வெள்ளி, 16 செப்டம்பர், 2016

அரசன் ஏன் பட்டம் பதவிகள் வழங்கினான்?



அரசன் ஒரு தனியன். ஆட்சிக்கு வந்தபின் அவனுக்கும் மக்களில் சிறந்து நிற்பவர்களின் துணை தேவைப்படும்.  தனியனாய் இருந்து ஆளுதல் இயலாத காரியம்.  ஒத்துழைப்போரின் உதவிக்கைகள் அவனை வலிமை பெறச்செய்பவை.

தனக்கு உதவுவோருக்கு அவன் நிலம் வழங்கலாம்.  வழங்கிய நிலம்
கொடையாகவோ மானியமாகவோ வழங்கப்படலாம்.  மா என்பது அளவு என்று பொருள்படும். நியம் என்பது:  நில் > நி என்பது கடைக்குறை.
அம் என்பது விகுதி.  மா+ நி + அம் = மானியம்.  அளவாகத் தரப்படுவது.
இப்படித் தந்த நிலம் பெற்றுக்கொண்டவருக்கும் அவர்தம் பின்னோருக்கும்
என்றும் முழு உரிமையாக வழங்கப்படுவதுண்டு.

அவன் தந்த நிலங்கள் பெரும்பாலும் என்றென்றும் உரிமைப்பொருள் ஆதல்
போலவே அவன் பட்டம் பதவிகளும் வழங்கினான். எல்லோருக்கும் நிலம்
வழங்குவது இயலாமையால், வேறு வழிகளைக் கையாள நேர்வது இயற்கை.  இப்படி அவன் வழங்கிய பட்டம் பதவிகளும் பெற்றுக்கொண்டவனின் பின்னோருக்கும் நிலத்தைப்போலவே உரிமையாகும்படி வழங்கினான். அப்போதுதான் அவை நிலக்கொடைக்கு ஈடாக நிற்கமுடியும். ஆகவே பெறுகிறவனுக்கு "மன் துணை" என்ற பட்டம் தரப்பட்டால், அவனின் பின்னோரும் அதே பட்டத்தை அணிந்துகொள்ள‌
இயலுமாறு வழிவகைகள் செய்யப்பட்டன.

இப்போது மன்னர் ஆட்சி போய்விட்டது.இப்போதைய அரசுகள் இங்ஙனம் பரம்பரையாகப் பட்டங்களையும் பதவிகளையும் வழங்குவதில்லை. இவை மக்களாட்சி முறைக்கு ஒத்து வராதவை. ஒவ்வொரு மனிதனும் தன் அப்பன் பெற்றதையே வைத்து அழகு பார்த்துக்கொண்டிராமல் தானே முயன்று தனக்குரிய நிலையை அடையவேண்டும் என்று மக்களாட்சி முறை விரும்புகிறது. எனினும் மக்களாட்சி முறைக்கு எதிரான நிலையில், இன்று புண்ணியமில்லாத பட்டம் பதவிகளின் பெயர்கள் மட்டும் அலங்காரப் பொருள்கள்போல் பலராலும் பல நாடுகளிலும் அணியப்பெற்று நிற்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் சில நாடுகளில் மிகக் குறைந்துவிடினும், வேறு சில நாடுகளில்
இன்னும் முன்னணியில் உள்ளன.

அரபு வணிகர்களிடம் எழுத்தர்களாகவும் மேல்பார்வையாளர்களாகவும்
வேலைபார்த்தவர் மேனோன் அல்லது மேனன் எனப்பட்டார். இது
மேலோன் என்பதன் திரிபு.  அரபு வணிகர்களும் இந்த வேலைகளைச்
சேவைக் குடும்பங்களுக்கே வழங்கிவந்தனர். இக்குடும்பங்கள் சிறிது கலப்பும் அடைந்து அகமண முறைகளை மேற்கொண்டு, ஒரு சாதியாயினர். இப்போது இது ஒரு சாதிப்பட்டம்.  அரபு வணிகர்களிடம்
ஊழியம் பார்த்த முன் வரலாறு மறக்கப்பட்டுவிட்ட நிலையில்,  அதைப்
போட்டுக்கொள்வது ஒரு மேன்மை எண்ணத்தைத் தருவதாக இருக்கிறது.

மற்ற நாடுகளில் சாதிகள் இல்லையாகையால், இது போன்ற பெயர்கள்
குடும்பப் பெயர்களாகப் பயன்படுகின்றன. சாதிப்பெயராக உள்ளதைக்  குடும்பப் பெயராகப் பயன்படுத்தக்கூடாது என்ற மறுப்பும் உள்ளது.

இன்று படைத்தலைவராக உள்ளவரின் மகன் அப்பன் பதவிப் பெயரைத்  தான் அணிந்துகொள்வதைப்   பிறர் ஏற்பதில்லை.

to edit.






திருவள்ளுவர் பிராமணர்

திருவள்ளுவர் வழ்ந்ததாகக் கருதப்படும் ஈராயிரம் ஆண்டுகட்கு அணிமைத்தாகிய காலத்தின் முன் வாழ்ந்ததாகக் கருதத்தக்க 
வால்மிகி என்னும் தாழ்ந்த சாதியினர் என்றே கூறப்படுகின்றவர்
வால்மிகி   முனிவர். இவர் இராமாயணத்தைப் பாடினார்,    மீனவப் புலவன்
வேதவியாசன் மகாபாரதத்தைப் பாடினான். பாணன்  (பரையருள் ஒருவகை)ச் சாதியான் )  சமஸ்கிருதத்துக்கு முந்திய அதன் மொழிக்கூறுக்கு இலக்கணம் இயற்றினான்  இவர்கள் காலத்துச்  சாதிமுறைகள் இறுகிய நிலையில் இல்லை .  அகமணமுறைகள் வழக்கத்துக்கு வந்துவிடவில்லை. இவர்களைப் பிராமணர் என்பதே சரி.  இவர்கள் பிரம்மத்தை உணர்ந்ததனாலும்  அற்றை  நாட்களில்  அகமண முறை  இன்மையாலும்   பிராமணர் ஆயினர்.  கம்பன்  பண்டார  குலத்தான்.  ஓட்டக்  கூத்தன் பரையருள்  நெசவு தொழில் மேற்கொண்ட வழிவந்தோன். (கோலியன் )..  அரசர் காலத்தில் பதவி உயர்வென்பது  சாதி உயர்வு ஆகும் . 

 பழங்காலத்தவர்கள் பலர் பலவாறு மாறியிருத்தல் கூடும்.    நாட்டைப் புரட்டிப் போட்டு நடைபெற்ற போர்களலும் ஏனை நடவடிக்கைகளாலும் சாதிகளும் பிறழ்ச்சி அடைந்திருத்தல் இயல்பு .   புதிய சாதிகளும் உருவாகின.  இப்போதுள்ள சாதிகள் பல சங்க கலத்தில் இல்லாதவை.அப்போதிருந்த இயல்பான சாதிகளிலிருந்து இவை மேலெழுந்தவை என்பது
தெளிவு.

இவர்கள் பலருள்ளும்  பிராம்மணத் தந்தை உடையோர்  திருவள்ளுவரே . புலவர்கள் மற்றோரெல்லாம்  இயல்பு + இயல்பு.     திருவள்ளுவர் மட்டுமே  பிராமணர் +இயல்பு.   இந்திய மக்கள் கூறுகள்  பலவும்  10 முதல்   20 %    வரை பிராமணக்  கலப்புடையவை .(இது குருதி ஆய்வின் முடிவு.)   திருவள்ளுவர்  50% க்கு  மேற்பட்டவராகலாம்   என்று தெரிகிறது .  ஆகவே  திருவள்ளுவர் பிராமணர் என்பதே சரியாகும்.  மேலும் ஆதிஎன்பாளின் உறவுமுறைப்   பின்னோர் இப்போது மேல் சாதியினராய்  இருத்தல் கூடும்.

Notes:
(1)
Please note that the scientific reports do not use the word Brahmana. The author of the post uses
this word to fall in line with local  narratives concerning Thiruvalluvar.  The error of margin if any in using this term may not have affected the truth in the scientific reports. In the end it seeks to drive home the same point that the reports set out to prove but with a different set of narratives
(2)
”The fact that every population in India evolved from randomly mixed populations suggests that social classifications like the caste system are not likely to have existed in the same way before the mixture,”
 “Thus, the present-day structure of the caste system came into being only relatively recently in Indian history.”*
-- co–senior author Lalji Singh, 
currently of Banaras Hindu University, in Varanasi, India, and formerly of the CSIR-Centre for Cellular and Molecular Biology.

"But once established, the caste system became genetically effective,  Mixture across groups became very rare . An important consequence of these results is that the high incidence of genetic and population-specific diseases that is characteristic of present-day India is likely to have increased only in the last few thousand years when groups in India started following strict endogamous marriage,”

.. co–first author Kumarasamy Thangaraj, of the CSIR-Centre for Cellular and Molecular Biology, Hyderabad, India.**




வியாழன், 15 செப்டம்பர், 2016

ஆதி பகவன் மற்றும் பரையர்

பரை, பரையன், பரைச்சி என்பதன் ஓர் ஆய்வை இங்குக் கண்டீர்கள்.

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_10.html

மேலும் 2000 ஆண்டுகட்கு முன் சாதிப் பகுப்புகள் இற்றை இறுகிய நிலையில் இருக்கவில்லை. அகமண முறைகளும்  (endogamy ) ஏற்பட்டுவிடவில்லை.
ஆகவே மாப்பிள்ளை கொள்வதோ பெண்கொள்வதோ தங்கள் குலத்துக்குள்ளேதான் செய்யவேண்டும் என்ற கட்டு இருக்கவில்லை.  இப்போது மற்ற நாடுகளில் இருப்பதுபோல, மற்ற தகுதிகளைப் பார்த்துத்
திருமணம் செய்துகொண்டனர்.   (   a community  not resisting integration and completely merging with surrounding populations )

சாதி வேறுபடுதலால் ஏற்படும் முரண்பாடுகள் எவையும் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

1900 ஆண்டுகள் வரை, எந்த விதக்  கட்டுப்பாடுமின்றி, வெவ்வேறு குழுவினர் தங்களுக்குள் கொள்வனை கொடுப்பனை மேற்கொண்டனர்
என்று குருதி ஆய்விலிருந்து (டி என் ஏ ஆய்வு  blood analysis  )  நன்கு தெரிகிறது.
இந்த ஆய்வுகளின் சில குறிப்புகள் முன் இடுகைகளில் தரப்பட்டுள்ளன


எனவே பகவன் என்னும் பிராமணனும் ஆதியும் திருமணம் செய்துகொண்டிருந்தாலும். வெறுமனே சேர்ந்துகொண்டு வாழ்ந்திருந்தாலும் இதில் தற்கால சாதிமுறைக்  கட்டுப்பாடுகளுக்குரிய‌
அமைப்பியல்புகள் எவையும் இல. தீண்டாமைக் கட்டுக்களும் ஏதும் இல்லை.

ஒரு வள்ளுவக் குறு நில மன்னன் முன் ஒரு பிராமணன்  பாடிப் பரிசில்
பெற்றமையும் புற நானூற்றில் காணக்கிடக்கின்றது.

அதியமானுடன் ஒளவையார் கள்ளுண்டதையும் அவன் அவர்க்குத் தலை
வருடி அன்புகாட்டியதையும் புற நானூறு எடுத்துரைக்கிறது.

மிகப் பிற்காலத்து பழக்க வழக்களின் அடிப்படையில் அவை இல்லாப்
பழங்காலத்தை உணர்வது வழுவாகும் ,.

பரையரை ஒரு குடி  என்றே பழ நூல்கள் கூறுகின்றன .  குடி  எனின் குடிமகன் ./ குடிமக்கள் . நானிலங்களிலும் பரவி  (வியாபித்து )  வாழ்ந்தவன் பரையன் .குறிஞ்சியில் மட்டும் வாழ்ந்திருந்தால்  குறவன் , இப்படியே பிற நிலங்களிலும் கொள்க . பரவி நின்றவன் பரையன். பரையருள்  80 வகை இருந்தனர்  ஆதலின்  இவர்களில் பலர் வேறு சாதிகளாகி  இருத்தல் கூடும்.
அரசர்களே சாதிகளை நேமித்து நிறுவாகம் செய்தனர்.

will edit and introduce explanations as necessary later.


You may also like to read other posts of compatible and incompatible views:

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post.html.பார்ப்பனர் 

http://sivamaalaa.blogspot.com/2016/08/manu-and-his-edicts.html

http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_31.html

http://sivamaalaa.blogspot.com/2016/06/why-castes-were-institutionalised-in.html  சாதிகள் தோற்றம்

http://sivamaalaa.blogspot.com/2015/03/blog-post_73.html  கலந்துபோன  இந்தியர்கள்

Amendments made as outsiders seem to have interfered in this post,.  Will be reviewed.
 5.4.18