அளித்த உணவு அதிகம்
பெற்று  உண்டவர் என்று கொள்ள, இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

க என்பது ய என்றும் திரியும்.  மகன் என்பதை மயன் என்று
சிலர் சொல்வது கேட்டிருக்கலாம்.

பாரி வள்ளல். meaning of name

பாரி வள்ளல் பற்றிச் சிறிது சிந்திக்கலாமே.  தமிழிலக்கியத்தால் போற்றப்படுவோன் குறு நில மன்னனாகிய
பாரி வள்ளல்.

நமது அக்கறைக்குரியது பாரி என்ற சொல்;.

பார் என்பது பூமி என்றும் பரந்த இடமென்றும் பொருள்படும்.
இவ்வுலக நோக்குடையவன், பரந்த சிந்தனைகள் உடையவன் என்றெல்லாம் பொருள் விரித்தல் கூடும்.  இவன் பேருக்கேற்ப இவனும் கொடைவள்ளலாய்த் திகழ்ந்தான்.

பார் > பாரி.

பார் என்பது பர(த்தல்)  என்ற அடியின் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

இதே அடியிலிருந்து திரிந்த ஏனைச் சொற்களை முன் இடுகைகளில் கண்டிபுற்றோம்.

சேனை என்ற சொல்

இப்போது சேனை என்ற சொல்லைக் கவனிப்போம்.

இது பல மொழிகளில் வழங்கும் சொல். சேனா என்றும் வழங்கும். தமிழில்
சேனை  என்று வழங்கும்.

பலர் சேர்ந்து போருக்குப் போவதே சேனை. எனவே சேர் என்பது சே என்று கடைக்குறைந்து திரிந்தது.

நை என்பது ஒரு விகுதியாகவும் இயங்கும்.  சேர்ந்து நைவித்தல் அல்லது நையச் செய்தல் எனற்பாலது நை என்றும் வரும்.

சே + நை =  சேனை ஆயிற்று.

இது தமிழ் மூலங்களை உடையது.

யானை, குதிரை காலாள் தேர் என்ற நான்கும் கலந்தது சேனை
எனவும் படும். இதுவும் சேர்தல் கருத்தேயாகும்.


இனிச் செரு என்னும் போரிடுதல் பொருள்தரும் சொல்லும் சேர் என்று திரியும்.

கரு > கார் என்று திரிதல் போலும் ஒரு திரிபே இது.

செரு என்பது சேர் ஆகி,  சேர் பின் சே என்று நின்று சொல்லைப் பிறப்பித்தது எனினும்  ஆகும்.

செரு > சேர் >  சே > சேனை

செருதலாவது போரிடுதல் .செருப்படை  செருபடை என்ற வழக்குகள் காண்க .

சே என்ற கடைக்குறைச் சொல்லினின்று பிறந்த இன்னொரு சொல்  சேமி என்பது .    சே > சேமி > சேமிப்பு .