சனி, 17 செப்டம்பர், 2016

பாரி வள்ளல். meaning of name

பாரி வள்ளல் பற்றிச் சிறிது சிந்திக்கலாமே.  தமிழிலக்கியத்தால் போற்றப்படுவோன் குறு நில மன்னனாகிய
பாரி வள்ளல்.

நமது அக்கறைக்குரியது பாரி என்ற சொல்;.

பார் என்பது பூமி என்றும் பரந்த இடமென்றும் பொருள்படும்.
இவ்வுலக நோக்குடையவன், பரந்த சிந்தனைகள் உடையவன் என்றெல்லாம் பொருள் விரித்தல் கூடும்.  இவன் பேருக்கேற்ப இவனும் கொடைவள்ளலாய்த் திகழ்ந்தான்.

பார் > பாரி.

பார் என்பது பர(த்தல்)  என்ற அடியின் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

இதே அடியிலிருந்து திரிந்த ஏனைச் சொற்களை முன் இடுகைகளில் கண்டிபுற்றோம்.

சேனை என்ற சொல்

இப்போது சேனை என்ற சொல்லைக் கவனிப்போம்.

இது பல மொழிகளில் வழங்கும் சொல். சேனா என்றும் வழங்கும். தமிழில்
சேனை  என்று வழங்கும்.

பலர் சேர்ந்து போருக்குப் போவதே சேனை. எனவே சேர் என்பது சே என்று கடைக்குறைந்து திரிந்தது.

நை என்பது ஒரு விகுதியாகவும் இயங்கும்.  சேர்ந்து நைவித்தல் அல்லது நையச் செய்தல் எனற்பாலது நை என்றும் வரும்.

சே + நை =  சேனை ஆயிற்று.

இது தமிழ் மூலங்களை உடையது.

யானை, குதிரை காலாள் தேர் என்ற நான்கும் கலந்தது சேனை
எனவும் படும். இதுவும் சேர்தல் கருத்தேயாகும்.


இனிச் செரு என்னும் போரிடுதல் பொருள்தரும் சொல்லும் சேர் என்று திரியும்.

கரு > கார் என்று திரிதல் போலும் ஒரு திரிபே இது.

செரு என்பது சேர் ஆகி,  சேர் பின் சே என்று நின்று சொல்லைப் பிறப்பித்தது எனினும்  ஆகும்.

செரு > சேர் >  சே > சேனை

செருதலாவது போரிடுதல் .செருப்படை  செருபடை என்ற வழக்குகள் காண்க .

சே என்ற கடைக்குறைச் சொல்லினின்று பிறந்த இன்னொரு சொல்  சேமி என்பது .    சே > சேமி > சேமிப்பு .

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

அரசன் ஏன் பட்டம் பதவிகள் வழங்கினான்?



அரசன் ஒரு தனியன். ஆட்சிக்கு வந்தபின் அவனுக்கும் மக்களில் சிறந்து நிற்பவர்களின் துணை தேவைப்படும்.  தனியனாய் இருந்து ஆளுதல் இயலாத காரியம்.  ஒத்துழைப்போரின் உதவிக்கைகள் அவனை வலிமை பெறச்செய்பவை.

தனக்கு உதவுவோருக்கு அவன் நிலம் வழங்கலாம்.  வழங்கிய நிலம்
கொடையாகவோ மானியமாகவோ வழங்கப்படலாம்.  மா என்பது அளவு என்று பொருள்படும். நியம் என்பது:  நில் > நி என்பது கடைக்குறை.
அம் என்பது விகுதி.  மா+ நி + அம் = மானியம்.  அளவாகத் தரப்படுவது.
இப்படித் தந்த நிலம் பெற்றுக்கொண்டவருக்கும் அவர்தம் பின்னோருக்கும்
என்றும் முழு உரிமையாக வழங்கப்படுவதுண்டு.

அவன் தந்த நிலங்கள் பெரும்பாலும் என்றென்றும் உரிமைப்பொருள் ஆதல்
போலவே அவன் பட்டம் பதவிகளும் வழங்கினான். எல்லோருக்கும் நிலம்
வழங்குவது இயலாமையால், வேறு வழிகளைக் கையாள நேர்வது இயற்கை.  இப்படி அவன் வழங்கிய பட்டம் பதவிகளும் பெற்றுக்கொண்டவனின் பின்னோருக்கும் நிலத்தைப்போலவே உரிமையாகும்படி வழங்கினான். அப்போதுதான் அவை நிலக்கொடைக்கு ஈடாக நிற்கமுடியும். ஆகவே பெறுகிறவனுக்கு "மன் துணை" என்ற பட்டம் தரப்பட்டால், அவனின் பின்னோரும் அதே பட்டத்தை அணிந்துகொள்ள‌
இயலுமாறு வழிவகைகள் செய்யப்பட்டன.

இப்போது மன்னர் ஆட்சி போய்விட்டது.இப்போதைய அரசுகள் இங்ஙனம் பரம்பரையாகப் பட்டங்களையும் பதவிகளையும் வழங்குவதில்லை. இவை மக்களாட்சி முறைக்கு ஒத்து வராதவை. ஒவ்வொரு மனிதனும் தன் அப்பன் பெற்றதையே வைத்து அழகு பார்த்துக்கொண்டிராமல் தானே முயன்று தனக்குரிய நிலையை அடையவேண்டும் என்று மக்களாட்சி முறை விரும்புகிறது. எனினும் மக்களாட்சி முறைக்கு எதிரான நிலையில், இன்று புண்ணியமில்லாத பட்டம் பதவிகளின் பெயர்கள் மட்டும் அலங்காரப் பொருள்கள்போல் பலராலும் பல நாடுகளிலும் அணியப்பெற்று நிற்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் சில நாடுகளில் மிகக் குறைந்துவிடினும், வேறு சில நாடுகளில்
இன்னும் முன்னணியில் உள்ளன.

அரபு வணிகர்களிடம் எழுத்தர்களாகவும் மேல்பார்வையாளர்களாகவும்
வேலைபார்த்தவர் மேனோன் அல்லது மேனன் எனப்பட்டார். இது
மேலோன் என்பதன் திரிபு.  அரபு வணிகர்களும் இந்த வேலைகளைச்
சேவைக் குடும்பங்களுக்கே வழங்கிவந்தனர். இக்குடும்பங்கள் சிறிது கலப்பும் அடைந்து அகமண முறைகளை மேற்கொண்டு, ஒரு சாதியாயினர். இப்போது இது ஒரு சாதிப்பட்டம்.  அரபு வணிகர்களிடம்
ஊழியம் பார்த்த முன் வரலாறு மறக்கப்பட்டுவிட்ட நிலையில்,  அதைப்
போட்டுக்கொள்வது ஒரு மேன்மை எண்ணத்தைத் தருவதாக இருக்கிறது.

மற்ற நாடுகளில் சாதிகள் இல்லையாகையால், இது போன்ற பெயர்கள்
குடும்பப் பெயர்களாகப் பயன்படுகின்றன. சாதிப்பெயராக உள்ளதைக்  குடும்பப் பெயராகப் பயன்படுத்தக்கூடாது என்ற மறுப்பும் உள்ளது.

இன்று படைத்தலைவராக உள்ளவரின் மகன் அப்பன் பதவிப் பெயரைத்  தான் அணிந்துகொள்வதைப்   பிறர் ஏற்பதில்லை.

to edit.